கனிம ஆய்வு காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷல் லிமிடெட் என்ற நிறுவனம் எம்.இ.சி.எல்., என்ற சுருக்கமான பெயரால் நம்மால் அறியப்படுகிறது. 1972ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இந்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம வள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
கனிம வள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள போர்மேன் மற்றும் டெக்னீசியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: எம்.இ.சி.எல்., நிறுவனத்த்தில் போர்மேன்-டிரில்லிங் பிரிவில் 39 காலியிடங்களும், டெக்னீசியன் டிரில்லிங் பிரிவில் 10 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மூன்று வருட டிப்ளமோ படிப்பை மெக்கானிகல் இன்ஜினியரிங் அல்லது டிரில்லிங் இன்ஜினியரிங்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் போர்மேன் - டிரில்லிங் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பை மெக்கானிக், இ.எம்.எம்., டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், பிட்டர் ஆகிய பிரிவுகளில் முடித்தவர்கள் டெக்னீசியன் டிரில்லிங் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு பதவிகளுக்குமே பணியனுபவம் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/-க்கான டி.டி.,யை Mineral Exploration Corporation Ltd என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Deputy General Manager (P&A),
Mineral Exploration Corporation Limited,
High Land Drive Road,
Seminary Hills, Nagpur-440006
(Maharashtra State)
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.07.2014
இணையதள முகவரி: www.mecl.gov.in/PDF/Advt0214.pdf

Advertisement

 

மேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X