கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
00:00

கேள்வி: நான் திரைப்படப் பாடல்கள், வாத்திய இசைப் பாடல்கள் கொண்ட சிடிக்கள் வைத்துள்ளேன். இவற்றை ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் செல்ல விரும்புகிறேன். இவற்றைப் பதிய வேண்டும் என்றால், எந்த அளவில் ப்ளாஷ் ட்ரைவ் வாங்க வேண்டும்?
கா. சுப்புராஜ், போடி.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் எல்லாம் எம்.பி.3 பார்மட்டில் உள்ளவை என்று எண்ணுகிறேன். இவை 3 நிமிடம் இசைக்கப்படும் பாடல்கள் என வைத்துக் கொண்டால், எந்த அளவில் ப்ளாஷ் ட்ரைவ் வாங்க வேண்டும் எனக் கீழே தருகிறேன். இது உத்தேசமாகத்தான். மிகச் சரியாக யாரும் அளவிட முடியாது. ஏனென்றால், பாடல்களின் பைல்களின் அளவு, நேரம் ஒரே மாதிரியாக இருந்தாலும், வித்தியாசமாக இருக்கலாம். 500 பாடல்கள் 2 ஜி.பி., 1000 பாடல்களுக்கு 4 ஜி.பி., 2,000 பாடல்களுக்கு 8 ஜி.பி. 4,000 பாடல்களுக்கு 16 ஜி.பி. இப்படியே கணக்கிடலாம்.

கேள்வி: புதியதாக சாம்சங் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இதன் கீ போர்டை, விரல் வைத்து இழுத்தால், இரண்டாகப் பிரித்து இயக்கலாம் என்று என் நண்பன் கூறினார். ஆனால், இதில் அந்த இயக்கம் இல்லை. எப்படி இதனை செயல்படுத்துவது?
எம்.கிருஷ்ணன், தேவாரம்.
பதில்
: நீங்கள் குறிப்பிடும் கீ போர்ட் பிரித்தலும் இணைத்தலும் வசதி, ஐ பேட் சாதனத்தில் மட்டுமே கிடைக்கும். சாம்சங் ஆண்ட்ராய்ட் போனில் இல்லை. ஐபேட் சாதனத்தில் கிடைக்கும் ஆன் ஸ்கிரீன் கீ போர்டில் ஏதேனும் இரண்டு கீகள் நடுவே ஒரு விரலை வைத்து இழுத்தால், இரண்டாகப் பிரியும். இது நாம் டெக்ஸ்ட் எண்டர் செய்வதற்கு எளிதாக இருக்கும். மீண்டும் ஒரு கீயில் வைத்து இழுத்தால், இணைந்துவிடும்.

கேள்வி: இணைய இணைப்பு இல்லாமல், என் இமெயில்களைப் படிக்க முடியுமா? நான் தயாரிக்கும் இமெயில்களை அனுப்ப முடியுமா? அதற்கு என்ன செய்திட வேண்டும். எந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்திட வேண்டும்?
எஸ். காவ்யா, கோவை.
பதில்
: காவ்யா, இணைய இணைப்பு இல்லாமல், உங்களுக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பெற இயலாது, அதே போல பதில் அஞ்சல்களை அனுப்ப இயலாது. ஆனால், இணைய இணைப்பில் அஞ்சல்கள் அனைத்தையும் உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றிய பின்னர், நிதானமாகப் படிக்கலாம். அவற்றிற்கு பதில் அஞ்சல்களைத் தயார் செய்திடலாம். இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. அவுட்லுக், விண்டோஸ் மெயில் அப்ளிகேஷன் அல்லது தண்டர்பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்குத் தேவைப்படும். இவற்றில் ஒன்றை இன்ஸ்டால் செய்துவிட்டால், இவை உங்களுக்கு வந்திருக்கும் அஞ்சல்களை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் வைத்திடும். பின்னர், நேரம் கிடைக்கும்போது, அவற்றைப் படிக்கலாம். பின்னர், பதில் அஞ்சல்களைத் தயார் செய்து வைத்து, மொத்தமாக, இணைய இணைப்பின் உதவியுடன் அனுப்பலாம்.

கேள்வி: பெறும்பாலான நேரங்களில், தேடல் தளங்கள் மூலமாக ஒன்றைத் தேடுகையில், நாம் தேடாத சில குறித்தும் தகவல்கள் தரப்படுகின்றன. அவை அடங்கிய இணைய தளங்களின் முகவரிகள் தரப்படுகின்றன. நாம் தேடுவது மட்டுமே கிடைக்க என்ன செய்திட வேண்டும்.
-கா. வசந்த மாலா, திருமங்கலம்.
பதில்:
கம்ப்யூட்டர் மலரில், கூகுள் சர்ச் இஞ்சினில் தேடுதலை எளிமையாக்கும் பல வழிகள் தரப்பட்டு வருகின்றன. அவற்றைக் கடைப்பிடிக்கவும். நீங்கள் தேடுவதனை மட்டும் எப்படி தர முடியும்? இஞ்சின் உங்கள் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள முடியாதே! நீங்கள் தான் அது புரிந்து கொள்ளும் வகையில், உங்கள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் KISS method என்று ஒரு வழியினைக் கூறுவார்கள். இதற்கு Keep It Simple & Specific என்று பொருள். அதாவது, நாம் அமைக்கும் சொற்கள் துல்லியமாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு http://www.worldstart.com/moregoogletips/ என்ற முகவரியில் உள்ள கட்டுரையைப் படிக்கவும்.

கேள்வி: நான் என் நிறுவனப் பணிகளில் தயாரிக்கும் ஒர்க்ஷீட்கள் வர்த்தக நிதி நடவடிக்கை சம்பந்தப்பட்ட்தால், அவற்றில் ரூபாய் மதிப்பிற்கு முன்னால், Rs. என அமைய வேண்டும் என்றால், என்ன செய்திட வேண்டும்? நான் விண்டோஸ் 7ல், ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன்.
-என்.முகமது உசேன், காரைக்கால்.
பதில்:
இப்போது ரூபாய்க்கான புதிய அடையாளம் ஒன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், கீ போர்ட் மற்றும் பிரிண்டர் பிரச்னையால், அது இன்னும் பிரபலமாகவில்லை. இனி, உங்கள் பிரச்னைக்கு வருவோம். முதலில் இதனை அமைக்க வேண்டிய ஒர்க் ஷீட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின் Format கிளிக் செய்து அதில் Cells என்ற பிரிவைத் திறந்து கொள்ளுங்கள். பின் கிடைக்கும் Format Cells என்ற விண்டோவில் Category கட்டத்தில் Currency என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதன் வலது புறம் பல்வேறு கரன்சி வடிவங்கள் தரப்படும். அதில் Rs Urudu என இருக்கும்; அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த செல்லில் எண்களுக்கு முன் Rs இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 என் கம்ப்யூட்டரில் இயங்கி வருகிறது. இதில் உள்ள பைல்களைக் காண விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்றால், கார்ட் ரீடர் ட்ரைவ் காட்டப்படுவதில்லை. பலமுறை ரீஸ்டார்ட், டிபிராக் செய்து பார்த்துவிட்டேன். ஒன்றும் பிரயோஜனமில்லை. ஏன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டலேஷனில் கோளாறு இருக்குமா?
கே.எஸ். ஸ்நேகலதா, சென்னை.
பதில்:
இந்தப் பிரச்னைக்கு ஏன் டிபிராக் வரையில் சென்றீர்கள் எனத் தெரியவில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டலேஷனில் கோளாறு இல்லை. ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்திலேயே கோளாறு உள்ளது. இதுதான் உண்மை. இந்தப் பிரச்னையைப் பலர் எங்களுக்கு எழுதி உள்ளனர். மாறா நிலையில், விண்டோஸ் 7, காலியாகவுள்ள ட்ரைவ்களைத் தன் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டுவதில்லை. இதற்கான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை. மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால், இதனைக் காட்டும்படி சில மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். இந்த பட்டனுக்கு மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் Change Search Options என டைப் செய்திடவும். உடன், பல முடிவுகள் மேலாகக் காட்டப்படும். இதன் தொடக்கத்தில், Change Search Options for files and folders என்று ஒரு வரி கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் வியூ டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர், ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு Hide empty drives in the Computer folder என்று இருப்பதனைக் காணவும். இதன் முன்னால் காணப்படும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரால் கிளிக் செய்தால், டிக் அடையாளம் எடுக்கப்பட்டு விடும். பின்னர், Apply மற்றும் OK பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இனி எந்த மீடியாவினை உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தாலும், அந்த ட்ரைவ் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் காட்டப்படும்.

கேள்வி: ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் எப்படி செயல்படுகின்றன? என்று ஒரு கட்டுரை படித்தேன். அதில் இறுதியில் Zero Day Exploit என ஒரு வகை வைரஸ் தாக்குதல் குறித்து எழுதப்பட்டிருந்த்து. இதனைக் கண்டறிவது கஷ்டம் என்றும், சில நாட்கள் கழித்தே தீர்வு காண முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தன்மை எதனைக் குறிக்கிறது?
-ஆர். சேவியர் தனராஜ், மதுரை
பதில்
: இது வைரஸ் தாக்குதல் வகை அல்ல. அதற்கான ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் வல்லுநர்கள் மேற்கொள்ளும் காலத்தினைக் குறிக்கிறது. காலம் என்று சொல்வதைக் காட்டிலும் கால இடைவெளி என்பதாகும். அதுவும் மோசமான கால இடைவெளியாகும். இதன் விளக்கத்தினை இங்கு காணலாம். வைரஸ் ஒன்று பரவத் தொடங்கினால், உடனே அது, ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பார்வைக்குச் சென்று, அதற்கான எதிர்ப்பு புரோகிராமினை அவர்கள் உருவாக்கி வழங்குவார்கள். இதனைத்தான் வைரஸ் டெபனிஷன் என்று கூறுவார்கள். எதிர்ப்பு புரோகிராம் உருவாகி, நாம் அதனை அப்டேட் செய்துவிட்டால், அந்த வைரஸால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், வைரஸ் தாக்கத் தொடங்கிய நாளிலிருந்து, அதற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உருவாக்கப்பட்டு கிடைக்கும் காலம் வரையிலான இடைவெளிக் காலம் உள்ளதல்லவா? அது தான், ஸீரோ டே எக்ஸ்ப்ளாய்ட் என்பது. அந்த நாளில் நாம் குறிப்பிட்ட வைரஸ் முன்னால், பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வெறும் ஸீரோவாக, நிராயுதபாணியாக, வைரஸுக்கு எதிரான போர்க்களத்தில் உள்ளோம் என்று கூட இதற்குப் பொருள் கொள்ளலாம்.
சரியான பொருள் என்னவெனில், ஆண்ட்டி வைரஸ் தயாரிக்கும் பணியில் உள்ளவர்கள், குறிப்பிட்ட புதிய வைரஸை எதிர்த்து புரோகிராமினைத் தயார்ப்படுத்த நாள் இல்லை. அதற்குள் அந்த வைரஸ் வேகமாகப் பெருகும் இல்லையா? இதைத் தான் ஸீரோ டே எனக் குறிப்பிடுகின்றனர்.

கேள்வி: நான் புதியதாக, சாம்சங் காலக்ஸி எஸ் 4 பயன்படுத்துகிறேன். இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2. ஜெல்லி பீன் உள்ளது. எனக்கு வேண்டும் என்றே, ஒரு சிலர் மோசமான எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்புகிறார்கள். ஸ்மார்ட் போனில் இதனைத் தடுக்கும் வசதி உள்ளது என்று படித்திருக்கிறேன். அதனை எப்படி மேற்கொள்வது என்று உடனே உங்கள் மலரில் பதிப்பிக்கவும். எனக்கு அது மிகப் பெரும் உதவியாய் இருக்கும்.
-எஸ். தமிழ் மலர், கோவை.
பதில்
: உங்கள் கடிதம் கண்டு வருத்தமுற்றேன். கவலைப்பட வேண்டாம். வேண்டுமென்றே, இது போன்ற செய்திகளை அனுப்புபவர்களிடமிருந்து வரும் தகவல்கள், அழைப்புகளை நாம், நம் போனில் தடுக்க முடியும். நீங்கள் உங்கள் கடிதத்தில் கூறி இருப்பதைப் போல, நாம் வர்த்தக நோக்கத்துடன் அனுப்பப்படும் ஸ்பேம் மெயில்களைத் தடை செய்திடும் பில்டர்களைப் பயன்படுத்தினாலும், அவை தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளன என்பது உண்மையே. உங்களின் பிரச்னைகளுக்கு வேறு ஒரு வழி தருகிறேன். ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களுக்கு இதற்கான தீர்வு தரும் புரோகிராம் ஒன்று உள்ளது.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் “SMS blocker” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாக https://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும். இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு SMS blocking என்பதிலும் Spam auto blocking - என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, “Block” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். “Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும்.
அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X