அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

அன்பு சகோதரிக்கு —
என் வயது, 50; அரசு துறையில் அதிகாரியாக பணிபுரிகிறேன். எங்களது நெருங்கிய குடும்ப நண்பரின் மகளும், என் இளைய மகளும், சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில், ஒன்றாகவே படித்தனர். குடும்ப நண்பரும், அவரது மனைவியும் படித்தவர்கள், பண்புள்ளவர்கள்; இருவருமே அந்தஸ்தான பணியில் உள்ளனர்.
அவர்களது மகளோ, அதற்கு நேர்மாறானவள். ஒழுக்கமின்மை, சொல் பேச்சு கேளாமை, தன்னிச்சையாக மனம் போன போக்கில் நடந்து கொள்வது, ஆண்களுடன் போனில் மணிக்கணக்கில் பேசுவது என்று இருப்பாள். பலமுறை அறிவுரை கூறியும், திருந்தியபாடில்லை.
பள்ளி வேன் டிரைவரிடம், அவள் அடிக்கடி போனில் பேசுவதை அறிந்து, பள்ளி நிர்வாகத்திடம் கூறி, அவனை வேலையிலிருந்து நீக்க செய்தோம்.
பள்ளியில், எல்லாரும் அவளுடன் பழக தயங்கினர். ஆனாலும், என் மகளை அவளுடன் நட்புடன் இருக்க செய்தேன். பள்ளி மற்றும் டியூஷன் செல்லும்போது, இருவரையும் ஒன்றாகவே செல்ல சொன்னேன். அதனால், அவளது நடவடிக்கையில் சிறு மாறுதல் ஏற்பட்டது.
சிறிது காலத்திற்கு பின், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதைப் போல், உள்ளூர் ரவுடி ஒருவனுடன், அவள் பழக ஆரம்பித்தாள். எவ்வளவோ கண்டித்தும் பயன் இல்லை. போலீஸ் அதிகாரியாக இருக்கும், அவளது பெரியப்பாவிடம் கூறி, அவளுக்கு அறிவுரை கூறச் செய்தோம். அதிலும், பயனில்லை. இதனால், படிப்பில் கவனம் குறைந்து, பிளஸ் 2வில் குறைவான மதிப்பெண் பெற்றாள்.
அதன்பின், அவளது மனநிலையை ஒருமுகப்படுத்த, யோகா செய்ய சொன்னோம். மேலும், மனநல மருத்துவரிடம் சிகிச்சை அளித்தோம்.
அவளது குணம் சற்று மாறியதை அறிந்து, கல்லூரியில் சேர்த்தோம். அக்கல்லூரியில் பணிபுரியும், அவள் அம்மாவின் தூரத்து சொந்தக்காரரை, அவளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்தோம்.
கல்லூரியில் ஒருவன், இவளுக்கு அறிமுகமாகியிருக்கிறான். அவனுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது தெரிந்து, அதிர்ந்து போனோம்.
நாங்கள் உட்பட, குடும்ப உறுப்பினர் அனைவரும் அவளுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறினோம். தன் தாயின் நடவடிக்கையால் தான், இப்படி நடந்து கொள்வதாக கூறுகிறாள். 'தான் எந்தவிதத்தில் சரியில்லை...' என்று, அவள் தாய் புலம்புகிறார்.
ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும், படிப்பை பாதியில் நிறுத்தப் போவதில்லை என்றும், இப்போது பழகி வருபவரிடம் இருந்து விலகி விடுவதாகவும், படிப்பு முடிந்தவுடன், தன் ஆண் நண்பர்களில் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து, மணந்து கொள்வேன் என்று கூறுகிறாள். நாங்கள் இப்போது என்ன செய்வது?
*அப்பெண் கூறுவதை நம்பி, படிப்பை தொடர அனுமதிக்கலாமா?
*அவளுடைய நடத்தையை மாற்ற ஏதாவது வழி உண்டா?
*அவளுடைய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
*நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கலாமா?
நல்ல வழியை கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் சகோதரி.


அன்பு சகோதரி —
ஆங்கிலத்தில் எழுதிய உன் கடிதம் கிடைத்தது. தமிழ் வார இதழில் வரும் மனநல ஆலோசனை பகுதிக்கு, தமிழ் தெரிந்த நீ, ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருக்கிறாய். இது, உன் உயர்வு மனப்பான்மையை காட்டுகிறது.
உன் குடும்ப நண்பரின் மகள், கைபேசி உதவியுடன், ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் பேசுவதாகவும், முதலில் வேன் டிரைவர், பின் ரவுடி, பின் இன்னொருவன் என, பட்டியல் நீள்வதாகவும், படிப்பை முடித்ததும், ஆண் நண்பர்களில் ஒருவனுடன் ஓடிப்போக திட்டமிட்டிருப்பதாகவும், தன்னுடைய துர்நடத்தைக்கு முழுகாரணமும் தன் தாய்தான் என, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாகவும் கூறுகிறாய். அவள் மீதும், அவளின் தாய் மீதும் உள்நோக்கத்தோடு களங்கம் கற்பிக்கிறாயோ என, சந்தேகம் துளிர்க்கிறது.
நீ உண்மையைத்தான் கூறியிருக்கிறாய் என்றாலும், உன் கடிதத்தில், நெருங்கிய குடும்பத்தினரின் மகள், இவ்வளவு மட்டமாக இருக்கிறாள் என்ற குரூர சந்தோஷம் நிரம்பி வழிவது தெரிகிறது.
சகோதரி... ஒன்றை புரிந்து கொள். எல்லா மனிதர்களும் முழுக்க முழுக்க நல்லவர்களும் இல்லை, முழுவதும் கெட்டவர்களும் இல்லை. எல்லாருக்குள்ளும் தெய்வங்களும், சாத்தானும் சம அளவில் இடத்தை பங்கீட்டுதான் அமர்ந்திருக்கின்றனர். அதனால், ஒருவரின் குற்றங்களை பெரிதுபடுத்தி பேசுவதனால் மட்டும் அவர்களை திருத்தி, நல்லவர்களாக்கி விட முடியாது என்பதை உணர்.
உன் நண்பரின் மகள் விஷயத்தில், நீங்கள் அனைவரும் தான் முதல் குற்றவாளிகள். எப்படி என்று கேட்கிறாயா? பள்ளிக் குழந்தைக்கு மொபைல் வாங்கிக் கொடுத்ததுடன், அவளின் அன்றாட செயல்பாட்டை கவனிக்க மறந்தது உன் நண்பர் குடும்பத்தினர் செய்த முதல் குற்றம். அடுத்து உன்னைப் போன்றவர்கள்; சிறு விஷயத்தையும் ஊதி பெரிசாக்கி, சின்ன தவறையும் பூதாகரமாக்கி, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, மனதுக்குள் சந்தோஷம் காண்பவர்கள்.
பள்ளிச் சிறுமிக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்... அவள் முதன் முதலில் பள்ளி வேன் டிரைவருடன் பேசியவுடனே, ஒழுக்கம் கெட்டவள் என்ற நாமகரணத்தை சூட்டி, அவளைத் தனிமைப்படுத்தி, மனதுக்குள் தான் கெட்டவளோ என்ற எண்ணத்தை எல்லாரும் சேர்ந்து ஏற்படுத்தி விட்டீர்கள். அறிவுரை என்ற பெயரில், அவள் குற்றங்களை பட்டியல் போட்டு, அவள் மனதையும் சிதைத்து விட்டீர்கள்.
அவளிடம் உள்ள நல்ல குணங்களை, பண்புகளை அதிகமாக சொல்லி, அவள் குறைகளை மேம்போக்காக சுட்டி காட்டி, அன்பு காட்டி நல்வழிப்படுத்தியிருந்தால், அவள் தொடர்ந்து இத்தகைய தவறுகளை செய்திருக்க மாட்டாள்.
மேலும், பெரும்பாலான அப்பர் மிடில் கிளாஸ் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய தவறு, ஒரு பொருளின் அருமையை, அதன் மதிப்பை பிள்ளைகள் உணரு முன்பே, அவர்கள் கேட்டதுமே வாங்கிக் கொடுப்பது. இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், நீ கூறுகிறாயே... தான் தோன்றித்தனம்... அக்குணம் ஒரு குழந்தையிடம் வளர்வதற்கு, இது தான் காரணம். தவறுகள் மனிதர்களிடம் ஒட்டுமொத்தமாக வந்து குத்தகை எடுத்து ஒட்டிக் கொள்வதல்ல; ஒன்றிலிருந்து ஒன்றாக அவ்வப்போது வந்து ஒட்டிக் கொள்வது தான். அதற்கு மருந்து அறிவுரை அல்ல; அன்பு.
எந்தக் குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து விலகியிருக்கின்றனரோ அந்த குடும்பத்தில் பிள்ளைகள் இம்மாதிரி வழி தவறி போக வாய்ப்பு ஏற்படுகிறது. இது பெற்றோரின் தவறே தவிர, பிள்ளைகளின் தவறு அல்ல. உன் நண்பரும் அவர் மனைவியும், தங்கள் மகளிடம் அன்பும், நட்பும் காட்டி, மன நெருக்கத்தில் இருந்திருந்தால், இந்த பிரச்னைக்கு இடமிருந்திருக்காது.
தற்சமயம் பழகி வருபவனிடமிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறாள், அதனை நம்பலாமா வேண்டாமா என, கேட்டிருக்கிறாய். அவளை சந்தேகப்பட்டு, படிப்பை நிறுத்துவதை விட, படிப்பை அனுமதிப்பது மேல். ஒரு வேளை, அவள் காதலில் அல்லது திருமணத்தில் தோற்றாலும், படிப்பும், வேலையும் அவளை காப்பாற்றும்.
கைபேசி மூலம், பல ஆண் நண்பர்களிடம் பழகி வாழ்க்கையை தொலைத்த பெண்கள் யாரையாவது கூட்டிவந்து அவளிடம் பேசச் சொல்லலாம். மகப்பேறு மருத்துவர், எய்ட்ஸ் நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் மூலம், முறையற்ற ஆண் சகவாசங்கள் மூலம், பெண்களுக்கு நேரும் அவலங்களை எடுத்துரைக்க செய்யலாம்.
பிரச்னை முற்றியபின், அறிவுரை என்பது அனாவசியம். படிப்பை முடித்தவுடன், சொந்தத்திலே ஒரு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கலாம்.
எல்லா ஆண்களிடம் பேசியிருந்தாலும், தகுதியான ஒரே ஒரு ஆணிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள் என்றால், அவன் நல்லவனா, அவளை மணந்து, நல்லபடியாக குடும்பம் நடத்துவான் என்ற நம்பிக்கை இருந்தால், அவனுக்கே அவளை திருமணம் செய்து வைக்கலாம்.
பொதுவாக, ஒரு அறிவுரை: பெண்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து, இளங்கலை பட்டபடிப்பு முடிக்கும் வரை, கைபேசி வாங்கி தராதீர்கள். வாங்கி தர வேண்டிய கட்டாயம் வந்தால், 'போஸ்ட்பெய்ட்' கனெக்ஷனுடன் கூடிய கைபேசி வாங்கித் தாருங்கள்.
என்றென்றும் அன்புடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மருதாணி - சான் ஹோசே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஆக-201402:55:01 IST Report Abuse
மருதாணி எனக்கென்னமோ இந்த பொம்பள மேலதான் ரொம்ப சந்தேகமா இருக்கு. உதவி செய்யிற மாறி உபத்திரவம் செய்யிற பெண் மாறி தெரிகிறது. இது அந்த அடுத்த பெற்றோரர்களுக்கு தெரிஞ்சு கட் பண்ணி விட்டா நல்லா இருக்கும்.
Rate this:
Cancel
ibrahim - riyadh saudiarabia  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-201415:04:54 IST Report Abuse
ibrahim அன்புள்ள மருத்துவர் அவர்களுக்கு உங்களுடைய கருத்துக்கள் மிகவும் அற்புதமாக உள்ளது உங்களுடைய கருத்துக்கள் ஆணி அடித்தார் போல் உள்ளது உங்களுடைய அறிவுறைகள் மற்றும் நற்பண்புகள் மேலும் வளர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Rate this:
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
04-ஆக-201407:54:31 IST Report Abuse
meenavan 20 களில் இது இன்னும் திருட்டு தம்,மது அருந்துதல்,இன்னும் பிற பழக்கங்கள் எனப்பெருகுவதும் உண்மை.ஆண் திருமணம் வரை தாய் தந்தையிடம் சில விஷ்யங்களில் பொய் சொல்கிறான். திருமணத்தின் பின் மனைவியிடம் பல விஷயங்களில் பொய் சொல்கிறான். பிரச்னை என்னவென்றால், தாய் தந்தையை முழுமையாக நம்பிவிடுகின்றனர். மனைவிகள் சுத்தமாக நம்புவதில்லை. இது கொஞ்சம் தலைகீழாக வேண்டும்.தாய் தந்தையர் சந்தேகப்படட்டும். காரணம் அந்த வயது புரியாத அல்லது புரிந்தும் புரியாத அல்லது புரிந்ததா புரியாததா என்றே தெரியாத வயது. மனைவிகள் நம்பட்டும்.அந்த வயது பொறுப்பு வந்த வயது…. தவறுகள் எங்கென்றால் சந்தேகிப்பதில் அல்ல, ஒரு சந்தேகம் இருக்கும்போது அதை கையாளும் விதத்தில்.சில தவறுகளை கண்டும் காணாமல் விடுங்கள்.அவை வயதுக்கோளாறு தவறுகள். தானே சரியாகும். பின்னாளில் ஒரு புன்னகையைக் கொடுக்கும். சில தவறுகளை கண்காணியுங்கள். அறிவுறுத்துங்கள். அவை அவனைப் பாதிக்கும்.இதில் மது புகை சூது அடங்கும்.சில தவறுகளை உடனே தலையிட்டு நிறுத்துங்கள்.இதில் திருட்டு,மற்றும் சமுதாயத்தை பாதிக்கும் தவறுகள் அடங்கும். சில தவறுகள் படிப்பிலிருக்கும் கவனத்தை சிதைத்துவிடும். கல்லூரிக்கு சென்ற பின் அதீத கண்காணிப்புகள் செய்வது மிகவும் கடினம் அல்லது தவறு. அப்போதைய தேவை இன்னும் பலமான உறவு.இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சி இருக்குமா என்பது சந்தேகம்.அதே சமயம் நீங்கள் அவசரமாக செய்து வைக்கும் திருமணம் அவளது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடலாம்.அந்தப் பெண்ணின் தேவைகளும் வேதனைகளும் ஒரு நல்ல நட்பின் மூலம் அறிய முடியும். உங்கள் மகள் அல்லது வேறு நண்பிகள் அவளுக்கு இருந்தால் அவர்கள் மூலம் அறியுங்கள்.அதனடிப்படையில் செயல்படுங்கள்…..நட்புடன் மீனவன். (திட்டாதீர்கள், கருத்துதான் எழுதினேன்..தொடர்கதையில்லை…. கொஞ்சம் வெவரமா வெளக்கிட்டேனா...அதான்...ரெண்டு பாகம்)
Rate this:
vazhi pOkkan - madurai ,இந்தியா
05-ஆக-201417:14:10 IST Report Abuse
vazhi pOkkanஉங்கள் பெற்றோர் நீங்கள் செய்ததை அறியவில்லை என்றா நினைகிறீர்கள்? கண்டும் காணாமலும் (எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும்) என்று அறிந்த மேதைகள் அந்த கால பெரியவர்கள். புத்தகம் படித்து வளர்க்காமல் - கூட்டு குடுமபத்தில் இருந்து நடைமுறை அறிவில் கற்றவர்கள். பிரெஞ்சு அறிவாளி சொல்லும் மனோ தத்துவம் என்று இல்லாது பாட்டி சொல்லி தந்த மனோ தத்துவத்தை பின்பற்றியவர். எங்கு இடறுகிறது என்றால் - பெஸ்ட் ஆப் போத் வேர்ல்ட்ஸ் - என்று அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் எடுத்து தடுமாறுவதுதான் என்பது என் எண்ணம். ஒன்று மேலை நாடு போல சுதந்திரம் தாருங்கள் இல்ல என்றால் நம் நாடு போல பெரியவர்களின் அறிவுரையை கேளுங்கள். வளர்ச்சி என்று மேலை கலாசாரத்தை ஆதரித்து ஆனால் அதன் மற்ற பலன்களை வேண்டாம் என்பது எப்படி? இந்த நவீன, இணையத்தால் இணைந்த உலகில் அது இயலாத ஒன்று....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X