அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

* ம.முனீஸ்வரன், திருப்பத்தூர்: பெயர், நிம்மதி... இதில் எது மனிதனுக்கு தேவை?
பெயர் எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். நிம்மதி - இது தான் தேவை மனிதனுக்கு! இரவு தலையணையில் தலையைச் சாய்த்தால், உடனே தூக்கம் வர வேண்டும்; அது இல்லாத வாழ்க்கை நரகம்!

தி.பூராசாமி, கருவம்பாளையம்: தன் நேசிப்பை, ஒரு பெண் ஆணிடம் கூறலாமா?
இங்குள்ள ஆண்களில், 10 சதவீதம் மட்டுமே, 'ஜென்டில்மேன்'கள்! நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், அந்த, ௯௦ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக் கேடு வந்து விடும். எனவே, அதிக கவனம் வேண்டும்!

கு.முத்து, செங்கல்பட்டு: எந்த முடிவையும் என்னால் விரைவாக எடுக்க முடியவில்லையே...
பரவாயில்லை... கவலைப்படாதீர்கள்; வேகமான முடிவுகள், சில சமயங்களில் தீங்கையே விளைவிக்கும். வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை பயக்கும்.

அ.பா.மணி, தொண்டாமுத்தார்: இன்றைய மக்களின் அதிக விருப்பமாக இருப்பது எது?
வம்புகள்... தங்களைத் தவிர, மற்றவர்கள் பற்றிய வம்பு பேச்சு பேசுவதையே விருப்பமாக கொண்டுள்ளனர்.

* ஜெ.யோகராஜன், அண்ணாமலைநகர்: மற்றவர்களின் அறுவையிலிருந்து மீள நிறைய வழி சொல்கிறீர்கள். நாம் மற்றவர்களை அறுப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
நாம் அறுக்கும் போது, எதிராளி, 'திருதிரு'வென விழிப்பர். அக்கம் பக்கம், மேலே கீழே பார்ப்பர்; நம்மை திசை திருப்ப வேறு சப்ஜெக்ட் பேச முயல்வர். 'அவசர வேலை இருக்கு; அப்புறம் பார்ப்போமா...' என்பர். இவ்வளவு குறிப்புகளையும் நாம் உணராமல், தொடர்ந்து பேசினால், அடுத்த முறை நம் தலை தெரிந்தால், தப்பி ஓடி விடுவர்!

எஸ்.பி.கல்யாணசுந்தரம், ஆலங்குளம்: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?
உள்ளத்தில் இருந்து வராமல், உதட்டில் சிரிப்பைக் காட்டும் கள்ளச் சிரிப்பர்களைக் கண்டால், அலர்ஜி!

ஆர்.ராமர், குறிஞ்சிபாடி: ஒரு மனிதனால், எப்போது அறிஞனாக முடியும்?
தன் முட்டாள்தனத்தை உணர்ந்து, அவற்றை துறக்கும் போது அறிஞனாகிறான். ஆனால், நம் மக்களின் பெரும்பான்மையோருக்கு, அறிஞனாவதில் விருப்பமிருப்பதில்லை!

ச.செல்வராஜ், நரிமேடு: நான்கு பெண்கள் ஒன்று கூடினால், அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது என்கின்றனரே... உண்மையா?
பழங்கால, படிக்காத பெண்களுக்காக அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட சொலவடை இது. இன்றைய பெண்களில் அநேகர், குறைந்தபட்சம் பத்தாவது வரையாவது படித்து விடுகின்றனர். மேலும், என்னென்னவோ மேற்படிப்புகளும் படிக்கின்றனர்; ஒற்றுமையாக இருக்கின்றனர்; எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே, 'நூறு பெண்கள், ஐந்து நிமிடத்தில் தோழிகளாகி விடுகின்றனர்...' என வேண்டுமானால், இனி மாற்றிச் சொல்லாம்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shriram - chennai ,இந்தியா
04-ஆக-201410:52:34 IST Report Abuse
Shriram பெண்கள் எவ்வளுவுதான் படித்தாலும் அவர்களிடம் நீங்கள் சொல்லும் ஒற்றுமை இல்லை.இதை நான் வீம்புக்காக சொல்லவில்லை..என் அலுவலகத்தில் எத்தனையோ பெண்களை நேரில் பார்த்தும் ,பக்கத்து ப்ளாட்களில் வசிக்கும் பெண்களை பார்த்தும் என் சொந்த அனுபவத்தில் கூறுகிறேன்,அவர்கள் சேர்ந்த புதிதில்,அல்லது நடப்பின் ஆரம்பகாலங்களில் நல்ல நண்பிகளாக இருப்பார்கள்.ஆனால் போகப்போக பொறாமை என்னும் பெண்ணுக்கே உரிய DNA வில் கலந்துவிட்ட மாற்றவே முடியாத குணத்தால் புறம் பேசுவது , பழிபோடுவது என்று அவர்கள் நடப்பு (நட்பு) தலைகீழாக மாறுவதை பலமுறை கண்டும் கண்டுகொண்டும் இருக்கிறேன் ,, எனவே படிப்பு என்பது பெருந்தன்மையை பெண்களிடம் வளர்க்காது.
Rate this:
Share this comment
Cancel
Guna Seelan - Choolaimedu,இந்தியா
03-ஆக-201413:38:05 IST Report Abuse
Guna Seelan எந்த முடிவையும் என்னால் வேகமாக எடுக்கமுடியவில்லை என்று கேள்வி கேட்டவருக்கு அந்துமணியின் பதில் ‘வேகமான முடிவுகள்’என்றுமே தீங்கத்தைத்தான் விளைவிக்கும் என்ற கோணத்தில் அந்துமணி பதில் அளித்திருப்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை நான் கூறும் செய்தியில் இருந்துகொள்ளலாம். அன்று தி.மு.க. ஒரு சிறிய பிரச்சனைக்காக சன் டி.வியை எதிர்த்து கலைஞர் டி.வியை உடனே ஆரம்பித்தது. அதனால் கலைஞர் டி.வி. சிக்கலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குற்றச்சாட்டிலேயே அது பதவி இழந்தது.அந்துமணியின் பதில்கள் மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்து புரிந்து எழுதுவது அவருடைய பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது. அந்துமணியின் பதிலைப்படிப்பவர்கள் தயவு செய்து ஒவ்வொரு வாரமும் வரும் பதிலை சேகரித்து மொத்தமாக ஒரு வருடம் கழித்துப் படித்துப்பாருங்கள். அதன் சுவையே தனி. மற்ற பத்திரிகைகள் போல கவர்ச்சிகரமாகவோ. பந்தாவாகவோ அந்துமணியின் பதில் இருக்காது. ஆனால் வாழ்க்கைத்தத்துவம் இருக்கும் என்பதை நீங்கள் ஒரு வருடம் கழித்து அதைப்படித்துப்பார்த்தால் தெரியும். இதை வெறும் புகழ்ச்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் நான் கூறுவது போல் செய்து பாருங்கள். அப்போதுதான் அதன் உண்மை புரியும்.
Rate this:
Share this comment
Cancel
Guna Seelan - Choolaimedu,இந்தியா
03-ஆக-201413:12:54 IST Report Abuse
Guna Seelan நிம்மதியின் தேவையை அந்துமணி அற்புதமாகக் கூறியிருக்கிறார். படுத்தால் உடனே தூக்கம் வரவேண்டும். பெயரை எப்படிவேண்டுமானாலும் காசு கொடுத்து சம்பாதித்துவிடலாம். ஆனால் நிம்மதியை காசு கொடுத்து வாங்கமுடியாது. பெயருக்காகத் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் நிறையப்பேர்உண்டு. அந்துமணிக்கு இந்த பதிலுக்காக எவ்வளவு பரிசு கொடுத்தாலும் தகும்.சிறிய பதில். பெரிய சிந்தனை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X