இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

ராஜீவ் கொலையாளிகள் வேடத்தில் வாரிசு நடிகர்கள்!
முன்னாள் பிரதமர் ராஜீவை கொலை செய்ததாக கடந்த, 22 ஆண்டுகளாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. இப்போது, அவர்கள் ஜெயிலில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களை மையப்படுத்தி தற்போது, வாய்மை என்றொரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தில், முருகன் வேடத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ், பேரறிவாளன் வேடத்தில், கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, சாந்தன் வேடத்தில் பாண்டியராஜன் மகன் ப்ருத்வி நடிக்கின்றனர்.
சினிமா பொன்னையா.

ஒரு பாட்டுக்கு நடனமாடிய விஜயசேதுபதி!
கதாநாயகன் விஷயத்தில் விஜயசேதுபதி எப்படி எந்த இமேஜும் பார்ப்பதில்லையோ, அதேமாதிரி, யாராவது ஒரு பாடலுக்கு ஆட வேண்டும், கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று அழைத்தாலும் அவர் மறுப்பதில்லை. அவ்வகையில், அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் நாயகனான தினேஷ் நடித்த, திருடன் போலீஸ் படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் விஜயசேதுபதி. இதற்கு முன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் முதன்முறையாக பாடலுக்கு நடனமாடிய அவர், இரண்டாவதாக இப்படத்தில் நடனமாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பொ.,

ஹன்சிகாவுக்கு ஷாக் கொடுத்த சமந்தா!
அனுஷ்கா மற்றும் தமன்னாவின் ஆதிக்கம் குறைந்து விட்டதால், இனி, கோடம்பாக்கத்தின் நம்பர் - ஒன் நாம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு, சமந்தாவின் வரவு, பெரிய இடியாக அமைந்துள்ளது. அஞ்சான் மற்றும் கத்தி படத்தை தொடர்ந்து, விக்ரமின் புதிய படத்தில் நடிக்கவிருக்கும் ஹன்சிகா, அடுத்தடுத்து, மேலும் சில முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிக்கவும் பேசிக் கொண்டிருப்பதால், தன் வளர்ச்சிக்கு சமந்தா தடையாக இருப்பாரோ என்று, அச்சத்தில் இருக்கிறார். அதேசமயம், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் ஹன்சிகா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, விஜய் உள்ளிட்ட அனைத்து மேல்தட்டு கதாநாயகர்களையும், தன் வட்டத்திற்குள் கொண்டு வர, திரைமறைவு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
- எலீசா.

ராம்கோபால் வர்மாவுக்கு தடை போட்ட பத்திரிகைகள்!
இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. இவரது இயக்கத்தில், சமீபத்தில், ஐஸ்கிரீம் என்றொரு படம், ஆந்திராவில் வெளியானது. அப்படத்தை பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து, செய்தி வெளியிட்டன. இதனால், கொதித்துப் போன அவர், 'சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் விமர்சிக்கின்றனர்; இவர்க.ௌல்லாம் இருட்டில் இருந்தபடி, குரைக்கும் நாய்கள்...' என்று, பத்திரிகைகளை, இணையதளத்தில் சாடியிருந்தார். இதனால், கொதித்தெழுந்த ஆந்திர பத்திரிகையாளர் சங்கம், ராம் கோபால்
வர்மாவுக்கு தக்க பதிலடி கொடுத்து செய்தி வெளியிட்டதோடு, 'இனிமேல் அவர் சம்பந்தப்பட்ட எந்தவொரு செய்தியையும், மீடியாக்கள் யாரும் வெளியிடக் கூடாது...' என்று, தடை விதித்து உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ராம்கோபால் வர்மா, 'நான் எல்லா பத்திரிகைகளையும் அப்படிச் சொல்லவில்லை; சில இணையதளங்களை தான் அப்படி குறிப்பிட்டிருந்தேன்...' என்று, முன்னணி பத்திரிகைகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!
அட்டகத்தி படத்தில் அறிமுகமான அந்த பெங்களூரு நடிகைக்கு, மேல்தட்டு நடிகர்களுடன் ஜோடி போடும் ஆசை மேலோங்கி நிற்கிறது. அதனால், தற்போது எந்த விழாக்களுக்கு வந்தாலும், அங்கு முன்னணி கதாநாயகர்களை வைத்து, படம் இயக்கும் இயக்குனர்களை கண்டால், ஓடிச்சென்று அருகில் அமர்ந்து கடலை போடுகிறார் அம்மணி.

கதாநாயகனாகி விட்ட வாசனை காமெடியனுக்கு, அடுத்து, முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ஜோடி சேரும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால், தற்போது சூப்பர் நடிகரின் படத்தில் நடிக்கும் அந்த இந்தி நடிகைக்கு, 'ரூட்' போட்டு வருகிறார். ஆனால், நடிகை தான், அவருக்கு இன்னமும் கிரீன் சிக்னல் கொடுக்கவிலலை.

துளிகள்!
* இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தையடுத்து, இடம் பொருள் ஏவல் படத்திலும், விஜயசேதுபதிக்கு ஜோடியாக
நடிக்கிறார் நந்திதா.
* ரஜினியின், லிங்கா படத்தில், படம் முழுக்க அவருடன் இணைந்து காமெடி செய்கிறார் சந்தானம்.
* 'ஜெயம் ரவி - அஞ்சலி நடிக்கும் படத்தில், நான் குத்தாட்ட நடனம் ஆடுவதாக வெளியான செய்தி வதந்தி...' என்று மறுப்பு கூறியுள்ளார் காஜல் அகர்வால்.
* விஷ்ணு நடிப்பில் வெற்றி பெற்ற, முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதிலும், விஷ்ணு - நந்திதா ஜோடி
சேருகின்றனர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajasekar - abbasiya,குவைத்
03-ஆக-201416:16:13 IST Report Abuse
rajasekar ரஜினி படத்திற்கு நல்ல காமடியன் இல்லைனா படம் ஊதிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X