கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2014
00:00

கேள்வி: ஐ பேட் சாதனத்தில் உள்ள கீ பேடில், நாம் தேர்ந்தெடுக்கும் சொல்லில் கர்சருக்கு வலது புறம் உள்ள கேரக்டரை எப்படி நீக்குவது? அதற்கான கீ எது?
நீ. சுந்தர மூர்த்தி, சென்னை.
பதில்:
இந்த கேள்வியைப் பலர் கேட்டுள்ளனர். பொதுவாக, கம்ப்யூட்டர் கீ போர்டில், பேக் ஸ்பேஸ் அழுத்தி, கர்சருக்கு இடதுபுறம் உள்ள கேரக்டரும், டெலீட் கீ அழுத்தி கர்சருக்கு வலது புறம் உள்ள கேரக்டரையும் அழிக்கலாம். ஆனால், ஐ பேடில் உள்ள கீ போர்டில், டெலீட் கீ இல்லை. எனவே, கர்சரை பேக் ஸ்பேஸ் கீ அழுத்தி கேரக்டரை நீக்கும் செயல்பாட்டிற்குக் கொண்டு சென்று, பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி செயல்படுத்தலாம்.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டம் இயங்குகிறது. இதில் நான் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் பயன்படுத்துகிறேன். கூடுதலாக, வேறு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்த வேண்டுமா?
என். தணிகை செல்வன், மதுரை.
பதில்:
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் என்பது, நம் கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ் மற்றும் மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு தர, மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் இலவச புரோகிராம். இதனை http://windows.microsoft.com/en-us/windows/security-essentials-download என்ற முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இதன் இயக்க செயல்பாட்டினை ஏ.வி. டெஸ்ட் (AVTest) என்னும் நிறுவனம் மற்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் (Avast, AGV, Avira, Bitdefender, Kaspersky, Malwarebytes and Norton) ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளை அண்மையில் தந்தது. அந்த முடிவுகள் உங்கள் சந்தேகத்திற்கு விடை அளிக்கும். பத்து சிஸ்டங்களில், மைக்ரோசாப்ட் எசன்ஷியல்ஸ் நன்றாகச் செயல்பட்டது. 60 மால்வேர் புரோகிராம்களில், 59னைக் கண்டறிந்தது. 53 மால்வேர்களை நீக்கியது. இந்த வகையில் 88% மதிப்பெண் பெற்றது.
வைரஸ்களைப் பொறுத்தவரை, அனைத்து வைரஸ்களையும் எசன்ஷியல்ஸ் கண்டறிந்தது. 30 வைரஸ்களில் 26னை நீக்கியது.
இந்த சோதனை ஒப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட, மேலே சுட்டிக் காட்டியுள்ள அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், கம்ப்யூட்டர்களைப் பாதுகாப்பதில் செவ்வனே செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. Malwarebytes, Bitdefender and Kaspersky ஆகியவை மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டன. மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை அப்டேட் செய்து வருகிறது. மற்ற நிறுவனங்களும் தங்களுடைய தொகுப்பினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதால், தரப் பட்டியலில் எசன்ஷியல்ஸ் சற்றுப் பின் தங்கியே உள்ளது.

கேள்வி: மிகச் சுருக்கமான அடிக்கடி பயன்படுத்தும் கண்ட்ரோல் +இஸட் (Ctrl + Z)ஷார்ட் கீ பயன்பாடு, பெயிண்ட் புரோகிராமில் வேறு வகையாகச் செயல்படுகிறதே, ஏன்? இது சிஸ்டத்தின் கோளாறா? எப்படி நிவர்த்தி செய்வது?
என். சகாதேவன், திண்டுக்கல்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் ஷார்ட் கட் கீயானது மிக அருமையான ஒரு வழியை நமக்குத் தரும். எந்த கீயையாவது நம்மை அறியாமல் தொட்டு, இயக்கி, எதிர்பாராத விளைவு ஏற்பட்டால், இந்த கண்ட்ரோல் + இஸட் (Ctrl + Z) கீகளை அழுத்தினால், அந்த செயல்பாடு நீக்கிக் கொள்ளப்படும். பெயிண்ட் போன்ற புரோகிராம்களில், இந்த ஷார்ட் கட் கீ வேறு சில செயல்பாடுகளையும் நமக்குத் தருகிறது. தொடர்ந்து பின் நோக்கிய செயல்பாடுகளுக்குச் செல்கிறது. பல முறை தொடர்ந்து அழுத்துவதன் மூலம், எந்த செயல்பாட்டில் கொண்டு நிறுத்த வேண்டுமோ, அதில் நிறுத்தலாம்.

கேள்வி: என் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் ஸ்டிக்கி நோட்ஸ் அமைக்க விரும்புகிறேன். இதற்கான வழிகள் கண்ட்ரோல் பேனலில் இல்லை. எங்கிருந்து இதனைப் பெறலாம்? எப்படி அதனை அமைத்து செயல்படுத்தலாம்.
-ஆர். சீத்தாபதி, செய்யாறு.
பதில்:
நல்ல கேள்வி. பலருக்கும் இந்த பதில் பயன்படும். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும், புதிய வசதிகளில், மேம்படுத்தப்பட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி கேட்டு உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
ஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் கொண்டு வர, ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இதனை இயக்கத்திற்குக் கொண்டு வந்தவுடன், ஒரு காலியான ஸ்டிக்கி நோட், டெஸ்க் டாப்பில் காட்டப்படும். இதனை டெஸ்க்டாப்பில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பின்னர், இதில் உங்கள் குறிப்பினை டைப் செய்திடலாம். டைப் செய்திடுகையில், அதன் தேவைக்கேற்ப, இந்த நோட் விரிவடையும். இதன் எல்லையை அடைந்தவுடன், சுருளும் தோற்றத்தைப் பெறும். இருப்பினும், இதன் அளவை நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கி நோட்டின் வண்ணத்தையும் மாற்றலாம். இதற்கு ஸ்டிக்கி நோட்டின் உள்ளாக, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், வண்ணத்தை மாற்றலாம். புதிய ஸ்டிக்கி நோட் ஒன்று உருவாக்க, பழையதில் மேலாக இடது மூலையில் உள்ள நோட்டில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது [Ctrl]+[N] என்ற கீகளை அழுத்த வேண்டும். நோட் ஒன்றை அழிக்க, மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் (“+ button”) பட்டனில் கிளிக் செய்தால் போதும். அல்லது [Ctrl]+[D] என்ற கீகளை அழுத்த வேண்டும்.
நோட்டில் டைப் செய்த டெக்ஸ்ட்டை, வழக்கம் போல மற்ற வேர்ட் ப்ராசசர்களில் பார்மட் செய்வது போல, அழுத்தம், சாய்வெழுத்து, அடிக்கோடு, இடது, வலது, சமமான இன்டென்ட், எழுத்து அளவினைப் பெரிதாக்குதல், சிறிதாக்குதல் என அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். (Ctrl+B,Ctrl+I,Ctrl+T, Ctrl+U etc.,)
நோட் ஒன்றை அழிக்கையில், அது உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை வழங்கும். அழித்துவிடவா, மீண்டும் கிடைக்காது? என்ற கேள்வியைத் தரும். சில வேளைகளில், இந்த செய்தி எல்லாம் எனக்கு வேண்டாம் என்ற விருப்ப பாட்டை நாம் தேர்ந்தெடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு, ஓர் எச்சரிக்கை. அழிக்கப்படும் ஸ்டிக்கி நோட், அவ்வளவுதான். ரீசைக்கிள் பின்னுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்படாது. அழித்துவிட்டால் மீண்டும் கிடைக்காது.
இந்த ஸ்டிக்கி நோட் சேவ் செய்யப்பட்டு உங்களுக்கு வேண்டும் என்றால், சேவ் செய்து கொள்ளலாம். StickyNotes.snt என்ற பெயரில் இது சேவ் செய்யப்படும். இதனை C:\Users\{username} \AppData\Roaming\Microsoft\Sticky Notes என்ற போல்டரில் காணலாம்.

கேள்வி: நான் பிரவுசராக பயர்பாக்ஸ் மற்றும் குரோம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். இவற்றில் எனக்குப் பிடித்த வெப்சைட்டுகளை புக்மார்க்காக அமைக்க, மெனு சென்று விரித்து கிளிக் செய்திட வேண்டுமா? வேறு வழி உள்ளதா? வெப்சைட்டில் இருந்தபடியே புக்மார்க், பேவரிட் தளம் அமைத்திட முடியுமா?
கே. ஜெயச்சந்திரன், புதுச்சேரி.
பதில்:
நீங்கள் விரும்பும் வகையில் அமைத்திட ஷார்ட் கட் கீ உள்ளது. கண்ட்ரோல் + டி (Ctrl+D) அழுத்துங்கள். உடன் உங்களுக்கு புக்மார்க்கிற்கான பெயர் அமைக்கும் கட்டம் கிடைக்கும். அனைத்து பிரவுசர்களிலும் இதே ஷார்ட் கட் கீ பயன்படுத்தி, புக்மார்க் அல்லது பேவரிட்ஸ் அமைக்கலாம். இதற்கான சில கூடுதல் தகவல்களையும் இங்கு தருகிறேன்.
புக்மார்க் என்பதால் (Bookmark) எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், Ctrl+B இருக்கலாமே என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஷார்ட் கட் கீ Bold அமைக்க அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களில் பயன்படுத்த என ஒதுக்கப்பட்டுவிட்டதால், இங்கு Ctrl+D பயன்படுத்தப்படுகிறது.
குரோம் பிரவுசரில் Ctrl+Shift+D என ஷார்ட்கட் கீ கொடுத்தால், புக்மார்க் அமைப்பதில் இன்னும் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். தளத்தினை புக்மார்க் செய்து, தகவல்களை எடிட் செய்திடலாம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், இந்த கீகளை அழுத்தினால், திறந்திருக்கும் அனைத்து டேப்களில் உள்ள தளங்களும் புக்மார்க் செய்யப்படும்.

கேள்வி: போல்டர் ஒன்றிலிருந்து இன்னொரு போல்டருக்கு பைல்களை இடம் மாற்றுகையில், பைல்களை நேரடியாக இழுத்துச் சென்று மாற்ற முடியுமா?
-கா. சுதந்திரா தேவி, விருதுநகர்.
பதில்:
அதுவும் நல்ல வழிதான். எளிமையான விரைவான வழி. எடுக்கும் மற்றும் காப்பி செய்திடும் இரண்டு போல்டர்களையும் தேர்ந்தெடுத்து திறந்து வைத்துக் கொள்ளவும். இவற்றைச் சிறியதாக்கி, அருகருகே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, எந்த பைலை மாற்ற வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது கர்சரை வைத்து, அப்படியே இழுத்துச் சென்று, எந்த போல்டரில் காப்பி செய்திட வேண்டுமோ, அதில் வைக்கவும். இப்போது உங்களுக்குச் சிறிய மெனு ஒன்று கிடைக்கும். பைலை காப்பி செய்திடவா? அல்லது நகர்த்தி அமைக்கவா? என்று ஆப்ஷன்கள் கிடைக்கும். இங்கு நீங்கள் விரும்பும் வகையில் ஆப்ஷன் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றில் புட் நோட் பற்றி தெரியும். எண்ட் நோட் என்று ஒரு குறிப்பு எதனைக் குறிக்கிறது. இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறா?
என். சிதம்பரம், பெருங்களத்தூர்.
பதில்:
Footnote என்பது, டாகுமெண்ட்டில் கூறப்பட்டுள்ள சொல் அல்லது வேறு ஒன்று குறித்துக் கூடுதல் தகவல்களைத் தருவதற்காகக் குறியிடப்பட்டு தனித்து தரப்படும் குறிப்பாகும். இவை குறிப்பிட்ட டெக்ஸ்ட் இடம் பெறும் பக்கத்தில் தரப்படலாம். கீழாக அவை டைப் செய்யப்படும். End Note என்பதுவும் இதனையே குறிக்கிறது. இந்த குறிப்புகள், ஒவ்வொரு அத்தியாயத்தின், இறுதியில் தரப்பட்டால், அவை End Note ஆகும். அந்த டெக்ஸ்ட் அருகே, எண்கள் இடப்பட்டு, அந்த எண்களுடன் அதற்கான விளக்கம், அத்தியாயத்தின் இறுதியில் தரப்படும். இவை இரண்டும் ஒன்றுதான். தரப்படும் இடத்தைப் பொறுத்து இவற்றைக் குறிப்பிடும் சொல் மாறுபடும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ் கொண்ட டெஸ்க்டாப் நிறுத்தி, ஒருவர் சில நாட்களே பயன்படுத்திய விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறேன். இதில் சிஸ்டம் கரப்ட் ஆனால், ரெகவர் செய்வதற்கு என எந்த சிடியும் எனக்குத் தரப்படவில்லை. இதை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தே தயாரிக்கலாம் என்று என் நண்பர் கூறுகிறார். அதற்கான வழிகளைக் காட்டவும்.
என். புகழ் சேரன், கோவை.
பதில்:
நல்ல கேள்வி. உங்கள் நண்பரிடம் இதை எல்லாம் கேட்டு வாங்கி இருக்க வேண்டும். ஒருவேளை, அவருக்கு லேப்டாப் கொடுத்த நிறுவனம் இதனை வழங்காமல் விட்டிருக்கலாம். சரி, விஷயத்திற்கு வருவோம். சிஸ்டம் கரப்ட் ஆனால் அதனைச் சரி செய்திட ரிப்பேர் சி.டி. தயாரிக்கும் முறையினை இனி பார்க்கலாம்.
முதலில் Start>> All Programs>> Maintenance>>Create a System Repair Disc எனச் செல்லவும். சிடி ட்ரைவில் சிடி ஒன்றைப் போட்டு வைக்கவும். இது காலியாக எந்த பைலும் இல்லாமல் இருக்க வேண்டும். சிடி ட்ரைவில் உள்ள சிடியைச் செக் செய்த பின்னர், உங்கள் சிஸ்டம், நீங்கள் கேட்டுக் கொண்ட சிடியினைத் தயார் செய்திடும். விண்டோஸ் 7 இயங்காமல் போகும் நிலையில், இதன் மூலம் சிஸ்டம் பூட் அப் செய்து, கம்ப்யூட்டரை இயக்கலாம்.

கேள்வி: இமெயில் ஹார்வெஸ்டிங் (Email harvesting) என்று சொல்வது எதனைக் குறிக்கிறது? இந்த செயல்பாடு நல்லதனமான ஒன்றா? அல்லது வைரஸ் போன்ற கெடுதல் தரும் வகையினதா? குறிப்பு தரவும்.
யா. தென்னரசு, செங்கல்பட்டு.
பதில்:
தேவைப்படாத, நாம் விரும்பாத தகவல்களைக் கொண்டுள்ள ஸ்பேம் மெயில்களை மொத்தமாக அனுப்ப இந்த விரும்பாத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, மொத்தமாக மின் அஞ்சல் முகவரிகள் தேவைப்படுகின்றன. எனவே இவற்றைத் திருடித் தருபவர்கள் மேற்கொள்ளும் இந்த செயல்பாட்டினை Email harvesting என அழைக்கின்றனர். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர். அமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு CAN-SPAM Act என்ற சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் அஞ்சல் முகவரியையும், அதற்கு உரியவரின் அனுமதி பெற்ற பிறகே, வேறு ஒருவர் அல்லது நிறுவனம் அல்லது இணைய தளம் பெற வேண்டும் என இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

கேள்வி: வெப்சைட் முகவரிகள் ஒன்றுக்கொன்று அதன் பார்மட்டில் வேறுபடுகின்றன? சில வெறும் எழுத்துக்களால், சொற்களால் அமைக்கப்பட்டு கிடைக்கின்றன. ஒரு சில லிங்க் கிடைக்கும்போது, மிக நீளமாக எழுத்துக்களும் எண்களும் இணைந்து இருக்கின்றது. இது எதனால்? ஆங்கிலத்தில் யு.ஆர்.எல். என்பது இந்த முகவரி மட்டுமா? அல்லது வேறு சிலவற்றையும் குறிக்கிறதா? அதன் சரியான விரிவாக்கம் என்ன?
தே. ரேணுகா தேவி, தேனி.
பதில்
: இத்தனை கேள்விகள் அடுத்தடுத்து கேட்டுள்ளீர்கள். இறுதிக் கேள்வியிலிருந்து வருகிறேன். URL: Uniform Resource Locator என்பதுதான் அதன் விரிவாக்கம். ஒவ்வொரு இணைய தளப் பக்கமும் அல்லது பக்கங்களும், ஒரு சர்வர் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது. இது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டராக எப்போதும் இயங்கும். அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல். இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். இந்த அஞ்சல் முகவரி சிலருக்கு மிக விரிவாக இருக்கலாம். சிலருக்கு சுருக்கமாக இருக்கலாம்.
யு.ஆர்.எல். என்பது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, எழுத்துக்களும், தேவைப்பட்டால் எண்களும் இணைந்து, குறிப்பிட்ட பார்மட்டில் அமைக்கப்பட்ட நீள வரியாகும். இதனை, வெப் பிரவுசர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மற்றும் பிற சாப்ட்வேர் புரோகிராம்கள் புரிந்து கொண்டு, அந்த முகவரிக்கான கம்ப்யூட்டரை அடைந்து, சார்ந்த இணையப் பக்கத்தினைப் பெற்று நமக்குத் தருகின்றன. யு.ஆர்.எல். ஒன்றில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை 1. network protocol, (எ.கா. http://, ftp://, and mailto://) 2. host name or address (எ.கா. www.dinamalar.com) மற்றும் 3. file or resource location (எ.கா. election.dinamalar.com/detail.php?id=1678) ஆகும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Gopalan - Chennai,இந்தியா
22-செப்-201413:34:51 IST Report Abuse
Narayanan Gopalan "எனவே, கர்சரை பேக் ஸ்பேஸ் கீ அழுத்தி கேரக்டரை நீக்கும் செயல்பாட்டிற்குக் கொண்டு சென்று, பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி செயல்படுத்தலாம். " ரெண்டையுமே பேக் ஸ்பேஸ் என்று சொன்னால் எப்படி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X