பசுமை நிறைந்த நினைவுகளே (48)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

கடந்த, 2002-ம் ஆண்டு குற்றால டூரின் போது, பெரும்பாலான வாசகர்களின் விருப்பப்படி சைவ உணவு பிரியர்களுக்கு சைவ உணவும், அசைவ பிரியர்களுக்காக அசைவ உணவும் வழங்கப்பட்டது.
அந்த ஆண்டு பெரும்பாலான வாசகர்கள் அசைவமாக இருந்ததால், சைவ சாப்பாட்டு வரிசையில் ஆள் இல்லாமல், தனியாக தயிர்சாதத்தை தட்டில் எடுத்து வைத்து, அந்துமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
பார்டர் கடை நாட்டுக்கோழிகளை ஒரு, 'கை' பார்த்த அவரது நண்பர்கள், தொண்டைக்கு மேல் மிச்சமிருந்த பகுதியை, திண்டுக்கல் சிறு மலை வாழைப் பழத்தால் நிரப்பி, ஒன்றுக்கு இரண்டு பீடாவை மென்றபடி, 'தயிர் சாதத்திற்கு கொஞ்சம் ஊறுகாய் தொட்டுக்கிட்டு சாப்பிடலாம்ல...' என்றனர் அந்துமணியிடம்!
நண்பர்களோ, வாசகர்களோ அவர்களது சந்தோஷம் தான் முக்கியம் என்பதை உணர்ந்த அந்துமணி அதன்பின், அடுத்து வந்த டூர்களில், அசைவ உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டார்.
முன்பு கடையில் பார்சலாக வாங்கிய நிலையில், தற்போது, சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்டு, சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
'அது சரி அந்த கொடைக்கானல் விஷயம் என்னாச்சு...' என்று, நீங்கள் கேட்பது புரிகிறது.
அந்த ஆண்டு டூர் முடிந்து பிரியும் போது, அந்துமணியை அடையாளம் கண்டுகொண்ட வாசகர்கள் அவரிடம், 'இப்போது பிரிவோம்; மீண்டும் சந்திக்கும் போது சந்தோஷப்படுவோம். சந்தோஷப்படு வதற்காகவே சந்திப்போம்...' என்றனர்.
சந்தோஷப்படுவதற்காகவே சந்திப்போம் என்ற வார்த்தைக்கு உயிர்கொடுக்க, திருப்பூர் குமார் தலைமையிலான வாசகர்கள் கூடிப்பேசி, 2003-ம் ஆண்டு, மே மாதம், கொடைக்கானல் செல்வதாக முடிவெடுத்தனர்.
'குற்றால டூருக்கு தான், குடும்பத்தில் இருவர் மட்டுமே என்ற கட்டுப்பாடு; எங்களின் இந்த கொடைக்கானல் டூருக்கு எந்த கட்டுப்பாடும் இல்ல. அதனால், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே, அந்துமணியை பார்க்க பேச ஆசைப்படுவதால், அனைவரும் வருகிறோம்...' என்று, வாசகர்கள் குடும்பம் குடும்பமாக புறப்பட்டு வந்ததில், கொடைக்கானல் நாயுடுபுரம் ஜேஸி ரெசிடென்சி என்ற அந்த நட்சத்திர ஓட்டல் நிரம்பி வழிந்தது.
வாசகர்களுடன் அந்துமணி இருந்த அந்த மூன்று நாட்களும், வாசகர்களுக்கு மட்டுமல்ல, கொடைக்கானலுக்கும் கூடுதல் உற்சாகம் வந்துவிட்டது.
கொடைக்கானல் போட் கிளப்பில் அப்போது துணைத் தலைவராக இருந்த பவானி சங்கர், ஒவ்வொரு வாசக குடும்பத்திற்கும், தனித்தனி படகு கொடுத்து, படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தார். அங்கிருந்த போட்மேன்கள் பலரும், 'அந்துமணியை என் படகில் வைத்து, நான்தான் ஓட்டுவேன்...நான் தான் ஓட்டுவேன்...' என, தங்களுக்குள் செல்ல சண்டை போட்டனர். ஆனால், அவர்களுக்கு தெரியாது அவர்களைவிட அருமையாக துடுப்பு போட்டு, படகு ஓட்டுவார் அந்துமணி என்று!
இவர்கள் செல்ல சண்டையிட்டு கொண்டிருந்த அதே நேரத்தில், தனியாய் படகை எடுத்து ஏரிக்குள் சென்றவர், பின், படகைவிட்டு இறங்கும் போது, போட்மேன்களின் அன்பு விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இப்படியாக கொடைக்கானலில் எல்லாரும் பார்க்கக்கூடிய தூண்பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும், விசேஷ அனுமதி பெற்று பார்க்கக்கூடிய பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கும் பாறை போன்ற இடங்களையும் பார்த்து வந்தனர்.
முதல் நாளும், இரண்டாவது நாளும் ஓட்டல் நிர்வாகத்தினர், 'கேம்ப் பயர்' ஏற்படுத்தி தந்தனர். குளிரும், சூடும் கலந்த அந்த புதுமையான சூழலில், வெட்டவெளியில் உட்கார்ந்து விடிவது தெரியாமல் பேசி மகிழ்ந்தனர்.
மூன்றாவது நாள், அனைவரும் அவரவர் ஊருக்கு செல்லவேண்டிய நேரம். விமான பயண நேரம் காரணமாக, ஒரு மணி நேரம் முன்னதாகவே வாசகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார் அந்துமணி.
அவரை பிரியும் போது, 'இந்த மூன்று நாட்களும் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்களானதற்கு நீங்கள்தான் முக்கிய காரணம்...' என்று, தங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷ அனுபவங்களை சொல்லி, சந்தோஷப்பட்டனர்.
'உங்களுடன் இருந்ததில் எனக்குதான் எல்லையில்லாத சந்தோஷம்; இதற்காக மிகவும் நன்றி. உங்களுக்கு இன்னும் ஒரு சந்தோஷம் பாக்கி இருக்கிறது. அதை ஓட்டல் ரிசப்ஷனில் சொல்வர்...' என்று கூறி, அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.
அவருக்கு கை அசைத்து விடை கொடுத்த வாசகர்கள் அனைவரும், 'அவர் ரிசப்ஷனில் விட்டுச்சென்ற சந்தோஷம் என்னவாக இருக்கும்...' என நினைத்து, அங்கு போய் நின்றனர்.
அங்கே அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத மிகப்பெரிய சந்தோஷம் ஒன்று காத்திருந்தது. அது என்ன என்று, அடுத்த வாரம் சொல்கிறேன்.

குற்றாலமும், திருவள்ளுவர் கழகமும்!
குற்றாலம் பக்கம் உள்ள தென்காசி கோவில் கோபுரத்தை ஒட்டி, திருவள்ளுவர் கழகம் கடந்த, 87 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த கழகத்தின் நோக்கம், இல்லந் தோறும் திருவள்ளுவர் படம் மற்றும் திருக்குறளை இடம் பெறச்செய்து, வள்ளுவர் வழியில், மக்களை வாழச் செய்வதுமாகும்.
திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்து நாட்கள் திருக்குறள் விழா எடுத்து சிறப்பிக்கின்றனர். இந்த நாட்களில் தமிழறிஞர்கள் வந்து இங்கு பேசுவர். இங்கு பேசாத அறிஞர்களே இல்லை என, சொல்லலாம்.
திருவள்ளுவர் கழக கட்டடத்தில் நூலகம் ஒன்றும் சிறப்பாக செயல்படு கிறது. இங்கு தினசரி, வார, மாத மற்றும் பருவ இதழ்கள் பலவும் வாங்கி வாசிக்கப்படுகின்றன. திருக்குறள் மற்றும் திருக்குறள் சார்ந்த புத்தகங்கள் மலிவு பதிப்பாகவும் விற்கப்படுகிறது.
திருவள்ளுவர் கழகத்தின் மீது அபிமானம் கொண்டவர்களின் நன்கொடையால், இந்த கழகம் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறது.

அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X