கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
00:00

கேள்வி: இணையத்திலிருந்து படங்களை அடிக்கடி காப்பி செய்து பயன்படுத்த வேண்டிய வேலையில் இருக்கிறேன். சில வேளைகளில், காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இணைய தளம் அல்லது பிரவுசரில் பிரச்னை இருக்குமா?
என். சுகப்பிரியா, திண்டுக்கல்.
பதில்:
நல்ல கேள்வி. ஏன், சில வேளைகளில், குறிப்பிட்ட சில படங்களை டவுண்லோட் செய்கையில், கம்ப்யூட்டர் முடங்கு கிறது? இந்த கேள்விக்கான பதிலைத் தரும் முன், சில பொதுவான தகவல்களை இங்கு தருகிறேன்.
ஒரு பட பைலை காப்பி செய்வது என்பது ("Copy Image”) கிளிப் போர்டில், அந்த இமேஜ் பைல் மட்டுமின்றி, படம் சார்ந்த டேட்டாவினையும் காப்பி செய்வதாகும். 24 பிட் அளவில் உள்ள ஒரு படமானது, 21,600 x 10,800 x 3 (24 bit image) = 699,840,000 டேட்டாவினைக் கொண்டிருக்கும். இது ஏறத்தாழ 700 எம்.பி. ஆகும். ஜேபெக் பைல் இந்த டேட்டாவினைச் சுருக்கிப் பதியும் வழிமுறையைக் கொண்டிருப்பதால், கம்ப்ரஸ் செய்யப்பட்ட பைலின் அளவு 6 எம்.பி. ஆக இருக்கும்.
கம்ப்யூட்டர் ஏன் முடங்குகிறது என்றால், அதன் ராம் மெமரியை இந்த 700 எம்.பி. இமேஜ் டேட்டா முற்றிலுமாக அடைத்துக் கொள்கிறது என்ற நிலை தான். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் 4 ஜி.பி.க்கும் குறைவாக ராம் மெமரி இருந்தால், மெமரியை மாற்றி அமைத்து பதிய இந்த டேட்டா முயற்சிக்கும். இதனால், கம்ப்யூட்டர் இயங்கும் வேகம் குறையும்; அல்லது முடக்கப்படும்.
அப்படியானால் தீர்வு என்ன? இமேஜ் பைல்களை காப்பி செய்திட கிளிப் போர்டினைப் பயன்படுத்த வேண்டாம். அதிக ராம் மெமரி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி, இதற்கான நேரமும் அதிகமாக தேவைப்படும். சில பிரவுசர்கள் இமேஜ் சார்ந்த டேட்டாவினை காப்பி செய்திடாமல், பைலை அப்படியே காப்பி செய்திடும். பயர்பாக்ஸ் பிரவுசரில் இந்த வசதி உண்டு.

கேள்வி: கூகுள் மேப் பார்க்கும்போது, சில தவறுகள் இருப்பதாகத் தெரிகிறது. இவற்றை எப்படி நாம் அதன் கவனத்திற்குக் கொண்டு வருவது? அல்லது நாமே திருத்தங்கள் ஏற்படுத்த முடியுமா?
ஆ. சிவராஜ், சென்னை.
பதில்:
சாட்டலைட் வழி காட்டப்படும் கூகுள் மேப்பில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் தவறு எத்தகையது என விளக்கமாக விவரிக்கவில்லை. கூகுள் நிறுவனத்தின் இணையப் பக்கம் சென்று, தொடர்பு கொள்வதற்கான வழிமுறையைக் காணவும். நீங்களே திருத்தங்களை ஏற்படுத்த நிச்சயமாய் முடியாது. நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டவுடன், உங்களுக்கு இன்னொரு தகவல் தர எண்ணுகிறேன். http://www.openstreet map.org/#map=4/38.01/95.84 என்ற இணைய தளம் சென்று பார்க்கவும். இங்கு கிடைக்கும் ஓப்பன் சோர்ஸ் மேப்பில், நீங்கள் திருத்தங்களை ஏற்படுத்தலாம். Open Street Map என அழைக்கப்படும் இது, பூமியில் வாழும் ஆர்வம் கொண்ட பலரால் உருவாக்கப்பட்டது.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்க அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என சில குறிப்புகளை நச் என்று சொல்லுங்களேன்.
ஆ. பாண்டியன், மதுரை.
பதில்
: நச் என்றால் சுருக்கமாக தலையில் அடித்தால் போல் என்று எடுத்துக் கொண்டு கீழே சில டிப்ஸ் தருகிறேன்.
1. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் "Adjust for best performance” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
2. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.
3. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.
4. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும் போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.
5.ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
6. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் என் லேப்டாப்பில் இயங்குகிறது. இதில் டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ் ஆகியவை உள்ளன. இதற்குப் பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் பயன்படுத்துவது எப்படி? வழிகளைக் காட்டவும்.
தே. மாவடியான், புதுச்சேரி.
பதில்
: எளிதாக இதனை மேற்கொள்ளலாம். மெட்ரோ திரையில், டெஸ்க்டாப் என்பதில் தட்டவும். உடன் நேரடியாக, நம் அனைவருக்கும் பழக்கமான டெஸ்க்டாப் திரை தரப்படும். அல்லது விண்டோஸ் கீயுடன் ஈ கீ அழுத்தவும். இப்போது திரையில் தோன்றும் ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் காட்டப்படவில்லை எனில், சர்ச் பாக்ஸ் சென்று, அதில் Desktop என டைப் செய்திடவும். திரையின் இடது பக்கமாக டெஸ்க்டாப் ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்திடவும். ஸ்கிரீன் கீழாக, இந்த புரோகிராமினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் பின் செய்வதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். இனி ஸ்டார்ட் ஸ்கிரீனில் டெஸ்க்டாப் டைல் காட்டப்படும்.

கேள்வி: MIME என்பதன் செயல்பாடு என்ன? முன்பு ஒருமுறை நீங்கள் விவரித்த நினைவு உள்ளது. மீண்டும் விளக்கமாகத் தரவும். என் கல்லூரியில் இது குறித்து சரியான விளக்கம் தரவில்லை.
ஆ. கௌரிசங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்
: MIME என்பது Multipurpose Internet Mail Extensions என்பதன் விரிவாக்கமாகும். மின் அஞ்சல் அனுப்புவது குறித்த தொழில் நுட்ப சொல். இது இணையம் சார்ந்த ஒரு வரையறையைக் குறிக்கிறது. டெக்ஸ்ட் இல்லாத, ஆஸ்க்கி குறியீட்டில் இல்லாத கேரக்டர்களை அமைத்து இணைக்க இந்த வழி பயன்படுகிறது. இந்த தொழில் நுட்பம் வரும் முன்னர், டெக்ஸ்ட்டை பைனரிக்கு மாற்றி, மாற்றியதை இமெயில் டெக்ஸ்ட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும். பின்னர், அதனைப் பெறுபவர் மீண்டும் அதனை மாற்றி பெற்றுப் புரிந்து கொள்வார். ஆனால், மைம் தொழில் நுட்பமுறை வந்த பின்னர், டெக்ஸ்ட்டுடன் படங்கள், வீடியோ பைல்களை இணைத்து அனுப்புவது எளிதாக அமைந்தது.

கேள்வி: ஸ்வாப் பைல் என்பது எதற்காக நடைபெறுகிறது? நாமே பைல்களை மாற்றி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாமா? விளக்கம் தரவும்.
எஸ். ராமநாதன், செய்யாறு.
பதில்
: நல்ல வேளை, கேள்வியாகக் கேட்டீர்கள். இதனைத் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ராமநாதன். சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்று இயங்குகையில், அது ராம் மெமரியில் வைத்து இயக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு புரோகிராமிற்கு, அதிக இடம் தேவைப்படுகையில், ராம் மெமரியில் இடம் குறைவாக இருந்தால், அது பிரச்னையைச் சந்திக்கிறது. உடனே, இந்த இடப் பங்கீட்டினை நிர்வகிக்கும் Virtual Memory Manager VMM, ராம் மெமரியில் இடம் எங்கேனும் உள்ளதா என்று ஸ்கேன் செய்து பார்க்கும். இடம் கிடைக்காத நிலையில், குறிப்பிட்ட புரோகிராமினை ஸ்வாப் பைல் (Swap File) என்ற முறையில், அதனை இயக்க ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து கொள்கிறது. அங்கிருந்து அது இயக்கப்படும். ஆனால், இது கம்ப்யூட்டரின் இயக்கத்தின் வேகத்தைக் குறைக்கும்.

கேள்வி: நான் இடது கைப் பழக்கம் உள்ளவன். எனக்கேற்றபடி, நான் விரும்பும்படி ஹாட் கீகளை அமைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், என்ன மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்?
என்.கோகிலா, கோவை.
பதில்:
நல்ல கேள்வி. இதற்கான பதில் உங்களைப் போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, தங்கள் விருப்பப்படி செயல்பட விரும்பும் அனைவருக்குமே பயன்படும். இதற்கு விண்டோஸ் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் செய்திட முடியாது. இணையத்தில் இதற்கென பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில், ஹாட் கீஸ் (Hotkeyz) என்ற புரோகிராம் எளிதாகவும், சிறந்த முறையிலும் ஹாட் கீக்களை அமைக்க உதவுகிறது. இதற்கான தள முகவரி http://www.skynergy.com/hotkeyz.html. இதனைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டு இயக்கவும். அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, கண்ட்ரோல் பேனல் என்ட்ரிகளைக் கொண்டு வர, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திட போன்ற வேலைகளுக்கான ஷார்ட் கட் கீகளை நாமே செட் செய்திட வழி தருகிறது. இந்த புரோகிராமினை ஸ்கை எனர்ஜி என்ற நிறுவனம் இணையத்தில் இலவசமாகத் தருகிறது.
வழக்கமான வேலைகள் மட்டுமின்றி, ரீசைக்கிள் பின்னில் உள்ள நீக்கிய பைல்களை முழுமையாக நீக்க, சிஸ்டத்தை ஹைபர்னேஷன் நிலைக்குக் கொண்டு செல்ல என வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளுக்கும் இந்த புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Felix - Edappadi,இந்தியா
26-ஜூன்-201410:42:26 IST Report Abuse
Felix கூகிள் மேப் எடிட் ல் போயி நமது ஜிமெயில் அக்கவுண்ட் மூலம் எடிட் செய்யலாம்
Rate this:
Cancel
vennilamathi - madurai,இந்தியா
23-ஜூன்-201418:15:40 IST Report Abuse
vennilamathi என் கேள்வி: நான் விண்டோஸ் 7 -இல் ms office 2010 பயன்படுத்துகிறேன். ms office 2003 பயன்பாட்டில் இருந்த என் கம்ப்யூட்டரில் 6 மாதங்களுக்கு முன்பு ஒருவர் மேற்கண்ட விண்டோஸ் 7 -இல் ms office 2010 மாற்றிக்கொடுத்தார். அவரை இப்போது தொடர்புகொள்ள இயலாத நிலை. இப்போது என் பிரச்சினை என்னவென்றால், வேர்ட் திறக்கும்போது PRODUCT ACTIVATION FAILED என்று சிவப்பு நிறத்தில் எச்சரிக்கிறது. CHANGE PRODUCT KEY என்ற பாக்ஸ் வந்து நிற்கிறது. இதைப் பற்றி விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். அதை சரி எவ்வாறு சரி செய்வது என வழி காட்ட வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X