எல்லை பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
எல்லை பாதுகாப்புப் படையில் காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
00:00

பார்டர் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை அண்டை நாடுகளுடன் நமது நாட்டிற்கான எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக நிறுவப்பட்ட ஒரு பாதுகாப்புப் படையாகும். பாகிஸ்தான் போரின் உணர்தலாக இந்த படை நிறுவப்பட்டது. போர் இல்லாத நிலையில் எல்லையைப் பாதுகாப்பது, எல்லைகளில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பது போன்றவை இந்தப் படையின் முக்கிய பணிகளாகும். இந்தப் படையில் ஆண்களுக்கான டிரேட்ஸ்மென் பிரிவிலான கான்ஸ்டபிள் காலியிடங்கள் 1670ஐ நிரப்புவதற்காக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: பி.எஸ்.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதி உடையவர்களுக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்போ, வொகேஷனல் பயிற்சியோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வருட பணியனுபவமோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: டாகுமென்டேஷன், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் ஸ்டாண்டர்டு டெஸ்ட், எழுத்துத் தேர்வு, டெக்னிகல் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டரை IG/DIG/Commandant என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்திற்கு ஏற்றபடி மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் உரிய இணைப்புகளை சேர்த்து விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கேற்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.08.2014
இணையதள முகவரி: http://www.bsf.nic.in/en/recruitment.html

Advertisement

 

மேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X