கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
00:00

கேள்வி: ஏன் 32 ஜிபி ப்ளாஷ் ட்ரைவ் என அமைக்கிறார்கள். 30, 40 என அமைத்தால் என்ன? நண்பரிடம் கேட்டதற்கு, பைனரி எண் என்பதால் அப்படித்தான் வரும் என்கிறார். இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?
-என். மாலதி, திருத்தங்கல்.
பதில்:
உங்கள் நண்பர் கூறுவது சரியே. பைனரி என்பதால், கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் எண்கள் 32, 256, 512, 1024 என இருக்கின்றன. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். நாம் அனைவரும் டெசிமல் சிஸ்டம் வழி எண்களைப் பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள். 0 முதல் 9 வரை. இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம். ஆனால், கம்ப்யூட்டர்கள் வேறு வகையில் எண்களைக் கையாள்கின்றன. இரண்டே இரண்டு இலக்கங்கள் தான்; அவை 0 மற்றும் 1. கம்ப்யூட்டர் எதனைச் செயல்படுத்தினாலும், டெக்ஸ்ட், சொல், கடிதம், படங்கள் என எதுவாக இருந்தாலும், அவை இந்த இரண்டு எண்களால் தான் குறிப்பிடப்படுகின்றன. கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை 0 என்பது “off” நிலை, 1 என்பது “on” நிலை. இதனைத்தான் பைனரி (binary) எனக் குறிப்பிடுகின்றனர். நீங்கள் புரோகிராமிங் அல்லது கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து தீவிரமாகக் கணினியில் செயல்பட்டால் தான், இது குறித்து அதிகமாக அறிந்து செயல்பட வேண்டியதிருக்கும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
டெசிமல் சிஸ்டத்தில், 1x10 = 10, 10x10=100, 100x10= 1000 எனத் தொடர்கிறோம். பைனரியில் 1x2=2, 2x2=4, 4x2=8, 8x2=16, 16x2=32 எனச் செல்ல வேண்டும். கீழே இந்தக் கட்டத்தினைக் கவனியுங்கள். இது 10011 என்ற பைனரி எண் அமைப்பை விவரிக்கிறது.
16(8×2) - 1
8(4×2) - 0
4(2×2) - 0
2(1×2) - 1
1 - 1
ஒரு கட்ட்த்தில் “1” இருந்தால் அது “on” நிலை. அதன் மதிப்பு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி இங்கே 1+2+16 எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆக மொத்தம் 19. பைனரி எண் 10011 மதிப்பு 19. அதாவது 19 என்ற எண் மதிப்பைக் கம்ப்யூட்டருக்குத் தர 10011 என்ற பைனரியைத் தர வேண்டும்.
ஒரு டெசிமல் எண்ணை எடுத்து, அதனைப் பைனரி எண்ணாக மாற்றினால், இது இன்னும் சற்று தெளிவாகப் புரியும். எடுத்துக் காட்டாக 55 என்ற டெசிமல் எண்ணை எடுத்துக் கொள்வோம். பைனரி மதிப்பு எண்களில் (1,2,4,8,16,32,64) எந்த எண் இதனைக் கொள்ளும் மிகப் பெரிய எண் எனக் காண வேண்டும். அது 32. இந்த மதிப்பில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இனி 55லிருந்து இந்த 32 ஐக் கழிக்க நமக்கு 23 கிடைக்கிறது. இதனைக் கொள்ளும் மிகப் பெரிய எண் 16. இதில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இப்படியே ஒவ்வொரு மதிப்பைக் கணக்கிட்டு அதற்கான பைனரி எண்ணில் 1 என்ற மதிப்பை அமைக்கவும். இப்படியே 0 கிடைக்கும் வரை அமைக்கவும்.கீழ்க்காணும் வகையில் “55ன்” பைனரி அமையும்.
32(16x2) - 1
6(8×2) - 1
8(4×2) - 0
4(2×2) - 1
2(1×2) - 1
1 - 1
அதாவது டெசிமல் எண் 55ன் பைனரி எண் 110111. இப்போது பைனரி குறித்து அறிந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு 32 ஜிபி, 128 ஜிபி என ஏன் இருக்கிறது என்பது புரியும்.

கேள்வி: நீங்கள் ஒருமுறை எம்.எஸ். ஒன் ட்ரைவ் குறித்து எழுதுகையில், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் நம் பைல்களைச் சேமித்து வைக்க, ஒன் ட்ரைவ் நல்லது என எழுதியிருந்தீர்கள். அப்படியானால், வேறு சாதனங்களில் இருந்து நம் பைல்களைப் பெறுவது எப்படி? மேலும் ஒன் ட்ரைவ் பாதுகாப்பானதா?
- எம். சுகுமாரன், சென்னை.
பதில்:
ஒன் ட்ரைவிலுள்ள பைல்களை அணுகுவது மிக எளிது. உங்களுக்கு ஒன் ட்ரைவ் அக்கவுண்ட் ஒன்று இருந்தால், விண்டோஸ் கம்ப்யூட்டர் கை வசம் இயக்க இருந்தால், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும் ஒன் ட்ரைவில் உள்ள பைல்களை நீங்கள் எடுத்து இயக்கலாம். அது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ் போல இயங்கும். டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் போன்கள் வழியாகவும் இதே செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். பைல்களின் பாதுகாப்பினைப் பொறுத்தவரை, ஒன் ட்ரைவ் பாதுகாப்பானது என்று இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று எதனைச் சொல்கிறீர்கள்? இன்றைய உலகில், நம் வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டுகள், மின் அஞ்சல் தகவல்கள் என நம் பெர்சனல் தகவல்கள் அனைத்துமே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் பல்வேறு இணைய சர்வர்களில் தானே உள்ளன. இவற்றின் பாதுகாப்பு தன்மை குறித்து நீங்கள் எப்படி நிறைவு பெற்றுள்ளீர்களோ, நம்பிக்கை கொண்டுள்ளீர்களோ, அதே போல எம்.எஸ். ஒன் ட்ரைவ் குறித்தும் நம்பிக்கை கொள்ளலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். என் ஹார்ட் டிஸ்க்கில் 374 ஜிபி காலி இடம் உள்ளது எனத் தெரிவிக்கிறது. என் மின் அஞ்சல் கடிதங்களை நான் பெற முடிகிறது. ஆனால், அனுப்ப இயலவில்லை. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான தீர்வு என்ன என்று காட்டவும்.
- எம். சுதந்திரா தேவி, கோவை.
பதில்:
உங்களால் உங்களுக்கு வரும் மின் அஞ்சல் கடிதங்களைப் பெற முடிகிறது; ஆனால், அனுப்ப முடியவில்லை என்றால், உங்கள் அஞ்சல்களை வெளியே அனுப்பும் சர்வர் (outgoing server (SMTP) settings) அமைப்பில் தான் சிறிய அளவில் தவறு உள்ளது. முகவரி அமைப்பதில் சிறிய அளவில் டைப்பிங் தவறுகளாகக் கூட அது இருக்கலாம்.
உங்கள் மின் அஞ்சல் சேவை தரும் புரோகிராமின் அக்கவுண்ட் பிரிவிற்குச் செல்லவும். அதில் ஏற்கனவே அமைக்கப்பட்ட outgoing server அமைப்புகள் ஆகியவற்றை சோதனை செய்திடவும். இதில் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், மின் அஞ்சல் தரும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். அல்லது அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவினைத் தொடர்பு கொள்ளவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றில், இன்னொரு வேர்ட் டாகுமெண்ட் பைலை இணைப்பது எப்படி? தனியாகப் பின்னால் இணைப்பாகத்தான் அமைக்க வேண்டுமா? சிறிய சிறிய டாகுமெண்ட் பைலை, தேவைப்படின் ரெபரன்ஸ் வசதிக்காக இணைக்க வேண்டியுள்ளது. வழி காட்டவும்.
- என். சுரேந்திரன், திருப்பூர்.

பதில்: மிக எளிதாக இணைக்கலாம். எந்த இடத்தில் இணைக்க வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும். அடுத்து ரிப்பனில் Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். தொடர்ந்து டெக்ஸ்ட் (Text) குரூப்பில், Object tool வலது புறமாக உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். அடுத்து, File ஆப்ஷனில், Text என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Insert File என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸ், வழக்கமான பைல் திறப்பதற்கான டயலாக் பாக்ஸ் மாதிரி இருக்கும். இதிலிருந்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.

கேள்வி: அடிக்கடி டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என நீங்கள் எழுதி வருகிறீர்கள். ஆனால், அது குறித்த விபரங்களோ, விளக்கமோ தருவதில்லை. இது எதனைச் சேர்ந்தது? சற்று விளக்கமாகக் கூறவும்.
- என். கண்ணகி, புதுச்சேரி.

பதில்: டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதன் சுருக்கமே டாஸ் ஆகும் (DOS - Disk Operating System).இது பெரும்பாலான நேரங்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே (MS-DOS or Microsoft Disk Operating System) குறிக்கிறது. முதன் முதலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய ஐ.பி.எம். நிறுவனக் கம்ப்யூட்டர்களை ஒத்த கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்கியது. பல ஆண்டுகளுக்கு முன்னால், இது ஒன்றுதான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் இயங்கியது. இது முற்றிலும் டெக்ஸ்ட் மற்றும் கட்டளைகள் மட்டுமே அடங்கிய சிஸ்டமாகும். கம்ப்யூட்டர் பயன்படுத்திய சாதாரணமானவர்களுக்கு இது அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனை இயக்கியவுடன் இது ஒரு கட்டளையை எதிர்பார்க்கும். பின் நாளில், இதன் மீது அமர்ந்து இயங்கும் சிஸ்டமாக விண்டோஸ் உருவெடுத்தது. இப்போது இயங்கும் அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. சில தனி சிறப்பு செயல்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. டாஸ் சிஸ்டம், நம் ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஒரு காலத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாமல், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ப்ளாப்பி டிஸ்க்கில் வைத்து இயக்கி, ராம் மெமரியில் ஏற்றிவிட்டு, லோட்டஸ் மற்றும் பேசிக், வேர்ட் ஸ்டார் போன்ற புரோகிராம்களை அடுத்தடுத்த பிளாப்பி டிஸ்க்கில் வைத்து செலுத்தி பயன்படுத்தி வந்தனர்.
விண்டோஸ் 7 சிஸ்ட்த்தில், Start, All Programs, Accessories எனச் சென்று Command Prompt தேர்ந்தெடுத்தால், டாஸ் சிஸ்டத்தின் கட்டளைப் புள்ளி கிடைக்கும். பின்னர் டாஸ் சிஸ்டம் கட்டளைகளைக் கொடுக்கலாம். விண்டோஸ் 8 மற்றும் 8.1ல், command prompt எனத் தேடல் கட்ட த்தில் கொடுத்தால், டாஸ் இயக்கம் கிடைக்கும். இதன் கட்டளைகள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன. டிஸ்க் கிராஷ் ஆனால், பார்மட் செய்யப்பட வேண்டும் என்றால், நாம் டாஸ் இயக்க கட்டளைகள் மூலம் எளிதாக வேலைகளை மேற்கொள்ளலாம். உங்கள் ஆர்வத்திற்காக, சில டாஸ் கட்டளைகளை இங்கு தருகிறேன்.
CD - அப்போதைய டைரக்டரியை மாற்ற
COPY - பைல்களை காப்பி செய்திட
DEL - பைல்களை அழித்திட
DIR - டைரக்டரியில் உள்ள அனைத்தையும் பட்டியலிடும்
HELP - எம்.எஸ். டாஸ் கட்டளைகள் குறித்து விளக்கம் தரும்
MKDIR - புதிய டைரக்டரி உருவாக்க
RD - டைரக்டரியை நீக்க
REN - பைலுக்கு புதிய பெயர் அளிக்க.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X