தலை சிறந்த ஆசிரியர்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2014
00:00

செப்டம்பர் 5. இந்த தினம் பள்ளியில் பயிலும் மாணவர்களால் மறக்க முடியாத தினமாகும். அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இவருடைய பிறந்த நாள் தான்!
இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வியாளர்; தத்துவ ஞானி; அரசியல் அறிஞர்.
1888 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி திருத்தணியில் பிறந்தார். இவரது தந்தை வீராசாமி; தாய் சீதம்மா. இவர்கள் ஆன்மிக செயல்பாடு களில் ஈடுபட்டு வந்தனர். 1896ல் ராதாகிருஷ்ணன் பள்ளி படிப்புக்காக திருப்பதி அனுப்பப்பட்டார்.
திருப்பதியில் ஆங்கில மிஷினரி பள்ளியில் நான்கு ஆண்டுகள் படித்தார். பின்னர் வேலூரில் இருந்த எலிசபெத் ராட்மேன் வர்கீஸ் கல்லூரியில் 1904ம் ஆண்டு வரை பயின்றார். இதை தொடர்ந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்தார். இங்கு இவர் பிஸிக்கல் சயின்ஸ் பாடத்தை நுட்பமாகவும், ஆர்வத்துடனும் கற்றார்.
முதுகலை படித்த பின்னர் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது இங்கிலாந்து சென்று படிப்பதற்காக உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். அதே நேரம் சென்னையில் வேலை தேடி போராடிக் கொண்டிருந்தார்.
இந்த சிரமமான சூழலில் வில்லியம் ஸ்கின்னர் என்பவரது உதவியால், சென்னை மாநில கல்லூரியில் தற்காலிகமாக ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்போது உளவியல், ஐரோப்பிய தத்துவம் போன்ற பல பாடங்களை நடத்தினார்.
தருக்கம், ஒளிவுக் கோட்பாடு, ஒழுக்கவியல் கோட்பாடு ஆகிய பாடங்களில் தனி சிறப்புடன் விளங்கினார்.
இந்திய, ஐரோப்பிய இதழ்களில் தனது எழுத்துக்கள் பிரசுரமாவதில் அக்கறை காட்டினார். முதுகலையில் அவர் படைத்த ஆய்வு கட்டுரையை கார்டியன் பிரஸ் வெளியிட்டது. இவரது உளவியல் விரிவுரைகளும் தொகுக்கப்பட்டு தனி நூலானது.
ஓர் அறிஞராக வளர்ச்சி கண்ட ராதாகிருஷ்ணன் 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் தலைவரானார்.
தென்னிந்தியாவில் இருந்து கல்கத்தா போயிருந்தார். முற்றிலும் புதிய சூழலில் கிடைத்த தனிமையை பயன்படுத்தி "இந்திய தத்துவம்' என்ற நூலின் இரண்டு பாகங்களை எழுதி முடித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 1926ல் உரை நிகழ்த்த வரும்படி ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் அங்கு சென்றார்.
ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1931ல் நியமிக்கப்பட்டார். பின்னர் 1939ல் வாரணாசி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார்.
யுனெஸ்கோவில் இவரது பங்கு முக்கியமானது. 1946 முதல் 1951 வரை இதன் செயற்குழுவில் இந்திய பிரதிநிதியாக அங்கம் வகித்தார். பல்கலைக் கழக பாடத் திட்ட குழுவுக்கு தலைமை ஏற்ற ராதாகிருஷ்ணன், அதன் அறிக்கையில் ஆக்கப் பூர்வமான பல பரிந்துரை களை தெரிவித்திருந்தார். இவை, சுதந்திர இந்தியா வின் உயர் கல்விக்கு உத்வேகம் அளித்தன.
ஜவஹர்லால் நேரு இவரை மாஸ்கோவுக் கான இந்திய தூதராக நியமித்தார். தொடர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், பின்னர் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார் ராதாகிருஷ்ணன்.
1954ல் பாரத ரத்னா விருது அளித்து கவுரவிக்கப்பட்டார். 1967ல் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற ராதாகிருஷ்ணன் 1975 ஏப்ரல் 17ம் தேதி காலமானார்.
***

இவர்தான் ஆசிரியர்!
ஒருவர் வகிக்கும் பதவிகளில் மிக உன்னதமான பதவி ஆசிரியர் பதவி யாகும். அந்த புனிதப் பணியை அடைய தன்னை படித்து, படித்து மெருகேற்றி கொண்டார் ராதாகிருஷ்ணன்.
அதோடு மட்டுமல்லாமல், படித்ததற்கு ஏற்றப்படி நடந்து கொண்டார். அதனால் அவரை ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக நாடு போற்றியது. ஒரு நாட்டின் எதிர் காலமே ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. அதனை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
சமீப காலமாக, சில ஆசிரியர்கள் மூலம் வருகின்ற புகார்கள் களையப்பட்டு இப்பணியின் மேன்மை காக்கப்பட வேண்டும்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X