கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
00:00

கேள்வி: விண்டோஸ் 8 புதியதாகப் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல் டைரக்டரியைப் பார்க்கையில், வலதுபுறம் மேலாக ஒரு மெனு கிடைக்கும். அதில் பைல்கள் Details, Small Icons, Medium Icons, Large Icons, List போன்றவை காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானபடி பைல்களைப் பார்வையிடலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அந்த வசதி இல்லையா? அல்லது இருக்குமிடம் காட்டப்படாமல் மறைது வைக்கப்பட்டுள்ளதா?
என். கண்ணபிரான், திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் 8ல் தனிமெனுவாக மேலாகத் தரப்படவில்லை. விண்டோஸ் எக்ஸ்புளோரரில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். உடன் கிடைக்கும் மெனுவில் நீங்கள் கேட்கும் அனைத்தும் இருக்கும். தேவையானதை அழுத்தினால், உடன் பைல்கள் குறித்த பட்டியல், அதற்கேற்ப மாறுதலாகக் காட்சி அளிக்கும்.

கேள்வி: புதியதாக சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்த்த் தொடங்கியுள்ளேன். இதில் அடிக்கடி சி.பி. மெசேஜ் என, நான் செல்லும் இடம் குறித்து மெசேஜ் வந்து கொண்டே இருக்கிறது? இது எதனால்? எப்படி இதனை நிறுத்துவது?
என். சுரேந்திரன், சென்னை.
பதில்:
இந்த செய்திகள் நீங்கள் எந்த பகுதியில், ஊரில் இருக்கிறீர்கள் என்று காட்டப்படும் தகவல்களாகும். சில நாடுகளில், மொபைல் போன் அழைப்பிற்கான கட்டணம், இடம் பொறுத்து மாறுபடும். அவர்களுக்கு இது மிகவும் உதவும். ஏன், நாம் இரவில் ட்ரெயினில் பயணம் செய்கையில், எந்த ஊர் அருகில் நம் ட்ரெயின் போய்க் கொண்டிருக்கிறது என்பதனை, இந்த செய்திகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நாம் நம் ஊருக்குள்ளாகச் செல்கையில், எடுத்துக் காட்டாக சென்னையில், தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை, அடையார் என்றோ அல்லது சில கட்டடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டோ செய்தி வரும். இந்த செய்திகள் வராமல் இருக்க, போனில் சில அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் Messages செல்லவும். இங்கு கீழாக இடது புறம் அழுத்தினால் கிடைக்கும் மெனுவில் Settings தேர்ந்தெடுக்கவும். இனி, கீழாகச் சென்றால், Cell Broadcast என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத்தான் CB செய்திகள் என பெயரிடப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டிருக்கும். இதனை நீக்கிவிடவும்.

கேள்வி: என்னுடைய கூகுள் குரோம் பிரவுசரில் திடீரென ஒலி கிடைக்கவில்லை. மியூசிக் பைல்கள் இயக்கப்பட்டாலும், ஒலி கிடைக்கவில்லை. ஆனால், கம்ப்யூட்டரின் மியூசிக் பிளேயர் மற்றும் பிற பிரவுசர்களை இயக்குகையில் ஒலி கிடைக்கிறது. இது எதனால் குரோம் பிரவுசரில் மட்டும் ஏற்படுகிறது? இதனை எப்படி சரி செய்வது? நான் விண்டோஸ் 7 சிஸ்டம் 64 பிட் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறேன்.
என்.மஞ்சுளா ராணி, கடலூர்.
பதில்
: வீடியோ அல்லது ஆடியோ பைல்களை இயக்குகையில், ஒலி தடைபடுவது சில குரோம் பிரவுசர் பதிப்புகளில் ஏற்படும் பிழையான இயக்கமாகும். எனவே கூகுள் குரோம் பிரவுசருக்கான, அண்மைக் காலத்தில் தரப்பட்ட அப்டேட் பைல்களை, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால், பெரும்பாலும் சரி ஆகிவிடும்.
குரோம் பிரவுசரில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளும் முன், உங்களிடம் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட குரோம் பிரவுசர் பதிப்பு உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பிரவுசரின் வலது மூலையில் உள்ள மெனு பாரில் கிளிக் செய்திடவும். மெனுவில் கீழாகச் சென்று “About Google Chrome” என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் கம்ப்யூட்டரில் தற்போது வரை வெளியிடப்பட்ட அப்டேட் பைல்கள் பதிக்கப்பட்டிருந்தால், “Google Chrome is uptodate” என்று ஒரு மெசேஜ் கிடைக்கும். புதிய அப்டேட் பைல்கள் பதியப்படாமல் இருந்தால், “Update Google Chrome” என்ற செய்தி காட்டப்படும். தரவிறக்கம் செய்து அப்டேட் செய்திட வழி காட்டுதலும் கிடைக்கும். அப்டேட் செய்த பின்னர், மீண்டும் குரோம் பிரவுசரை இயக்கி, வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கிப் பார்க்கவும்.
இதனாலும், ஒலி கேட்கவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ஒலிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பினை மீண்டும் சரி செய்திட வேண்டும். ஆனால், இங்கு செட் அப் செய்தால், அது அனைத்து பிரிவுகளிலும் ஒலி அமைப்பினை வரையறை செய்திடும் என்பதனை அறிந்து கொள்க. முதலில் ஸ்டார்ட் மெனு சென்று, கண்ட்ரோல் பேனல் செல்லவும். பின்னர் “Hardware and Sound” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அடுத்து “Sound” என்ற பச்சை நிற லேபிளில் கிளிக் செய்திடவும். அடுத்து, கம்ப்யூட்டருக்கான ஸ்பீக்கர் சிஸ்ட்த்திற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, விண்டோவின் கீழாக உள்ள “Configure” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
“Audio Channels” என்ற பாக்ஸில், “Stereo” என்பதற்கு அமைப்பினை மாற்றவும். பின்னர் இதனை சேவ் செய்திட “Finish” அழுத்தவும். இதே போல “Audio Channels” என்ற பாக்ஸிலும் அமைப்பினை ஏற்படுத்தவும். இனி, குரோம் பிரவுசரிலும் ஒலி கிடைக்கும். கிடைக்கவில்லி என்றால், குரோம் பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

கேள்வி: குறிப்பிட்ட இணைய தளத்திற்கென ஷார்ட் கட் ஐகான் ஏற்படுத்தி, அதில் கிளிக் செய்து, அந்த இணைய தளத்தினைத் திறக்கச் செய்திடலாமா? நான் தினந்தோறும், அடிக்கடி சில இணைய தளங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. வழி காட்டவும்.
எஸ். பிரம்மராஜ், திருப்பூர்.
பதில்:
இணைய தளம் ஒன்றுக்கு ஷார்ட் கட் ஐகான் உருவாக்குவது மிக மிக எளிது. கீழ்க்காணும் செயல்முறையினை மேற்கொள்ளவும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படும். இதனை மேற்கொள்கையில், உங்கள் பிரவுசர் விண்டோ, டெஸ்க்டாப் தெரியும்படி சிறியதாக அமைக்கப்பட வேண்டும்.
உங்களுடைய பிரவுசரின் முகவரி கட்டத்தில் முகவரியை அடுத்து ஒரு சிறிய ஐகான் தரப்பட்டிருக்கும். இது சில பிரவுசர்களில் வேறு இடத்தில் இருக்கலாம். குறிப்பிட்ட தளம் சென்ற பின்னர், அந்த ஐகானில் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டெஸ்க்டாப் திரையில் விட்டுவிடவும். உடனே, அதற்கான ஷார்ட்கட் ஐகான் உருவாக்கப்படும். அடுத்த முறை, இதில் டபுள் கிளிக் செய்தால், உங்களின் மாறா நிலையில் உள்ள பிரவுசர் திறக்கப்பட்டு, இந்த இணைய தளம் கிடைக்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இணையத்தில் கண்ட டெக்ஸ்ட் ஒன்றை பதிவு செய்வதற்காக, எம்.எஸ். ஆபீஸ் செல்ல, வழக்கம்போல, அதன் டெஸ்க்டாப் பகுதியில் ரைட் கிளிக் செய்தேன். ஆனால், தவறுதலாக எதையோ கிளிக் செய்ததனால், டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து ஐகான்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் உள்ளன. அனைத்திலும் ஒரு செக் மார்க் அடையாளம் உள்ளது. எப்படி இவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது என்று வழி காட்டவும்.
என். கணேசமூர்த்தி, சிவகாசி.
பதில்:
மாறா நிலையில், விண்டோஸ் சிஸ்டம், டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களுக்கு ட்ராப் ஷேடோஸ் எனப்படும் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இதனால், டெஸ்க்டாப் ஐகானில் உள்ள டெக்ஸ்ட் தெளிவாகக் காட்டப்படும். உங்களுடைய தவறைச் சரி செய்திட, கீழ்க்காணும் வழி முறைகளைப் பின்பற்றவும்.
1. மை கம்ப்யூட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து Advance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Performance என்ற பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின்னர் Use drop shadows for icon labels on the desktop என்பதில் செக் மார்க் அடையாளம் அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், ஐகான்கள் அனைத்தும் பழைய நிலையில் காட்டப்படும்.
உங்களுக்கு மேலே காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்வதில் தயக்கம் இருந்தால், அல்லது அவற்றிற்குப் பின்னரும், பழையமுறையில் ஐகான்கள் தோற்றமளித்தால், Tweak UI என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தி, இதனைச் சரி செய்திடலாம். இதனை http://windowsxp.mvps.org/tweakui.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதில், தேவையில்லாமல் இடம் பெற்றிருக்கும் அம்புக் குறிகளை நீக்கவும் தனியாக ஒரு ஆப்ஷன் கிடைக்கும்.

கேள்வி: மானிட்டர் திரையில் எந்த எந்த கீகள் அழுத்தப்பட்டு இயக்கத்திற்காக உள்ளன என்று அறியும் வகையில் ஏதேனும் ஏற்பாடு செய்திட முடியுமா? எடுத்துக் காட்டாக, நான் அறிய விரும்புவது கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டுள்ளதா என்பதுதான். ஏனென்றால், அதனை அறியாமல் நாம் பாஸ்வேர்ட் அழுத்தினால், அது தவறு என்று காட்டப்படுகிறது. இதற்கான வழி என்ன?
எஸ். மீனாட்சி குமரேசன், காரைக்குடி.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இணையத்தில் இதற்கென புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதன் பெயர் கீ போர்ட் இண்டிகேட்டர் (Keyboard Indicator). இதனை இயக்கிவிட்டால், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், அதற்கேற்ற வகையில் இதன் செட்டிங்ஸ் அமைக்கப்பட வேண்டும். ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் என்ன நிலையில் உள்ளன என்று காட்டப்படும். கீகள் அழுத்தப்பட்டிருந்தால், அதற்கான இடத்தில் சிகப்பு வண்ணமும், அழுத்தப்படாத நிலையில் ஊதா நிறமும் காட்டப்படும். அல்லது இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றால், கீகள் எந்த நிலையில் உள்ளன என்று நமக்கு செய்தியாகக் கிடைக்கும். கீ அழுத்தப்படும்போது, அந்த வேளையிலும் மாறுதல் குறித்த செய்தி காட்டப்படும். இந்த செய்தி திரையின் எந்தப் பகுதியில் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாம் வரையறை செய்திடலாம். இதனால், நாம் அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், உடனே எச்சரிக்கையாகச் செயல்படலாம். இந்த புரோகிராமினை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://sites.google.com/site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த புரோகிராம் செயல்பட டாட் நெட் பிரேம் ஒர்க் 2, சிஸ்டத்தில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

கேள்வி: என் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், விடியோ பைல்களை, எப்போதும் வி.எல்.சி. பிளேயர் புரோகிராம் கொண்டு திறக்க விரும்புகிறேன். விண்டோஸ் மீடியா பிளேயர் மாறா நிலையில் உள்ளது. இதனை எப்படி மாற்றி அமைப்பது?
கா.கதிரேசன், பள்ளத்தூர்.
பதில்:
பல வழிகள் இருந்தாலும், இதற்கான எளிய வழி ஒன்றைக் கூறுகிறேன். கம்ப்யூட்டரில் உள்ள விடியோ பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதன்மீது ரைட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு மெனு கிடைக்கும்.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பி.டி.எப். பைலின் மீதாவது, ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், “Open With” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். மீண்டும் “Browse” என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் புரோகிராம்பட்டியலில் VLC Media Player என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் கீழாக, “Always use the selected program to open this file” என்று இருப்பதற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருப்பதனை உறுதிப்படுத்தவும். அல்லது, ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்தால், நீங்கள் வீடியோ பைல்களைத் திறக்க, வி.எல்.சி. பிளேயர் புரோகிராமினை மட்டும் திறக்கும்படி, கம்ப்யூட்டருக்கு கட்டளை கொடுத்துள்ளீர்கள் என்றாகிறது. இனி, எந்த விடியோ பைல்கள் மீது கிளிக் செய்தாலும், அது வி.எல்.சி. பிளேயர் புரோகிராமில் தான் திறக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X