இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

சபாஷ்... சரியான நெத்தியடி!
எங்கள் அலுவலக சூப்பிரண்டன்ட் சரியான, 'ஜொள்' பார்ட்டி; அவரது முக்கிய வேலையே, பெண் ஊழியர்களை நோட்டமிடுவதும், அவர்களது அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் தான். 'அந்த மூன்று நாட்கள்' யார் யாருக்கு, எப்போது என்ற விஷயம் கூட, தெரிந்து வைத்துள்ளார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். டெலிபோன் பேச்சுகளையும் ஒட்டுக் கேட்பார்.
பர்மிஷன், லீவு, லோன் என்று சகல விஷயத்துக்கும், அந்த ஆள் தயவு வேண்டியிருப்பதால், எதையும் எதிர்த்து செய்ய முடியாத நிலை.
'இதற்கு ஒரு முடிவு வராதா...' என்று ஏங்கிக் கொண்டிருந்த போது, வந்தது ஒரு இளம் புயல்.
அந்த இளம் பெண் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே, அந்த, 'ஜொள் பார்ட்டி' பற்றி எச்சரித்தோம். எனினும், அவள் கண்டு கொள்ளவில்லை.
ஜொள் பார்ட்டிக்கு மேல், வழியோ வழி என வழிந்தாள். அவள் தலையெழுத்து என்று விட்டு விட்டோம். ஆனால், இக்காலத்து பெண்கள் புத்திசாலிகள் என்பதை, சிறிது நாளிலேயே நிரூபித்தாள்.
இளம் புயலை, 'பிராக்கட்' போட பார்த்துள்ளது ஜொள் பார்ட்டி. இவளும், சகஜமாக பேசுவது போல் பேசி, ஜொள் பார்ட்டியின் சல்லாப பேச்சுகளை, மொபைல் போனில் பதிவு செய்ததோடு, அவர் வாங்கிக் கொடுத்த சுடிதாரையும், அவரது மனைவியிடம் கொடுத்து விட்டாள்.
'தலைமை செயலக'த்துக்கு விஷயம் போனபின், எந்த மனிதனாவது தப்பிக்க முடியுமா... அவரது மனைவி அலுவலகத்துக்கு வந்து புரட்டி எடுத்து விட்டாரே பார்க்கணும்... இப்போதெல்லாம் சூப்பிரண்டன்ட் குனிந்த தலை நிமிருவதில்லை.
ஜொள் பார்ட்டிகளே... இனி, உஷாராக இருந்து கொள்ளுங்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!
-- கே.பத்மாராணி, கோவை.

உண்மையான முதல் மரியாதை!
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந் தேன். அவர் வீட்டில், 'ஷோ கேசில்' வழக்கமாக வைக்கப்படும் அலங்கார பொருட்களுடன், 'பளிச்'சென்று ஒரு நோட்டுப் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அதன்மீது, 'முதல் மரியாதை' என்று, எழுதியிருந்தது.
அந்த நோட்டை பற்றி நண்பரிடம் விசாரிக்க, 'இதில், எங்களுக்கு அவசரத்தில் உதவிய வர்களின் விலாசங்கள் உள்ளன; வீட்டில் விசேஷங்கள் நடந்தால், முதலில் இவர்களுக்கு தான் அழைப்பு அனுப்புவோம். சில சமயங்களில், விசேஷ பரபரப்பில் இவர்களில் சிலரை அழைக்க மறந்து விடலாம். அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஒரு தனி நோட்டு போட்டு, அவர்களது விலாசத்தையும் குறித்து வைத்து, அவர்களுக்கு, முதல் மரியாதையை தருகிறோம்...' என்றார்.
ஆபத்து காலத்தில் தனக்கு உதவியவர்களுக்கு முதல் மரியாதை தரும் நண்பரின் செயல் கண்டு, அவர் மீதிருந்த மதிப்பு, பன்மடங்காக உயர்ந்தது.
ஆர்.சவுந்திரபாண்டியன், கடலூர்.

இப்படியும் செய்யலாமே!
கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். இரவு சர்க்கரை பொங்கல் மற்றும் புளியோதரை கொடுத்தனர். இலை போடும் போதே, ஒவ்வொருவருக்கும், ஒரு காகித, 'கேரி பேக்' தந்து, 'பிரசாதங்களை வீணடித்து விடாதீர்கள்; உங்களுக்கு வேண்டியதை, தனியாக வைத்துக் கொண்டு, மீதியை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்...' என்று கூறி, கூடவே, ஒவ்வொரு வருக்கும் இன்னொரு இலையை யும் கொடுத்தனர். கொஞ்சம் கூட, சாதம் வீணாகவில்லை. இலை எடுக்கும் போதும், சாதம் கீழே கொட்டி, ஆலயம் அசுத்தம் அடையாமல் இருந்தது. அதிலும், சுற்றுச்சூழலுக்கு, மாசு ஏற்படுத்தாத, காகித பைகளை கொடுத்தது, இன்னும் பாராட்டும்படி இருந்தது.
வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X