விண்டோஸ் 7 விந்தைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
00:00

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளிகளிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undo cumented Features எனச் சில உண்டு. இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அவற்றை Easter Eggs என அழைப்பார்கள். அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்தும் Easter Eggs குறித்தும் இங்கு காணலாம்.

சில ஷார்ட்கட் கீகள்
1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.
3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும்.
திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:
விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.
அதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.

பிரச்னைகளை மற்றவருக்குத் தெரிவிக்க
கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்டது என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படிச் சொல்வது? பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்டது என நமக்குத் தெரியுமா? இதனை பதிவு செய்திடும் வகையில் டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. இந்த டூலின் பெயர் Problems Step Recorder. இதனை அணுக, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, தேடல் கட்டத்தில் “Problem Record” என டைப் செய்து எண்டர் தட்டவும். அடுத்து, Record steps to reproduce a problem என்பதில் கிளிக் செய்திடவும். இது Problem Steps Recorder டூலை இயக்கத் தொடங்கும். உடன் Start Record என்பதில் அழுத்த, நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும், டெஸ்க் டாப்பில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு முறை மவுஸால் கிளிக் செய்திடும்போதும், டெஸ்க்டாப் திரை, ஸ்கிரீன் ஷாட் ஆகப் பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் “problem steps” என்றபடி வரிசையாக, தானாகவே பதிவு செய்யப்படும். பதிவு செய்தது போதும் என்று அதை நிறுத்தினால், பைலை ZIP file ஆக சேவ் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அதே போல் பதிவு செய்திடலாம். பின்னர், தேவைப்படுகையில், இதனை விரித்து, ஸ்கிரீன் ஷாட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, எப்போது பிரச்னை ஏற்பட்டது என்று அறியலாம். அல்லது, பிரச்னைகளை அறிந்து தீர்க்கக் கூடிய தொழில் நுட்பவியலாளருக்கு, இந்த பைலை அனுப்பலாம். அவர் அதனை விரித்துப் பார்த்து, பிரச்னையை உணர்ந்து கொண்டு, அதற்கான தீர்வினைத் தருவார். இப்படி ஒரு டூல் உள்ளது என, பல தொழில் நுட்ப வல்லுநர்களுக்கே தெரியாது.
அடுத்து சில விந்தையான, ஆனால் அதே சமயம் பயனுள்ள விண்டோஸ் 7 ஈஸ்டர் எக்ஸ் எனப்படும் சில குறுக்கு வசதிகளைக் காணலாம்.
1. GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம். ஏழத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு டெஸ்க்டாப்பில், புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும். இதன் பெயராக “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}” என்பதனை அமைக்கவும் (மேற்கோள் குறிகள் இல்லாமல்). இந்த போல்டரின் ஐகான் படம் மற்றவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அமைந்திருக்கும். கண்ட்ரோல் பேனலுக்கான ஐகான் போலக் காட்சி அளிக்கும். பின்னர் அந்த போல்டரைத் திறந்து பார்க்கவும். கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், ஏறத்தாழ 45 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுத் தரப்படும். அட்மினி ஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ், பாண்ட்ஸ், விண்டோஸ் பயர்வால், அப்டேட், யூசர் அக்கவுண்ட்ஸ் எனப் பல பயனுள்ள பிரிவுகளில், 270க்கும் மேற்பட்ட செட் அப் செயல்பாடுகளுக்கான லிங்க் கிடைக்கும். இவற்றில் தேவையானதில் கிளக் செய்து, நாம் புதிய செட் அப் வழியை மேற்கொள்ளலாம். இந்த டூல் அதன் பெயருக்கேற்ப, நம்மை நம் கம்ப்யூட்டரின் கடவுளாக மாற்றுகிறது.

பைல்களை சுவடு இன்றி அழிக்க
நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம். இவ்வாறு இல்லாமல் சுவடே இல்லாமல், மொத்தமாக, முழுமையாக நீக்க விண்டோஸ் 7 வழி ஒன்று கொண்டுள்ளது.
இதற்கு கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) செல்லவும். ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து எண்டர் அழுத்தினால், இந்த கட்டளைப் புள்ளி கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் “cipher /w:C” என டைப் செய்து எண்டர் தட்டவும். அழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்படாத பைல்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்தக் கட்டளையை எந்த ட்ரைவில் உள்ள பைல்களுக்கு என செயல்படுத்துகிறோமோ, அதற்கான ட்ரைவ் எழுத்தினை, கட்டளையில் அமைக்க வேண்டும்.

இன்னும் சில ஷார்ட் கட் கீகளை இங்கு குறிப்பிடலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய விண்டோக்கள் திறந்த நிலையில் உள்ளதா? ஒவ்வொன்றிலும் ஏதேனும் புரோகிராம் ஒன்று திறக்கப்பட்டு, பைல் ஒன்று செயல்பாட்டில் உள்ளதா? அல்லது எந்த செயல்பாடும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதா? இவற்றை மூடிட, Windows Logo + Home என்ற கீகளை அழுத்தவும். ஒவ்வொரு முறை அழுத்தும்போதும், ஒவ்வொரு விண்டோ மூடப்படும். நீங்கள் அப்போது டெஸ்க்டாப்பில் திறந்து வைத்து செயல்படும் விண்டோ மட்டும் திறந்தபடியே இருக்கும்.
திரையில் உள்ள சிறிய எழுத்துக்களைப் பார்க்க இயலவில்லையா? விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நம் லாக் பட்டன் அழுத்திய நிலையில் + கீயை அழுத்தவும். விண்டோஸ் இயக்கத்தின் மேக்னிபையர் செயல்படத் தொடங்கும். முதலில் இருந்த விண்டோவிற்கு மேலாக ஒரு சிறிய விண்டோ காட்டப்படும். பழைய விண்டோவில் கர்சர் இருக்கும் பகுதி மட்டும் இங்கு பெரிது படுத்தப்பட்டு காட்டப்படும். மைனஸ் கீ அழுத்தினால், காட்டப்படும் அளவு குறைத்துக் காட்டப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Muthu - Tiruchirappalli,இந்தியா
24-ஜூலை-201420:46:14 IST Report Abuse
Narayanan Muthu உங்க புத்தி கூர்மைக்கு போதிதர்மரே வந்து பரிசு குடுக்கலாம். எங்கே பா படிக்கிறீங்க இந்த மாதிரி விஷயம் எல்லாம்.
Rate this:
Share this comment
Cancel
aravindan - madurai  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201400:07:50 IST Report Abuse
aravindan it's really helpful for me.thank you so much.
Rate this:
Share this comment
Cancel
B M Jawahar Muthukrishnan. - Nagapattinam,இந்தியா
23-ஜூலை-201407:53:08 IST Report Abuse
B M Jawahar Muthukrishnan. மிக மிக நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X