திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

கடந்த, கி.பி., 1510ல், தமிழகம் உட்பட தென்னகம் முழுவதும், கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இருந்தது. சமுதாயத்தில், 'ஆடல் மகளிர்' என்போர் இருந்தனர். இதில் ஒரு வகையினர், கோவிலைச் சார்ந்தவர்; மற்றொரு வகையினர் சுதந்திரமாக வாழ்பவர்கள். இவர்கள் அனைத்து இனத்தவருடனும் சகஜமாக பழகுவதை சமுதாயம் குறை சொல்வதில்லை. இந்தப் பெண்கள், நன்கு எழுத படிக்க தெரிந்தவர்களாகவும், ஆடல், பாடல்களில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தனர்.
கோவில் பெண்களுக்கு சில முக்கிய கடமைகள் இருந்தன. தினமும், இறைவன் முன் ஆடிப் பாடுவதுடன், சாமி ஊர்வலத்தின் போதும், ஆடிச் செல்ல வேண்டும். தலை நகரத்தில் வசிக்கும் ஆடல் மகளிர், ஒவ்வொரு சனிக்கிழமையும், கிருஷ்ணதேவராயர் வணங் கும் தெய்வத்தின் முன், ஆட வேண்டும்.
பல சலுகைகளை அனுபவித்து வந்த இவர்கள், நகரின் பிரதான சாலையில், மாளிகை போன்ற அழகிய வீடுகளில் வசித் தனர்; பேரரசருடைய மாளிகையினுள் கட்டுப்பாடின்றி சென்று வந்தனர். ராணிகளுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டு, அவர்கள் எதிரிலேயும், சில சமயம், அரசருக்கு எதிரிலேயும் தாம்பூலம் தரித்தனர். போர்க் காலங்களில் அரசரது கூடாரங்களில், ஏராளமான ஆடல் மகளிர் இருப்பர். போரின் இடையிடையே மன்னர் இளைப்பாறும் நேரங்களில், இவர்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
—'பர்காட்டன் எம்பயர்' ஆங்கில நூலிலிருந்து.

திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாட்டு எழுதுபவர்கள், படைப்பு எழுத்தாளர்களா என்பது, விவாதத்துக்குரிய விஷயம். எழுத்தாளர்கள் திரைப்படத்துறைக்கு வருவது, அதில் கிடைக்கும் ஊதியத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் தான்.
இலக்கியத்திறன் படைத்த பல எழுத்தாளர்கள், திரைப்படத் துறைக்கு வந்த பின், அதிலுள்ள சிக்கல்களை உணர ஆரம்பித்தனர். கூண்டில் அடைபட்ட பறவை போல, தங்கள் சிறகின் ஆற்றலை இழந்து, 'எப்போது இதிலிருந்து மீள்வோம்...' என்று, தவிக்கத் துவங்கினர்.
திரைப்படத்திற்கு எழுதப்படும் எழுத்து, பலவகை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இதில், முக்கியமானது, இலக்கிய ரசனை அற்றவர்கள், எழுத்தாளனுக்கு, 'லகான்' போடுவது. கொஞ்ச நாள் அத்தகைய அவமதிப்பைப் பொறுத்துக்கொண்டு, பின், அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது அல்லது விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி போல, தீய வேண்டியிருக்கிறது.
— டிசம்பர் 1965, 'தீபம்' இதழில் மணிக்கொடி சீனிவாசன்.

ஈரோட்டில் டி.கே.எஸ்.,சகோதரர்கள் நாட கம் நடத்திக் கொண்டிருந்த சமயம். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அக்குழுவில் இருந்தார்.
அதே அரங்கில், அண்ணாதுரை நடிக்கும் நாடகம் ஒன்று, அன்று நடைபெற இருந்தது. நாடகம் துவங்கும் முன், நடிகர்கள், மேக்கப் போட்டுக் கொள்ள முற்பட்டனர்.
மேக்கப் அறைக்குள் கண்ணாடி முன் அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டி, 'இவருக்கு மேக்கப் போடு...' என்று, ராஜேந்திரனிடம் கூறினர்.
அரைகுறை மனதுடன், அந்த ஆளுக்கு, மேக்கப் போடத் துவங்கிய ராஜேந்திரன், முகத்தை இப்படி வைத்துக் கொண்டால், எப்படி மேக்கப் போடுவது... இப்படி திரும்பு; மேலே பார், அப்படித் திரும்பு...'' என்று, அதட்டினார்.
மேக்கப் போட்டுக் கொள்ள உட்கார்ந் திருந்தவர், எதுவும் பேசாமல், ராஜேந்திரன் சொன்னபடி எல்லாம் செய்தார். பின் அவர், 'இன்று என்ன விசேஷம்... ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறாய்?' என்று, கேட்டார் ராஜேந்திரனிடம்.
'இன்று அண்ணாதுரை நடிக்கும் நாடகம் நடக்கப்போகிறது; முதலிலிருந்து அவர் நடிப்பதை பார்க்க ஆவல். உங்களுக்கு, மேக்கப் போட்டு முடிப்பதற்குள், விடிந்து போய்விடும் போலிருக்கிறது. இனி, நானாவது, நாடகம் பார்ப்பதாவது; இப்போதே நாடகத்தை ஆரம்பித்திருப்பார்களே...' என்று, சலிப்போடு சொன்னார், ராஜேந்திரன்.
'கவலைப்படாதே; அந்த அண்ணாதுரை நான் தான்...' என்று மேக்கப்போட அமர்ந்திருந்தவர் கூறியதும். 'ஆகா... நீங்கள் தான் அண்ணாதுரையா...' என்று திகைத்துப் போனார், எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
'நாடக வாழ்வில்' என்ற நூலிலிருந்து.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - madurai,இந்தியா
06-ஆக-201400:12:11 IST Report Abuse
mohan போரின் இடையிடையே மன்னர் இளைப்பாறுறாரா? என்னங்க சொல்றீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X