சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறதே...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2010
00:00

கே.எஸ்.ஆறுமுகம், கோவை: 41 வயதான எனக்கு ரத்தப் பரிசோதனையில் எல்.டி.எல்., கொழுப்பின் அளவு 190ஆக இருந்தது. வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110 மி.கி., இருந்தது. எல்.டி.எல்., அளவை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
எல்.டி.எல்., என்பது  Low Density Lipoprotein என்ற வகை கொழுப்பு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளில் மிகவும் கொடூர பாதிப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு. இந்த எல்.டி.எல்., கொழுப்பின் அளவை குறைத்தால் ரத்த நாளங்களுக்கு பல வகைகளில் நன்மை ஏற்படும். ரத்தக்குழாய் நோய்களை தடுக்க இதன் அளவு 100 மி.கி., கீழ் இருந்தாக வேண்டும்.
மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் இந்த கொடூர நோய்கள் பாதிக்காமல் இருக்க, எல்.டி.எல்., அளவு 70 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். இந்த எல்.டி.எல்., அளவை குறைப்பதற்கு முதல் நடவடிக்கையாக வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் எண்ணெய், உப்பு, சர்க்கரையின் அளவை குறைப்பது, மனதை நிம்மதியாக வைத்து இருப்பதுடன், தினமும் நடை பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம். மாத்திரை வகைகளில், "ஸ்டேட்டின்' வகை மாத்திரைகள் எல்.டி.எல்., கொழுப்பின் அளவை குறைக்கும்.
நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்து அவசியம், "ஸ்டேட்டின்' வகை மாத்திரைகளை எடுப்பது முக்கியம். உங்களுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 110 மி.கி., இருந்தால் அது அதிகளவு தான். அதனால் நீங்கள் சர்க்கரை நோயாளிகளை போல, உணவு கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

எஸ்.சிவானந்தன், பரமக்குடி: எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக, "ஸ்டென்ட்' சிகிச்சை செய்யப்பட்டது. நான் மூன்று மாதங்கள் புகைப்பதை நிறுத்தி இருந்தேன். தற்போது மீண்டும் புகைப்பழக்கத்தை துவக்கி விட்டேன். இதனால் எனது இதயத்திற்கு பாதிப்பு ஏதும் வருமா?
புகைப்பழக்கம் உடலுக்கு பல வகைகளில் கொடூர தீங்குகளை விளைவிக்கிறது. குறிப்பாக திடீர் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒரு இதய நோயாளிக்கு புகைப்பழக்கத்தை நிறுத்தினால் கிடைக்கும் பலன், ஒரு, "ஆஞ்சியோபிளாஸ்டி' அல்லது பை-பாஸ் அறுவை சிகிச்சையில் கிடைக்கும் பலனை விட அதிகமாக இருக்கும்.
நீங்கள் மீண்டும் புகைப்பிடிக்க ஆரம்பித்து இருப்பது நீங்கள் மறுபடியும் மாரடைப்பை இருகை நீட்டி அழைப்பதை போல உள்ளது. அதனால் நீங்கள் உடனடியாக புகைப்பழக்கத்தை அறவே நிறுத்தியாக வேண்டும்.

ஆர்.ரத்தினசாமி, திண்டுக்கல்: எனக்கு ஆறு மாதங்களாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக Amlodipine  மற்றும் Atorva Statin மாத்திரைகளை எடுத்து வருகிறேன். தற்போது எனது இரு கால்களிலும் வீக்கம் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?
தற்போதுள்ள ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் Amlodipine  மிக நல்ல மாத்திரை. இது ஒரு சிலருக்கு காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இதை கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் Telmisartan  போன்ற வேறு நல்ல ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.

ஜெரால்டு, வக்கம்பட்டி: எனக்கு சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆனால், "டிரெட்மில்' பரிசோதனை, "எக்கோ கார்டியோகிராம்' பரிசோதனை செய்து பார்த்ததில், நார்மலாகவே உள்ளது. எனக்கு வேறு ஏதும் பரிசோதனைதேவைப்படுமா?
சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்பட்டால் அது இதய நோயின் அறிகுறியே.
பொதுவாகவே நெஞ்சுவலி ஏற்பட்டவருக்கு, "டிரெட்மில்' பரிசோதனை செய்து பார்த்தால் மாறுதல் ஏற்படும். ஒரு சிலருக்கு, "டிரெட்மில்' பரிசோதனையில் வெளிப்படாமலும் இருக்கலாம். எனவே, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனையை அவசியம் செய்தாக வேண்டும்.
இதில் உங்கள் இருதயத்தின் ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா, இல்லையா, அடைப்பு இருந்தால் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கண்டறியலாம். அதற்கேற்ப சிகிச்சை முறையை மேற்கொள்வது நல்லது.
- டாக்டர் சி.விவேக்போஸ்,  மதுரை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X