பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் தன் நவீன ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டுள்ளது. பானாசோனிக் டி 41 (Panasonic T41 ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.7,999. இதனைத் தற்போதைக்கு HomeShop18 என்ற வர்த்தக இணைய தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சங்கள்: 4.5 அங்குல, ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டும் கெபாசிடிவ் தொடு உணர் FWVGA திரை. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர். ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புற வெப் கேமரா, இரண்டு சிம் இயக்கம். நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத் ஆகிய தொழில் நுட்பம். அசைவுகளின் மூலம் இயக்கம். ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன். இதன் பரிமாணம் 131 x 65.9 x 8.3 மிமீ. எடை 120 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ. 512 எம்பி ராம் மெமரி. 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி. அதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி. இதன் பேட்டரி 1650 mAh திறன் கொண்டதாக உள்ளது.
இந்த மொபைல் போன் நல்ல வெண்மை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.