கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
00:00

கேள்வி: மைக்ரோ காமர்ஸ் என்பது, இணைய வர்த்தகத்தினைக் குறிக்கும் சொல்லா? அல்லது வேறு பொருளாதாரக் கோட்பாடா?
நீ. சிகாமணி, தேனி.
பதில்:
Microcommerce என்பது இணைய தள வர்த்தகத்தோடு சேர்ந்த சொல் தான். மிகச் சிறிய அளவில் பணம் கைமாறப்படும்போது, இந்த சொல்லைக் கொண்டு குறிப்பிடுவார்கள். எடுத்துக் காட்டாக, இணையதளம் ஒன்றில் பதியப்பட்டுள்ள பாடல், அல்லது திரைப்பட விடியோ பைலைக் காண்பதற்கு மிகச் சிறிய அளவில் கட்டணம் செலுத்தினால், நமக்கு அனுமதி தரப்படும். அத்தகைய பரிவர்த்தனையில், செலுத்தப்படும் கட்டணம் மிக க் குறைவாகவே இருக்கும். இந்த பரிமாற்றத்தை Microcommerce எனக் குறிப்பிடுவார்கள்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியபோது, என் டெஸ்க்டாப்பில், வால் பேப்பர் காட்சிகளை மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை மாறும்படி அமைத்தேன். இப்போது விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன். இதில் இந்த காட்சி மாற்றத்தை அமைக்கும் வழி தெரியவில்லை. செட் அப் வழிகளைக் கூறவும்.
எ.கார்த்திகேயன், பழநி.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டத்திலும், வால் பேப்பர் காட்சிகளை, குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாறும்படி அமைக்கலாம். டெஸ்க்டாப்பில், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். மெனு கிடைக்கும் போது, கீழாக உள்ள Personalize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Personalization என்னும் திரை இப்போது காட்சி அளிக்கும். இதில் உள்ள themes பலவற்றில், உங்களுக்கு அவை பிடித்திருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் உங்களுடைய போல்டரையே பயன்படுத்த விரும்பினால், திரையின் கீழாக உள்ள Desktop background என்பதில் கிளிக் செய்திடவும். மேலாக உள்ள Picture location என்பதில், Browse கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் விரும்பும் படங்கள் உள்ள போல்டருக்குச் சென்று படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதே திரையின் கீழாக, படங்கள் மாறுவதற்கான நேரத்தினையும் மாற்றும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த படங்களை ஒரே வரிசையில் அல்லாமல், அதன் போக்கில் மாற்றி மாற்றி காட்டும் படியும் அமைக்க ஆப்ஷன் இங்கு கிடைக்கும்.

கேள்வி: நான் வேர்ட் 2007 புரோகிராமினை, விண்டோஸ் 7ல் பயன்படுத்தி வருகிறேன். டாகுமெண்ட்களை மூடுகையில், வேர்ட் புரோகிராமும் மூடப்படுகிறது. முன்பு வேர்ட் 2003 பயன்படுத்துகையில், டாகுமெண்ட்களை மூடினாலும், வேர்ட் புரோகிராம் மூடப்பட மாட்டாது. இது போல வேர்ட் 2007ல் புரோகிராமிலும் செய்திட முடியுமா?
கா. மாணிக்கம், திருப்பூர்.
பதில்
: நீங்கள் சொல்வது சரியே. முந்தைய வேர்ட், எக்ஸெல் ( ரிப்பன் இடைமுகம் இல்லாமல் வந்த போது) பதிப்புகளில், இரண்டு Close பட்டன்கள், வலது மேல் மூலையில் தரப்படும். டாகுமெண்ட்களை மூடிய பின்னரும், வேர்ட் மூடப்படாமல், நம் அடுத்த செயல்பாட்டிற்குக் காத்திருக்கும். இதன் மூலம் எந்த எந்த பைல்களை மூட வேண்டுமோ, அதற்கான குளோஸ் பட்டன்களை மட்டும் அழுத்தி, மூடிவிடலாம். வேர்ட் திறந்தபடியேஇருக்கும்.
ரிப்பன் இடைமுகம் வந்த பின்னர், ஒரே ஒரு Close பட்டன் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தி, பைலை மூடுகையில், பைல்கள் மட்டுமின்றி, புரோகிராமும் மூடப்படுகிறது. இதனைத் தவிர்த்து, பைல்களை மூடிய பின்னரும்,வேர்ட் புரோகிராம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என எண்ணினால், Ctrl+s அழுத்தி பைலை சேவ் செய்த பின்னர், Ctrl+W அழுத்தலாம். அல்லது Ctrl+F4 அழுத்தலாம். இது அப்போதைய பைலை உடன் மூடும். ஆனால், புரோகிராம் விண்டோ திறந்தபடி இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். என் பணி தொடக்கமே, என் நிறுவனத்தின் இணைய தளம் சென்று, சில தகவல்களை அறிந்து பார்ப்பதுதான். எனவே, பிரவுசர் இயங்கத் தொடங்குகையில், என் நிறுவன இணையப் பக்கத்துடன் அது தொடங்க வேண்டும். இதனை குரோம் பிரவுசரில் அமைக்கும் வழிகளைக் கூறவும்.
-என். சந்திரா லட்சுமி, திருப்பூர்.
பதில்:
மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், “New Tab” பக்கம் காட்டப்படும். இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம். சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள். அல்லது நீங்கள் விரும்புவது போல, குறிப்பிட்ட இணைய தளப் பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள். இந்த விருப்பம் மட்டுமின்றி, வேறு சில ஆப்ஷன்களுக்குமான வழிகளை இங்கு தருகிறேன். அவற்றை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.
1. முதலில் wrench பட்டனைக் கிளிக் செய்திடவும்.
2. “Options” தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது “Options” டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள “Basics” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. “On startup”என்ற பிரிவில், “Open the following pages” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும்.
6. இதற்கு “Add” பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு “Add page” என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும்.
7. அப்போதுதான் திறக்கப்பட்ட இணைய தளத்துடன் பிரவுசர் திறக்கப்பட, “Use current pages” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
8. காலியாக உள்ள பக்கத்துடன் பிரவுசர் திறக்கப்பட, “Add page” என்ற டயலாக் பாக்ஸில், about:blank என டைப் செய்திடவும். பின்னர், “OK” பட்டனில் அழுத்தி, டயலாக் பாக்ஸை மூடவும்.

கேள்வி: ஜிமெயில் வழியாக 25 எம்.பிக்கு மேல் அளவிலான பைல்களை அனுப்ப முடியவில்லை. சிலர் இதற்கென உள்ள க்ளவ்ட் சர்வர்களைப் பரிந்துரை செய்கின்றனர். அவை பாதுகாப்பனதுதானா? பத்திரமாக வெகுநாட்கள் பயன்படுத்தலாமா? என்று தெரியவில்லை. நீங்கள் எவற்றைப் பரிந்துரைக்கிறீர்கள்?
கா. சுப்ரமணியம், புதுச்சேரி.
பதில்:
பெரிய அளவிலான பைல்களை, நீங்கள் இலக்கு வைத்திடும் நபர்களுக்கு அனுப்ப, இணையத்தில் பல சர்வர்கள் இயங்குகின்றன. நீங்கள் உங்கள் நீண்ட கடிதத்தில் குறிப்பிடும், உங்கள் நண்பர்கள் பரிந்துரைத்த சர்வர்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. சிறந்த சேவை தருபவை என என் அனுபவத்தில் தெரிந்து கொண்டவற்றை இங்குச் சுருக்கமாகத் தருகிறேன்.
1. கூகுள் ட்ரைவ்: பலர் ஜிமெயில் பயன்படுத்தினாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கூகுள் ட்ரைவ் பயன்படுத்துவதில்லை. 'Attach files' ஐகான் அருகே, இதற்கான ஐகானைப் பார்க்கலாம். புதிய பைல்களை நேரடியாக, கூகுள் ட்ரைவிற்கு அப்லோட் செய்திடலாம். அல்லது ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்ட பைல்களை நீங்கள் அனுப்ப விரும்பும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 10 ஜி.பி. வரை இதில் பைல்களை அனுப்பலாம். தற்போதைய ஜிமெயில் அளவினைக் காட்டிலும் இது 400 மடங்கு பெரியது. மேலும் இதுவும் இலவசமே.
2. வி ட்ரான்ஸ்பர் (Wetransfer) : பொதுவாக, இது போன்ற இணைய தள சர்வர் வழி பைல்களை அனுப்ப முயற்சிக்கையில், அதில் நாம் ஒரு அக்கவுண்ட் ஒன்றை, நம்மைப் பற்றிய தகவல்களுடன் திறந்தாக வேண்டும். இந்த வி ட்ரான்ஸ்பர் தளத்தில், அது போல அக்கவுண்ட் திறக்க வேண்டியதில்லை. wetransfer.com தளம் சென்று, 2 ஜி.பி. வரை அளவிலான பைல்களை, நம் நண்பர்களுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டியவரின் மின் அஞ்சல் முகவரியை அமைத்து, அவருக்கான சிறிய அளவிலான செய்தியையும் டைப் செய்து, பைலை அப்லோட் செய்திடலாம். பைல் மிக வேகமாக அனுப்பப்படும்.
3. டிராப்சென்ட், Dropsend. இந்த தளம் அனுமதிக்கும் பைலின் அளவு 2 ஜி.பி. ஆனால், இதில் கூடுதலாக, பாதுகாப்பு தரும் வகையில் AES Security encryption வசதி தரப்படுகிறது. பைல்களை இணைக்கையில், தானாக உருவாக்கப்படும் பாதுகாப்பு குறியீடு ஒன்றும் தரப்படுகிறது.
4. ட்ராப் பாக்ஸ் (Dropbox). இதில் அக்கவுண்ட் ஒன்றை அமைக்க வேண்டும். 2 ஜி.பி. வரை அளவிலான பைலை அனுப்பலாம். இதிலும் பாதுகாப்பு வசதி தரப்படுகிறது. அத்துடன் இரண்டு நிலை சோதனை முறையும் பின்பற்றப்படுகிறது. இதன் க்ளவ்ட் சர்வரில் பதியப்படும் அனைத்தும், அவரவருக்கு மட்டுமே உரிமையுடையது. எனவே, யார் எந்த பைலைப் பார்த்தார்கள் என்பதனை எப்போதும் அறிந்து கொள்ளலாம்.
5. ஸ்கைட்ரைவ் (Skydrive): உங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து அமைத்துவிட்டால், இதில் 7 ஜி.பி. வரை பைல்களை சேவ் செய்து வைக்கலாம். ஒருமுறை அனுப்ப்ப்படும் பைலின் அளவு 2 ஜி.பி.
இணைய தளத்தில் இன்னும் பல தளங்கள் இது போல சேவையினை இலவசமாக வழங்கி வருகின்றன.

கேள்வி: இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கேப்சா டெஸ்ட் (CAPTCHA) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறது. இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் கேப்சா என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?
- சி. அமுது குமார், திருமங்கலம்.
பதில்:
நல்ல கேள்வி. இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. கேப்சா என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உங்களுக்குக் காட்டப்படும் கேப்சா சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய கேப்சா சோதனை தரப்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X