கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2010
00:00

கேள்வி: சமீபத்தில் என்னுடைய எக்ஸ்பி கம்ப்யூட்டரில் ஸ்கைப் பதிந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் இருக்கையில் அதனை இணைத்துப் பயன்படுத்த முடியவில்லை. கம்ப்யூட்டரில் மெக் அபி செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பும் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது? ஸ்கைப் இயங்காதா? – என். சந்தோஷ் ராஜா, திருமங்கலம்
பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், ஸ்கைப் இன்டர்நெட்டுடன் இணைக்கப்படுவதனைத் தடுக்கிறது. பயர்வால் தொகுப்புகள் இந்த வகையில் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. தொடர்பு கொள்ள முயற்சிக்கும் சாப்ட்வேர் இயங்கும் தன்மை மற்றும் அந்த சாப்ட்வேர் தன்னைக் காட்டிக் கொள்ளும் தன்மை. இந்த இரண்டும் பயர்வால் தொகுப்புடன் ஒத்துப் போகவில்லை என்றாலோ, அல்லது அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றாலோ, இது போல தொடர்பு கிடைக்காத நிலை உருவாக்கப்படும். உங்கள் மெக் அபி அதைத்தான் செய்கிறது. இதனை எளிதாகச் சரி செய்திடலாம். ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். மெக் அபி செக்யூரிட்டி சென்டரைத் திறக்கவும். இடது புறமாக உள்ள, பெர்சனல் பயர்வால் ப்ளஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்படும். இதில் Skype.exe   என்று உள்ள வரி அருகே கர்சரைக் கொண்டு வரவும்.  இதன் அருகே உள்ள டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். அப்போது கிடைக்கும் மெனு பட்டியலில் Allow Full Access  என்பதில் கிளிக் செய்திடவும்.  பின்னர் இந்த விண்டோவினை மூடவும். இனி ஸ்கைப் தொகுப்பிற்கு இணைப்பு கிடைக்கும்.

கேள்வி: நான் ஒரு தணிக்கை நிறுவனம் நடத்தி வருகிறேன். இதில் என் வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளை, கம்ப்யூட்டரில் போட்டு வைத்துள்ளேன். பழைய கம்ப்யூட்டரை டிஸ்போஸ் செய்திட முடிவு செய்துள்ளேன். அதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை கழட்டி, சுத்தியலால் தட்டி உடைத்தால் மட்டுமே, அதில் உள்ள டேட்டா மற்றவர்கள் முயற்சிக்கையில் கிடைக்காது என்று சொல்கின்றனர். உண்மையா? வேறு வழிகள் உள்ளனவா? –பி.மருதராஜன், மதுரை
பதில்: தயவு செய்து இந்த வழியைப் பின்பற்ற வேண்டாம். பழைய கம்ப்யூட்டரை வந்த விலைக்கு விற்பனை செய்கையில், ஹார்ட் டிஸ்க்கை கழட்டிக் கொண்டு, கொடுத்துவிடுங்கள். அதற்கு முன் அந்த ஹார்ட் டிஸ்க் இயங்கும் நிலையில் எரேசர் (Eraser)  போன்ற புரோகிராம்கள் மூலம் அழித்துவிடலாம். இந்த புரோகிராமினை இயக்குகையில், எத்தனை முறை இதில் எழுதி அழிக்க (number of ‘passes’)  எனக் கேட்கப்படும். மூன்று அல்லது நான்கு என கொடுத்து அழித்துவிடலாம். கழற்றி வைத்து சுத்தியலால் தட்டினால், சிறிய துகள்கள் எகிறி வெளியே வந்து உங்கள் கண், காது, மூக்குக்குள் நுழைய வாய்ப்புகள் உண்டு. ஏன் இந்த ரிஸ்க்?

கேள்வி: என் நண்பர்கள் குழுவிலிருந்து சில பைல்கள் அட்டாச் ஆகி வந்தன. அவற்றின் துணைப் பெயர்கள் .wmv மற்றும் .pps. ஆனால் இவற்றின் மீது டபுள் கிளிக் செய்தாலும் திறக்கவில்லை. இவை எந்த புரோகிராம் கொண்டு திறக்க வேண்டும். அவை எங்கு கிடைக்கும்?  –சி.கே. ரஞ்சித் குமார், நங்கநல்லூர்
பதில்: இவை உங்களிடம் இல்லாத புரோகிராம் கொண்டு அமைக்கப்பட்ட பைல்களாகும். இருப்பினும் இன்று எந்த புரோகிராமினையும் திறக்க உதவும் அப்ளிகேஷன்களை இலவசமாக இணையத்தில் வைத்தே திறக்கலாம். இணைப்பில் வந்த என்ற துணைப் பெயருடன் வந்த பைலை உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் விண்டோஸ் மீடியா பிளேயர் என்ற புரோகிராம் மூலம் திறக்கலாம். இது ஒரு வீடியோ கிளிப். முதலில் இணைப்பில் வந்துள்ள பைலை டவுண்லோட் செய்து உங்கள் கம்ப்யூட்டரின் டெஸ்க்டாப்பில் வைக்கவும். பின்னர், அதன்மீது டபுள் கிளிக் செய்தால் தானாக இந்த பைல் திறக்கப்படும். இதற்கும் இயக்கப்படவில்லை என்றால், நீங்களாக விண்டோஸ் மீடியா பிளேயரைத் திறந்து, இந்த பைலின் ஐகானை இழுத்து அதில் விட்டாலே போதும். பைல் இயக்கப்படும். விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்கவில்லை என்றால், இதற்கு இணையான நிறைய புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் வி.எல்.சி. என்னும் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். துணைப் பெயர் கொண்ட பைல் மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட் என்னும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் உருவாக்கப்பட்டதாகும். எம்.எஸ். ஆபீஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்றால், இதற்கான இலவச வியூவர் தொகுப்பின் மூலம் நீங்கள் இதனைக் காணலாம். இணையத்தில் இதனைப் பெறலாம்.

கேள்வி: விஸ்டா ஹோம் பிரிமியம் சிஸ்டத்துடன் என் கம்ப்யூட்டர் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் டிஜிட்டல் மீடியா கீ போர்டு பயன்படுத்துகிறேன். இதில் திடீரென எஸ் கீ செயல்பட மறுக்கிறது. இதனை மற்ற கம்ப்யூட்டரில் இணைக்கும் போதும் அந்த கீ இயங்கவில்லை. ஷிப்ட் கீயுடனும், கண்ட்ரோல் கீயுடனும் சேர்த்து அழுத்திய போதும் இது இயங்கவில்லை. இதனை எப்படி சரி செய்திடலாம்? –ஆர். முருகதாஸ், மதுரை
பதில்: கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் மிக அதிகமாக வெளியே உள்ள தூசியால் பாதிக்கப்படுவது கீ போர்டு தான். இதனை நாம் வெளியே மட்டும் ஒரு துணி கொண்டு சுத்தம் செய்தால் போதாது. கீ போர்டு இணைப்புகளை நீக்கிவிட்டு, தனியே எடுத்து, அதனைப் பின்புறமாகக் கழற்றி, உள்ளே இருக்கும் தூசுகளை அறவே நீக்கி மறுபடியும் சரியாக அனைத்தையும் இணைத்துப் பார்க்கவும். நிச்சயமாய் எஸ் கீ இயங்கும். இன்னொரு வழியும் உள்ளது. மேலாக கீயினை மட்டும் பாதுகாப்பாக நீக்கியும் பார்க்கலாம். ஏதேனும் உணவுத் துகள், அல்லது வேறு ஒரு சிறிய துகள் இருக்கலாம். ஆனால் இது சற்று ரிஸ்க்கான சமாச்சாரம். கீ இணைப்பு உடைந்து போகலாம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger)  பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்துவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது.  இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும்  என்று வழி காட்டவும். –எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்
பதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை  எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது. எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options  தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced  டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse  செக்ஷன் செல்லவும்.  Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others)    என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.

கேள்வி: கல்லூரி பயன்பாட்டிற்கென டெல் லேப்டாப் கம்ப்யூட்டர்  ஒன்று வாங்கிப் பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் 7 மற்றும் மெக் அபி ஆண்ட்டி வைரஸ் இயங்குகிறது. இதில் இன்டர்நெட் பிரவுஸ் செய்கையில், சில நாட்களாக, இணையப் பக்கங்களின் மேலாக, விளம்பரங்கள் வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் செட்டிங்குகளில் என்ன அமைப்பு மேற்கொண்டாலும், மீண்டும் மீண்டும் இவை வருகின்றன. இதனை எப்படி தடுக்கலாம்? ஸ்பை பாட் அமைத்து தடுக்க முயன்றால், மெக் அபி இயங்குவது தடைபடுமா? –கே.டி. ஸ்நேகா  சுரேஷ், கோவை
பதில்: நீங்கள் எழுதியுள்ளதிலிருந்து, இந்த விளம்பரங்கள் ரோல் ஓவர் என்று சொல்லப்படும் வகையில், தனி சிறிய விண்டோவாக, உங்கள் இணையப் பக்கங்களின் மேலே காட்டப் படுகின்றன. இதனை பாப் அப் பிளாக்கர் என்னும் இவற்றைத் தடை செய்திடும் வசதி மூலம் நிறுத்தலாம். இவை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ளன. இவற்றை செட் செய்த பின்னரும் கிடைக்கிறது என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ஸ்பைவேர் வந்து தங்கி இருக்கலாம்.  இதனை ஸ்பை ஸ்பாட் அல்லது வேறு ஒரு ஸ்பை வேர் புரோகிராம் கொண்டு நீக்கலாம். இவற்றை இன்ஸ்டால் செய்து இயக்கினால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இயங்குவதில் பிரச்னை ஏற்படாது. இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பதிந்து, இரண்டை யும் ஒரே நேரத்தில் இயக்கினால்தான், பிரச்னை ஏற்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தீபா - திருப்பூர்,இந்தியா
14-அக்-201014:54:25 IST Report Abuse
தீபா ஒரு டாகுமெண்டை டௌன்லோட் செய்வதற்கு முன் அதனுடைய அளவை தெரிந்து கொள்வது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
தீபா - திருப்பூர்,இந்தியா
14-அக்-201014:38:15 IST Report Abuse
தீபா நான் விண்டோஸ் விஸ்டா உபயோகிக்கிறேன். இப்பொழுது விண்டோஸ் மீடியா பிளேயர டீபால்ட்டாக உள்ளது. விஎல்சி ஐ டீபால்ட்டாக உபயோகிக்க என்ன செய்வது?.
Rate this:
Share this comment
Cancel
சக்தி - திrupur,இந்தியா
12-அக்-201015:42:51 IST Report Abuse
சக்தி கம்ப்யூட்டரை வேகம் செய்வது எப்படி இன்டெர்நெட் ஸ்லோவாகா உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X