வேர்டில் டூல் பார்களை அமைக்கும் வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2010
00:00

கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளிலும் டூல்பார்கள் தரப்படுகின்றன. டூல்பார்களில், நாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கான டூல் ஐகான்கள் வரிசையாக அமைக்கப் படுகின்றன. இதன் மூலம், இந்த ஐகான்கள் மீது ஒரு கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுக்களில், விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, நான்கு ஐந்து கிளிக்குகளில், ஒரு வேலையை நம்மால் முடிக்க முடியும். எடுத்துக் காட்டாக, எம்.எஸ். வேர்ட் தொகுப்பில், சில கிளிக்குகளில், ஒரு சொல்லை, அல்லது சொற்கள் அடங்கிய தொகுதியை, அழுத்தமாகவோ, சாய்வாகவோ, அடிக்கோடிட்டோ அமைக்க முடியும். பார்மட் மெனு தேர்ந்தெடுத்து, பாண்ட் செலக்ட் செய்து, அதன் பின் போல்டு அல்லது மற்றவற்றின் மீது கிளிக் செய்து மேற்கொள்ளும் பணியினை, ஒரு சில கிளிக் மூலம் மேற்கொள்ளலாம்.
வேர்டில் இது போல நிறைய டூல்கள் உள்ளன. இவற்றை எப்படி டூல்பார்களில் அமைத்து இயக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு பலரும் தற்போது பயன்படுத்தி வரும் வேர்ட் 2003 தொகுப்பிற்கான உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை இதற்கு முன் வந்த தொகுப்புகளுக்கும் உதவும். சில குறிப்புகள் வேர்ட் 2007க்கும் தரப்பட்டுள்ளன.
1.எந்த டூல்பார்கள் திரையில் வேண்டும்?
இதற்கான விடை இது சரி அல்லது தவறு என்று கூற முடியாது. எந்த டூல்பார்கள் என்பது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட  தேவைகளைப் பொறுத்தே அமையும். அனைத்து டூல்பார்களையும் திரையின் மேலாக அமைத்துக் கொண்டால், பின்னர், டெக்ஸ்ட் அமைக்க மிக மிகக் குறைந்த இடமே கிடைக்கும். ஏற்கனவே எந்த டூல்பார்கள் திரையில் காட்டப்பட்டுள்ளன என்று அறிய, மெனு பாரில் View  அழுத்தி, கர்சரை Toolbars  என்பதில் கொண்டு சென்றால், அருகே ஒரு மெனு விரிந்து, அதில் திரையில் உள்ள டூல்பார்கள் அனைத்தும் டிக் அடையாளத்துடன் காட்டப்படும். கூடுதலாக ஒரு டூல் பார் வேண்டும் என்றால், அந்த பிரிவில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் போதும். தேவையற்றவை என்று கருதும் டூல்களில் டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால், அவை மறைக்கப்பட்டுவிடும்.
2. டூல் பார்களைத் தனித்தனியே காட்ட:
இந்த மெனுவில் இரண்டு டூல் பார்களில் டிக் அடையாளம் கொண்டிருந்து, ஆனால் மேலாக ஒரு டூல் பார் மட்டுமே காட்டப்பட்டிருந்தால், இரண்டும் ஒன்றாக அடுத்தடுத்து இணைப்பாகக் காட்டப் பட்டிருப்பதனைக் காணலாம்.  இந்த டூல்பார்கள், தனித்தனியாகத்தான் காட்டப்பட  வேண்டும் என நீங்கள் விரும்பினால்,Tools மெனுவிலிருந்து Customize   என்பதில் கிளிக் செய்திடவும். (அல்லது View  மெனு சென்று, Toolbars  தேர்ந்தெடுத்து, அதன்பின் Customize என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.  அல்லது ஏதேனும் ஒரு டூல்பாரில் ரைட் கிளிக் செய்து, அதில் கிடைக்கும் மெனுவில், Customize  தேர்ந்தெடுக்கவும்.) பின்னர் Options  டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show Standard and Formatting Toolbars on two rows” என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.  பின்னர்  Close  என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
டூல்பாரில்  தேவைப்படாததை நீக்கவும், புதியனவற்றை இணைக்கவும் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம். ஒவ்வொரு டூல்பாரின் வலது பக்கத்திலும், ஒரு சிறிய கீழ் விரி அம்புக்குறி இருக்கும். இதனை அழுத்தினால், இரண்டு ஆப்ஷன்ஸ் கிடைக்கும். மவுஸ் கர்சரை  Add or Remove பட்டன் மீது கொண்டு செல்லவும். பின்னர் எந்த டூல் பார் மீது செயல்பட வேண்டுமோ அதன் மீது கொண்டு செல்லவும். (எ.கா. Standard )  இப்போது அந்த டூல் பாருக்குரிய அனைத்து பட்டன்களும் காட்டப்படும். இந்த பட்டியலில் ஏற்கனவே காட்டப்பட்ட டூல் பார்களில், டிக் அடையாளம் இருக்கும். இவற்றின் மீது கிளிக் செய்தால், அவை டூல்பாரிலிருந்து நீக்கப்படும். இல்லாதவற்றின் மீது டிக் செய்தால், அவை மேலே இணைக்கப் பட்டுக் காட்டப்படும். எந்த டூல்பாரையும், ஏற்கனவே அது இருந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், பட்டியலின் கீழாக உள்ள  Reset Toolbar  என்பதில் கிளிக் செய்திடவும்.
3. புதிய டூல்பார்களை அமைக்கும் வழிகள்
நாமாகச் சில டூல்பார்களை இத்தொகுப்புகளில் உருவாக்கலாம். இதில் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கட்டளைகளை அமைக்கலாம். அல்லது மற்ற டூல்பார்களில் இல்லாத கட்டளை களுக்கான டூல்பாரையும் அமைக்கலாம்.
இதற்கு நீளமாக மெனு பாரினை ஒட்டி உள்ள  ஒரு டூல்பாரின் வலது பக்கம் தரப்பட்டிருக்கும், கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். இதில் Show Button on One Row  Add or Remove ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் Add or Remove  பிரிவில் கர்சரைக் கொண்டு சென்று, பின்னர் அங்கு கிடைக்கும் கஸ்டமைஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Toolbars  டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பாக்ஸில்  New என்பதில் கிளிக் செய்திடவும். நியூ டூல் பார் பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் அமைக்க இருக்கும் புதிய டூல்பாருக்கான பெயர் ஒன்றைத் தரவும். நீங்கள் அமைக்கும் இந்த பெயர், வியூ மெனுவில் டூல்பார் துணை  மெனுவில் காட்டப்படும் என்பதால், புரிந்து கொள்ளும் வகையில் அந்த பெயரினை அமைக்கவும்.              இதில் Make Toolbar available to:  என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த டூல்பார் அனைத்து டாகுமெண்ட்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், இதில்  Normal ®  என்பதைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.  இப்போது Commands என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.  இப்போது கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் Categories  என்னும் பிரிவு இருக்கும். இதில் பைல் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வலது பக்கம் பைல் மெனு கட்டளைகளைக் காட்டும். இன்னும் கூடுதலான கட்டளைகளைப் பார்க்க வேண்டும் என்றால், இந்த பட்டியலில் கீழே சென்று, All commands  என்பதனைப் பார்க்கவும்.  இப்போது எந்த பைல் கட்டளையை நீங்கள் அடிக்கடி பயன்படுத்து கிறீர்களோ, அந்த கட்டளையை, மவுஸ் கர்சரால் பிடித்து அழுத்தியவாறே, புதிய டூல்பாருக்குக் கொண்டு வரவும்.  இவ்வாறு அழுத்தப்படுகையில் கர்சர் ஒரு பெருக்கல் குறியாகத் தோற்றமளிக்கும். பின்னர், இதனைப் புதிய டூல்பாரில் இடுகையில், அது + அடையாளமாக மாறும். இங்கு வந்த பின் மவுஸ் பட்டனை விட்டுவிடவும். இந்த கட்டளை டூல் பாரில் காட்டப்படும்.
அனைத்து கட்டளைகளுக்கும் ஐகான்கள் இருப்பதில்லை. இல்லாத கட்டளைகளை புதிய டூல்பாரில் இணைக்கும் போது, பெயர் ஒன்று காட்டப்படும். இந்த லேபிளை, ஐகானாக மாற்றவும் முடியும். அதற்கு அந்த பட்டனில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Default ஸ்டைல் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த லேபிள் மறைந்து, ஒரு பட்டன் காட்டப்படும். இந்த பட்டன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பட்டியலில் இமேஜ் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஐகானாக அமைக்கவும்.
ஐகானுக்குப் பதிலாக, உங்களுக்கு லேபிள் தான் வேண்டும் என்றால், ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, இமேஜ் அண்ட் டெக்ஸ்ட் என்பதில்  கிளிக் செய்தால் Image and Text காட்டப்படும். இதனை இங்கு தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இவ்வாறு புதிய டூல்பாருக்கான கட்டளை மட்டும் ஐகான் +டெக்ஸ்ட் அமைத்த பின்னர், கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் உள்ள குளோஸ் பட்டனை அழுத்தி வெளியேறவும்.  மீண்டும் டூல்பார்களை எடிட் செய்திட வேண்டும் என்றால், மேலே காட்டியபடி மெனு மற்றும் பட்டியல்களைப் பெற்று, டூல்பார்களை நீக்கலாம், இணைக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X