இது தேவையா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2014
00:00

ஆல மரக்கிளையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. அந்த வழியாக, தேங்காய் வியாபாரி ஒருவர் தன் தலையில் தேங்காய் மூட்டையை சுமந்தபடி ஆலமரத்தின் அருகே வந்தார்.
"அப்பப்பா, இன்று வெயிலோடு எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வியாபாரத்தை செய்தோம். ஒரே களைப் பாக இருக்கிறது. இந்த ஆல மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாமே' என்று தலையில் இருந்த தேங்காய் மூட்டையினை ஆலமரத்தடியில் இறக்கி வைத்தார். பின்னர் தானும் மரத்தடியில் அமர்ந்தார்.
அப்போது மரத்தின் மேலே கீச்... கீச்... என்று சத்தம் கேட்கவே, அண்ணாந்து பார்த்தார்.
ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த குரங்கானது தேங்காய் வியாபாரியைப் பார்த்து பல்லை இளித்தது. அந்த குரங்கைப் பார்த்த தேங்காய் வியாபாரி உற்சாக மடைந்தார்.
"நம் வீட்டின் பக்கம் குரங்காட்டி ஒருவன் வசித்து வருகிறான். அவனிடம் இந்தக் குரங்கைப் பிடித்துக் கொடுத்தால், நமக்குப் பணம் கொடுப்பான். நாம் எப்படி யாவது இந்தக் குரங்கினை அவனிடம் பிடித்துக் கொடுத்திட வேண்டியதுதான்' என்று நினைத்தான்.
"மரத்தில் இருக்கிற குரங்கு நம் அருகில் வந்தால் தானே அதை பிடிக்க முடியும். குரங்கைப் பிடிக்க என்ன செய்வது?' என்று நீண்ட நேரம் யோசனை செய்தான்.
அப்போது அவன் மனதில் ஓர் யோசனை தோன்றியது. உடனே தன் தேங்காய் மூட்டையை அவிழ்த்தான். அதிலிருந்து ஒரு தேங்காயை எடுத்தான்.
அந்த தேங்காயை இரண்டாக உடைத்தான். உடைத்த தேங்காயின் இரு மூடிகளையும் தன் அருகே வைத்தான். இந்த தேங்காய் மூடிகளைப் பார்த்த குரங்கு சும்மாயிருக்காது. எப்படியாவது அவைகளை எடுக்க வேண்டும் என்ற முடிவோடு வரும். குரங்கு தேங்காய் மூடிகளை எடுக்க வருகிற நேரத்தில் நாம் அதனைப் பிடித்து தேங்காய் பையினுள் போட்டு மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே தேங்காய் மூடிகளைப் பார்த்த குரங்கு மரத்தை விட்டுக் கீழே இறங்கியது. வேகமாகத் தேங்காய் மூடியை நோக்கி வந்தது.
இதுதான் சரியான சமயம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேங்காய் வியாபாரியும் குரங்கைப் பிடிக்கத் தயாரானான்.
குரங்கு தேங்காய் மூடியை எடுக்கிற நேரத்தில் அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் தேங்காய் வியாபாரி.
உடனே குரங்கு, கையில் இருந்த தேங்காய் மூடியை கீழே விடாமல், "கீச்... கீச்... கீச்...' என்று கத்தத் தொடங்கியது.
குரங்கின் கீச்சுக்குரல் அந்த ஆலமரத்தைச் சுற்றி எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.
அந்த சத்தத்தைக் கேட்டதும் அந்த சுற்று வட்டாரத்தில் ஆங்காங்கே இருந்த குரங்குகள் எல்லாம் ஓடோடி வந்தன.
அவைகள் வந்த வேகத்திலேயே தேங்காய் வியாபாரியின் மீது பாய்ந்து அவரைக் கீழே உருட்டித் தள்ளின.
குரங்குகள் எல்லாம் படையெடுத்த படி தன்னைத் தாக்க வருகிறதே என்று பயந்த தேங்காய் வியாபாரி, உயிர் பிழைத்தால் போதுமென்று ஓட்ட மெடுத்தான்.
குரங்குகளோ தேங்காய் மூட்டை யின் உள்ளே இருந்த தேங்காய்களை எல்லாம் ஆளுக்கு ஒன்றாக எடுத்தபடி மரத்தில் ஏறிக்கொண்டன. அதனைக் கண்ட தேங்காய் வியாபாரியோ தன் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டான்.
"ஐயோ, இதென்ன கொடுமை. தேவையில்லாமல் நான் இந்த குரங்கிடம் வம்பு செய்யப் போய் என் தேங்காய்களை எல்லாம் இழந்து விட்டேனே. குரங்கைப் பிடித்துக் கொடுத்து அதிக லாபமடையலாம் என்று நினைத்தேன். இப்போது இந்தக் குரங்குகளால் என் தேங்காய்களை இழந்து நஷ்டமடைந்து விட்டேனே...' என்று கவலையுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தேங்காய் வியாபாரி.
குட்டீஸ்... விலங்குகளுக்கு துன்பம் தரக்கூடாது.. சரியா!
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X