கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
00:00

கேள்வி: ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற முடியுமா? எடுத்துக் காட்டாக, எனக்கு வேர்ட் டாகுமெண்ட் பைல் வேண்டுமென்றால், *.doc எனக் கொடுத்துத் தேடலாம். இதனுடன் இணைந்து எனக்கு வேறு எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட பைல்களும் வேண்டும் என்றால், என்ன செய்திட வேண்டும்? இவ்வாறு தேட முடியுமா?
-கே. நீலமேகம், தேவாரம்.
பதில்:
தாராளமாக, விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோர ரைத் திறந்து, அதில் வலதுபுறம் மேலாக உள்ள சர்ச் என்னும் தேடல் கட்டத்தில், .doc என அமைத்துத் தேடினால், போல்டர் ஒன்றில் உள்ள டாகுமெண்ட் பைல்கள் அனைத்தும் கிடைக்கும். இதனுடன் மற்ற எக்ஸ்டன்ஷன்கள் உள்ள பைல்களும் தேவை என்றால், Ext:.doc OR Ext:.txt OR Ext:.pdf. என டைப் செய்து தேடலாம். இந்த சொற்றொடரைக் கொடுத்தால், கொடுத்த மூன்று வகை எக்ஸ்டன்ஷன் பெயர் கொண்ட அனைத்து பைல்களும் பட்டியலிடப்படும். இப்படியே எந்த எக்ஸ்டன்ஷன் கொண்ட பைலுக்கும் கொடுக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 7 புரபஷனல் சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கியுள்ளேன். இதில் எப்படி ஒரு பைலை, கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவில் காப்பி செய்வது என்று தெரியவில்லை. விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பைலை ப்ளாஷ் ட்ரைவிற்கு இழுத்து சென்று காப்பி செய்திட வேண்டியதுள்ளது. முன்பு எக்ஸ்பியில், சேவ் அஸ் கட்டளை கொடுத்து, கிடைக்கும் மெனுவில், ப்ளாஷ் ட்ரைவில் காப்பி செய்திட முடிந்தது. வழி காட்டவும்.
செ. கிருஷ்ண குமார், கோவை.
பதில்
: நீங்கள் குறிப்பிட்டது போல, பைல் எக்ஸ்புளோரரில், இழுத்துச் சென்றும், காப்பி அண்ட் பேஸ்ட் கட்டளை பயன்படுத்தியும் பைல்களை நகர்த்தலாம். மேலும், பைல் எக்ஸ்புளோரரில், பைல் ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும்மெனுவில் உள்ள Send To ஆப்ஷன் பயன்படுத்தி பைலை, ப்ளாஷ் ட்ரைவிற்கு காப்பி செய்திடலாம். சேவ் அஸ் மெனுவில், நீங்கள் விரும்பும் ப்ளாஷ் ட்ரைவிற்கு பைலை காப்பி செய்திடும் ஆப்ஷன் இதிலும் தரப்பட்டுள்ளது. எந்த பைலையும் சேவ் செய்திட கட்டளை கொடுத்த பின்னர், எந்த ட்ரைவ் அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதிய ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. கவனமாகப் பார்க்கவும். ஒரு வேளை உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் கெட்டுப் போனதால், கம்ப்யூட்டரில் படிக்க முடியாதபடி கூட இருக்கலாம். எனவே அதனையும் சோதனை செய்திடவும்.

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் கட்டணம் செலுத்திப் பெற்ற விண்டோஸ் 8 உள்ளது. இதனை இயக்கத் தொடங்குகையில், விண்டோஸ் 8.1 வேண்டாமா? மேம்படுத்திக் கொள்ள விருப்பமா? என்று கேட்கிறது. இந்த செய்தியின் பொருள் என்ன? இந்த புதிய சிஸ்டத்திற்கான கட்டணத்தை எங்கு செலுத்துவது?
ஆ. திருஞானம், சென்னை.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பயனாளர்கள் அதிகம் கேட்ட சில வசதிகளை, விண்டோஸ் 8.1 மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இதற்கு புதிய கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இது ஒரு அப்டேட் சிஸ்டம் தான். அப்டேட் செய்து கொள்வது எளிது. விண்டோஸ் 8.1ல் புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. இதனை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். எனவே, மாற்றிக் கொள்ளவும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் லேப்டாப் வாங்கி பயன்படுத்துகிறேன். இதில் ஷட் டவுண் செய்வது மிகவும் சுற்றி வளைத்து செய்ய வேண்டிய வேலையாக உள்ளது. ஸ்டார்ட் பட்டன் இல்லாதது இது போன்ற சிக்கலைத் தருகிறது. ஷட் டவுண் செய்வதற்கு இதில் ஒரு ஷார்ட் கட் உருவாக்க முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் அமைப்பினைத் தரவும்.
என்.சுஹாசினி, மதுரை.
பதில்:
ஓ.எஸ். தாராளமாக இதனை உருவாக்கலாம். கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
2. இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் நடுவில், ஒரு சிறிய பாக்ஸில், உங்கள் ஷார்ட் கட் இருக்க வேண்டிய இட்த்தை அமைக்க வேண்டும். இந்த பாக்ஸில் shutdown /s /t 0 என டைப் செய்திடவும்.
3. அடுத்து “Next” பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து உங்கள் ஷார்ட் கட் வழிக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இதற்கு Shut Down என்றே பெயர் கொடுக்கலாம். அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். இறுதியாக “Finish” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட் கட் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டம் ஷட் டவுண்ட் செய்யப்படும். இது விண்டோஸ் 8க்கு மட்டுமல்ல, அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் செயல்படும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. இப்படிச் செல்லாமல், பார்மட் செய்வதற்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இருக்கின்றனவா? அவற்றைத் தருமாறு வேண்டுகிறேன்.
என். ரவீந்திரன், திண்டுக்கல்.
பதில்:
உங்கள் பிரச்னை புரிகிறது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும். நீங்கள் கேட்பது போல எக்ஸெல் சில ஷார்ட்கட் கீ வசதிகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+# தேதி அமைப்பதற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

கேள்வி: எக்ஸெல் 2007 பயன்படுத்துகிறேன். இதில் ஒரே நேரத்தில் ஒரே திரையில் இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்த முடியுமா?
சி. எம். கார்த்திகேயன், திருப்பூர்.
பதில்
: தாராளமாக இரண்டு ஒர்க்ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தலாம். முதலில் ஒரு ஒர்க்புக்கினைத் திறந்து வைக்கவும்.
ரிப்பனில் View டேப்பினைப் பெறவும். அடுத்து விண்டோ குரூப்பில் New Window என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது
அதே ஒர்க் புக்கினை இன்னொன்றாகத் திறக்கும். இன்னும் காணப்படும் ரிப்பனின் வியூ டேப்பில், Arrange All என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
இப்போது எந்த வகையில் எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்களைக் காட்ட வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் நீங்கள் அமைத்தபடி விண்டோக்களில் ஒர்க் ஷீட்டினைக் காட்டும்.
ஒவ்வொரு விண்டோவிலும், நீங்கள் விரும்பும் வெவ்வேறு ஒர்க்ஷீட்களை டிஸ்பிளே செய்திடலாம். அவை ஒரே ஒர்க்புக்கின்
ஒர்க் ஷீட்டாக இருந்தாலும், அவற்றை அமைக்கலாம். இதே போல எத்தனை விண்டோக்கள் வேண்டுமானாலும் திறந்து ஒர்க் ஷீட்களை அமைக்கலாம்.

கேள்வி: நான் வேர்ட் 2003 பயன்படுத்துகையில், குறிப்பிட்ட டாகுமெண்ட் பைல் இருக்கும் போல்டர் தெரியவில்லை என்றால், அதில் உள்ள டெக்ஸ்ட் சிறிய அளவில் அமைத்து தேட முடிந்த்து. பைல் திறக்கும் Open dialog boxல் அல்லது டூல்ஸ் மெனுவில் இதனை மேற்கொள்ள முடிந்தது. இதே போன்ற வசதி வேர்ட் 2007ல் உள்ளதா? நான் தற்சமயம் இதனையே பயன்படுத்தி வருகிறேன்.
கே.என். ஜீவானந்தம், விருதுநகர்.
பதில்:
ஆம், இதற்கான வழி ஒன்று வேர்ட் 2007ல் உள்ளது. நீங்கள் கூறியுள்ள அதே பைல் திறக்கும் Open dialog boxல், மேலாக வலது மூலையில் ஒரு தேடல் கட்டம் இருக்கும். நீங்கள் நினைவில் வைத்திருக்கும் டெக்ஸ்ட்டை இதில் டைப் செய்து, பாக்ஸ் அருகே இருக்கும் லென்ஸ் போன்ற ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் அனைத்து டாகுமெண்ட் பைல்களிலும் இந்த டெக்ஸ் உள்ள பைலைத் தேடித் தரும். ஆனால், வேர்ட் 2003ல் இருந்தபடி, மிகவும் ஆழமான தேடல் இதில் இருக்குமா என்று கேள்வி கேட்டால், இல்லை என்றுதான் சொல்வேன். விண்டோஸ் சிஸ்டத்தில் இந்த வகையான ஆழமான தேடல் வசதி தரப்பட்டுள்ளதால், வேர்ட் 2007ல் இது சுருக்கப்பட்டுவிட்டது என்றே கூறுவேன்.

கேள்வி: எனக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து சிலருக்கு மட்டும் முகவரி தந்துள்ளேன். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் அவுட்லுக் அஞ்சல் தளம் வழியாக ஜிமெயில் அஞ்சல்களையும் பெற்றுப் படிக்க முடியும் என என் நண்பர் கூறுகிறார். ஆனால், அவருக்கு அதற்கான செட்டிங்ஸ் தெரியவில்லை. இது உண்மையா? உண்மை எனில், அதற்கான வழிகளைக் கற்றுத் தரவும்.
-கே. சபரீஸ்வரன், புதுச்சேரி.
பதில்:
தாராளமாக உங்கள் ஜிமெயில் அஞ்சல்களை, அவுட்லுக்கில் பெறலாம். சிறிது மாற்றங்களை ஜிமெயில் அக்கவுண்ட்டில் மேற்கொள்ள வேண்டும். முதலில், ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டிற்கான இன்பாக்ஸ் பெறவும். இதில் வலது புறம் மேலாக, உங்கள் பெயருக்குக் கீழாக உள்ள Settings ஐகானில் கிளிக் செய்திடவும்.
இங்கு Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Forwarding and POP/IMAP என்பதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் ஆப்ஷன்களில், Enable POP for all mail அல்லது Enable POP for mail that arrives from now என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் அதே பக்கத்தின் கீழாகத் தோன்றும் Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது உங்கள் மின் அஞ்சல்களுக்கு, POP வழியை அமைத்துவிட்டீர்கள். அடுத்து அவுட்லுக் இமெயில் புரோகிராமினை செட் செய்திட வேண்டும். அதற்கான வழிகள்: அவுட் லுக் திறந்து, கிடைக்கும் மெனுவில் Tools என்பதில் கிளிக் செய்து Account Settings பிரிவு செல்லவும். புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். அடுத்து E-mail டேப் சென்று, New என்பதில் கிளிக் செய்திடவும்.
அடுத்து கிடைக்கும் விண்டோவில், Microsoft Exchange, POP3, IMAP அல்லது HTTP ரேடியோ பட்டன் எனத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான். இனி உங்கள் ஜிமெயில் மெயில்களை, அவுட்லுக் அக்கவுண்ட்டில் பெற்றுப் படிக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X