சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2014
00:00

பழப்பயிர்கள் : தமிழக உழவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வீரிய இரகங்களை உருவாக்குவதற்கான ஆய்வுகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் சப்போட்டா இரகங்களான கோ.2, பி.கே.எம்.1, கோ.7, நெல்லி ரகம் பி.எஸ்.ஏ. அருப்புக்கோட்டை சீதா-1 இரகம் ஆகியவை இந்திய அளவில் பெரும் பேரினை பெற்றுள்ளன.
பப்பாளியில் சிகப்பான சதைப்பற்றுள்ள உயர் விளைச்சல் இரகமான கோ.8 கடந்த ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இது பழமாக உண்பதற்கும் வணிக ரீதியில் பப்பாளி பால் எடுப்பதற்கும் உகந்தது. இவை தவிர நச்சுயிர் நோய் எதிர்ப்பு இரகங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்பங்களைப் பொறுத்த வரை மா, வாழை, சப்போட்டா போன்ற பழப்பயிர்களில் அடர்நடவு முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 25-40 சதவிகிதம் வரை அதிக விளைச்சலைப் பெற வாய்ப்புள்ளது. இது தவிர, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக் கவாத்து செய்வதன் மூலமாகவும், அதனைத் தொடர்ந்து பேக்லோப்யூட் ரசால் என்னும் வளர்ச்சி ஊக்கியினை மரத் திற்கு 0.75 கிராம் என்ற அளவில் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப் பருவ காய்களைப் பெறலாம். வாழையில் குலைக்கு 2 சதம் அளவில் துளையிடப்பட்ட சூரியஒளி உட்புகக் கூடிய வெண்ணிற பாலிதீன் உறைகளை கொண்டு கடைசி சீப்பு வெளிவந்தவுடன் வாழைத்தாரை மூடுவதன் மூலம் எவ்வித சேதாரம், மாசு மரு இல்லாத பழங்களைப் பெற முடியும். இதன் மூலம் உள்ளூர், வெளியூர் சந்தைகளில் பழங்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் வாழையில் வாடல்நோய் நூற்புழு தாக்குதலுக்கு எதிர்ப்புக் கொண்ட வணிக ரீதியான இரகங்களை உருவாக்குவதில் இப்பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
திராட்சையில் அதிக வருமானத்தைத் தரக்கூடிய "ரெட் குளோப்' இரகத்தில் அதிக விளைச்சலையும் தரமான குலைகளையும் பெருவதற்கான கட்டுக் கோப்பு சாகுபடி முறைகளை உருவாக்குவதில் பழத்துறை தீவிரமாக ஈடு பட்டுள்ளது. தேனிக்கு அருகே ஆனமலையான்பட்டியில் ஒருபுதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள் ளது. (தகவல் : முனைவர் கு.இராமசாமி, துணைவேந்தர், த.வே. பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.)
இதய நோய்க்கு ஒரு கை மருந்து : லண்டனிலிருந்து மப்டி முகமது கன்தார்வி என்பவர் பாகிஸ்தானிலுள்ள சாஹிவால் என்ற இடத்திற்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ கிராபி செய்யப்பட்டது. இதயத்தில் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மாதத் திற்குப் பின் அறுவை சிகிச்சைக்கான நாளும் குறிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும் ஹகீம் ஒருவர் நான் ஒரு கை மருந்து சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் சரியாகும் என்று கூறியுள்ளார். அவரே தயாரித்து தந்துள்ளார்.
ஒரு மாத்திற்கு பின் பாகிஸ்தானில் லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன் குறிப்பிட்டிருந்த தினத்தில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். வைப்புத்தொகையாக ரூ.2,25,000/- கட்டப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் வைத்திய சோதனை நடத்திய மருவத்துவர்களுக்கு ஆச்சரியம். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த மூன்று அடைப்புகள் எங்கே என்று வியப்பில் இருந்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சைக்காக வந்தவரிடம் ஒருமாத இடைவெளியில் வேறு ஏதாவது மருந்து சாப்பிட்டீர்களா என்று கேட்டுள்ளார். இவரும் தான் சுவைத்து சாப்பிட்ட ஜூஸ் பற்றி கூறியுள்ளார். வியப்புடன் வைப்புத் தொகையை திருப்பி தந்து வாழ்த்தி அனுப்பியுள்ளனர்.
மருந்தின் சேர்மானங்களும், செய்முறையும் :
தேவையானவை - எலுமிச்சை சாறு - 1 கப், இஞ்சிச்சாறு - 1 கப், வெள்ளைப்பூண்டுச் சாறு - 1 கப், ஆப்பிள் சிடார் வினிகா - 1 கப், தேன் - 3 கப்.
இந்த 4 பொருட்களையும் (தேனைவிடுத்து) மெதுவாக நெருப்பில் சுமார் அரைமணி நேரத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கப் அளவு வற்றி 3 கப் அளவில் வரும்போது இறக்கி வைத்து நன்கு ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறியதும் அத்துடன் 3 கப் தேனை சேர்த்து சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். இதனை தினமும் காலை உணவிற்கு முன் 3 தேக்கரண்டி உட்கொள்ள வேண்டும். அப்போது நரம்புகள் வழியே ஏதோ ஒரு இதமான வெப்பம் உருவாகி செல்வது போல் இருக்கிறது. உடம்பு தெம்பாக இளமையாக இருக்கிறது. விருப்பமுள்ளவர் பயன்படுத்தலாம். (தகவல் : எஸ்.பழனிச்சாமி, ஸ்பைசஸ் இந்தியா, மணம்-27, சுகம் 5, மே.2014, ஸ்பைசஸ் ரோடு, Sugandha Bhavan, P.Box. 2277, Palari Vattam P.O., Cochin - 682 025). போன்: 0484 - 2336010 - 616.
இணைய முகவரி : www.indianspices.com.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X