பசுவை பாதுகாப்போம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

ஆக., 9 - ஆடித்தபசு

பசுக்கள் பாதுகாக்கப்படும் நாட்டில், செல்வச்செழிப்பு மிகுந்திருக்கும். அதனால் தான், தானங்களில் உயர்ந்த தானமாக, பசு தானத்தைக் குறிப்பிடுகின்றனர்.
ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. தாய்ப்பால் வற்றிப்போனால், அதன் உயிரைக் காப்பது பசுவின் பால். மனித வாழ்வின் துவக்கத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னும் பால் ஊற்றுகின்றனர். இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு வருவது பசு.
இதனால் தான், சிவனை, பசுபதி என்றும், அம்பாளை கோமதி என்றும் சொல்கின்றனர். 'கோ' என்றால், பசு.
அம்பாள் கோமதி, பூலோகம் வந்து, உலக நன்மை கருதி தபஸ் (தவம்) இருந்தாள். 'தபஸ்' என்பதே பின்னாளில், தபசு ஆனது. இந்த தபசுக் காட்சி, ஆடிமாதம் பவுர்ணமியை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலுள்ள தெற்கு சங்கரன்கோவிலிலும் விமர்சையாக நடைபெறுகிறது.
இப்பகுதியில் வசித்த, ஒரு சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். தினமும் காகங்களுக்கு சாதம் வைத்தபின், சாப்பிடுவது அவர் வழக்கம். அவ்வாறு சாதம் வைக்கும் போது, ஒரு காகம் மட்டும், சாதத்தை எடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு, பறந்து செல்வதை பார்த்தார். தினமும் அந்தக் காகம் அவ்வாறு செய்வதை கவனித்த சிவபக்தர், அங்கு சென்று பார்த்தார். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. அதற்கு பூஜை செய்து வழிபட்ட சிவபக்தர் அங்கேயே தங்கி விட்டார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வரவே, அவரைச் சென்று பார்த்தனர். அப்போது, சிவலிங்கத்தில் ஐக்கியமாகி விட்டார் பக்தர். அதனால், அதற்கு, 'சங்கரலிங்கம்' என, பெயர் சூட்டினர். பின், அவ்விடத்தில் கோவில் எழுப்பினர்.
இந்த இடத்தில் தான், அன்னை உமையவள், தவமிருந்தாள். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே, அன்னையை, கோமதி என்றனர். அவளை தரிசிக்க தேவர்கள், பசுக்களாக மாறி வந்தனர். அந்த பசுக்களை காத்தமையால், ஆவுடையம்மாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.
இந்த லிங்கத்தின் முன்புறம் ராகு, இடது புறம் கேது என, இரு நாகங்கள் உள்ளன; நாகதோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத்தலம்.
தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ இத்தலம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நதியில் நீராடினால், பாவங்கள் தொலையும். அன்னையின் தபசுக் காட்சி நதிக்கரையில் நடைபெறுகிறது. இந்த நல்ல நாளில், பசுக்களை பாதுகாக்கும் வகையில் உதவிகளை வழங்கினால், குடும்பம் வாழையடி வாழையாக செல்வச் செழிப்புடன் திகழும்; தீர்க்காயுள், தீர்க்கசுமங்கலி பாக்கியமும் கிடைக்கும்.

தி.செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
05-ஆக-201419:14:10 IST Report Abuse
unmaiyai solren நம்ப நாட்டில் மிருகத்திற்கு கொடுக்கின்ற மரியாதை கூட மனிதனுக்கு கிடையாது. நாம் மனிதர்களை மிருகத்தை விட கீழ்த்தரமாக நடத்துகின்றோம். உண்மையில் மாடுகள் இல்லாத நாடுகள்தான் செல்வ செழிப்பாகவும், வல்லரசாகவும் இருக்கின்றது. பலர் கோவணத்திற்கே வழி இல்லாமல் கஷ்டப்படும் நம் நாட்டில்,மாட்டிற்கும்,குரங்கிற்கும், சிலைக்கும், உடை அணிவித்து கொண்டாட கூடிய பல கோடி மக்களை கொண்ட நாடுதான் நம் நாடு.மேலே சகோதரி சொன்னது போல ஒரு அவசரத்திற்கு சிறுநீர், கழிப்பிடத்திற்கு கூட போக முடியாத தர்மசங்கடமான நிலையில்தான் நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம் என்பதை இங்கே யாரும் மறுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
unmaiyalan - bangaluru,இந்தியா
03-ஆக-201409:36:51 IST Report Abuse
unmaiyalan இன்று செல்வ செழிப்பாக இருக்கும் நாடுகளில் யாரும் பசு வளர்த்தாதாக தகவல் கிடையாது
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
03-ஆக-201408:55:45 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சமீபத்துலே என் கணவரின்சதாபிஷேகம் நடந்தது திருக்கடையூரில் , முதலில் கோ பூஜையுடன் துவங்கியது விசேஷம் பிறகு பல வேதகோஷங்கள் ஹோமம்கள் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் ஆராதனை என்று கிராண்டா நடந்து பூர்னாஹுதியுடன் நிறைவு செய்து என் கணவர் கரத்தினால் மாங்கலியம் அணியும் பேரு கிடைத்தது , எல்லாம் மன நிறைவுகளும் இருந்தாலும் ஒரே நேரத்துலே பலருக்கும் மணிவிழா பீம சாந்தி சதாபிஷேகம் என்று நடக்குது ,கோயில் பிரகாரம் முழுக்க வைபவங்களேதான் , ஆனால் ஒரு குறை (பெரியகுறை என்றே சொல்லுவேன்) கோயிலுக்கு இந்த வபவங்களால் நெறைய வருமானம் அம்பாளும் ஈசனும் நன்னா அள்ளி தரா , அதுலே ஒரு பகுதிய சுத்தம் செய்ய உபயோகிக்கலாமே . டைலெட் வசதியே இல்லே ,பல கிழவா பிரகாரத்துலேயே சிறுநீர் கழிக்குராக கண்றாவி கோயிலுக்கு வெளிய உள்ள இடங்களில் நெறைய டாய்லெட்ச் கட்டி (ஆன் /பெண்என்று )பிரிச்சாலே போருமே வரும் யாதிரீகர்கலெல்லாம் கிழவா தான் அடக்க முடியாது பாவம் வேண்டுமானால் கட்டணமும் வசூல் செய்து கிளீநேர்களும் வச்சால் நன்னா இருக்குமே , ஹோட்டல் மணிவிழா /சதாபிஷேகம்/என்று ஸ்டார் ஹோட்டல் போல நன்னா சகல வசதிகளோடும் இருக்கே நிச்சயம் இந்த பொது வசதியும் செய்யவேண்டும் இங்கே ன்னு இல்லே எல்லா தேசிய நெடும்சாலைகளிலும் கூட இந்த டாஇலெட் வசதிகள் இருக்கவேண்டும் வெளிநாட்டை பார்த்து எதை எல்லாமோ காபி அடிக்குரோமே இதை அல்லாவா முதலில் செய்யோணும் கொடிலே லாபமீட்டும் கபெநிகளே கூட செய்யலாமே ஆண்களானால் கூச்சமெ இல்லாம தெருவுலே கழிக்குராக ஆனால் பெண்கள் நிலை கஷ்டமா இருக்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X