புதிய ஆப்பிள் மொபைல் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2014
00:00

தன் புதிய ஐபோன்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்த, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.8 னையும் வெளியிட்டது. சென்ற ஜூன் மாதத்தில் நடந்த, தன் உலகளாவிய டெவலப்பர் கருத்தரங்கில், ஆப்பிள் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவலை வெளியிட்டது. சென்ற செப்டம்பர் 17ல், புதிய ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்தினை, தன் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்திட தந்தது. வழக்கம் போல, இது இலவசமாகவே கிடைக்கிறது.
2013 ஆம் ஆண்டில், ஐ.ஓ.எஸ். 7 வெளியான போது, அது ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன், ஐபாட் டச் மற்றும் ஐ பேட் சாதனங்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. இப்போது வந்திருக்கும் ஐ.ஓ.எஸ்.8, அந்த அளவிற்கு புதிய மாற்றங்களைத் தரவில்லை என்றாலும், பல புதிய வசதிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம். சில மாற்றங்களும், வசதிகளும், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் தந்தனைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாக உள்ளன.
1. Handoff: இது ஓர் எதிர்பாராத வசதி என்று அனைவரும் பாராட்டுகின்றனர். மேக் கம்ப்யூட்டர் ஒன்றில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது படம் ஒன்றைத் திருத்திக் கொண்டிருக்கிறீர்கள்; அல்லது இமெயில் ஒன்றை அனுப்ப தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையில், வேறு ஒரு வேலையாகச் சற்று வெளியே செல்ல வேண்டியதுள்ளது. அந்த நிலையில், உங்களுடைய ஐபோன் அல்லது ஐபேட் கொண்டு, அதே வேலையை அதில் மேற்கொள்ளலாம். Handoff வழியாக, உங்களுடைய அனைத்து ஆப்பிள் சாதனங்களும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையினை உணர்ந்து தெரிந்து கொண்டிருக்கும். எனவே, இன்னொரு வசதியான சாதனத்தினை திறந்து, வேலையைத் தொடரலாம். Handoff பயன்படுத்த ஐ.ஓ.எஸ்.8, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.10 மற்றும் வேலையை மேற்கொள்வதற்கான, அங்கீகரிக்கப்பட்ட தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உங்கள் சாதனங்களில் இருக்க வேண்டும்.
2. Healthkit: ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில் இணைந்தே அறிமுகமாகியுள்ள இன்னொரு அப்ளிகேஷன் Health என்பதாகும். இந்த அப்ளிகேஷனில், உங்கள் உடல் நலம் குறித்த அனைத்து தகவல்களையும் பதிந்து வைக்கலாம். எடை, எப்படி உறங்குகிறீர்கள், இரத்த அழுத்தம், மருத்துவ ரீதியாக உடல் நிலை இன்னும் உங்கள் உடல் நலம் சார்ந்த அனைத்தும் பதிவு செய்திடலாம். ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 6 வழியாக, நீங்கள் உங்கள் உடல் நலம் சார்ந்து எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்த அப்ளிகேஷன் பெற்று தக்க வைக்கும். வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனமும் இந்த தகவல்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் உடல் நலம் குறித்த அன்றைய நாள் வரையிலான தகவல்கள் பதிக்கப்பட்டு, உடனடியாக உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கிடைக்கின்றன.
3. Customised Keyboard: இதுவரை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் மட்டுமே, நம் இஷ்டப்படி வடிவமைக்கக் கூடிய கீ போர்டினைப் பெற்றுள்ளனர் என்று கூறிக் கொண்டிருந்தனர். Swype என்ற மாற்று கீ போர்ட் மூலம் போன்களில் துல்லியமாகவும் எளிதாகவும் எழுத முடிகிறது என்று கூறி புகழ்ந்து வந்தனர். ஐ.ஓ.எஸ்.8 இந்த பிரிவில் தற்போது வெற்றி பெற்றுள்ளது. Swype உட்பட, எந்த கீ போர்டையும் நம் வசதிப்படி மாற்றி அமைத்து இயக்க முடியும் வசதியினைத் தந்துள்ளது.
4. App-to-App: அனைத்து அப்ளிகேஷன்களும் பயன்படுத்தக் கூடிய பொதுவான வசதிகள் பல இந்த சிஸ்டத்தில் அப்ளிகேஷன்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன்னிடத்தே சில வசதிகளைக் கொண்டு, அவற்றை அப்ளிகேஷன்கள் பயன்படுத்த வழங்கி வந்தது. இப்போது ஐ.ஓ.எஸ்.8, ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கும் வசதிகள், மற்ற அப்ளிகேஷன்களும் பயன்படுத்தும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. எனவே, அப்ளிகேஷன்கள் இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்க தன்மையைப் பெற்றுள்ளன. இதன் மூலம் ஆடியோ அப்ளிகேஷன் ஒன்றின் வசதிகளை, வீடியோ அப்ளிகேஷன் ஒன்றும் பகிர்ந்து கொள்ளலாம்.
5. iOS to Mac AirDrop: ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில், ஏர் ட்ராப் (AirDrop) என்னும் வயர்லெஸ் பைல் மாற்றும் வசதி தரப்பட்டது. அது ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையே மட்டுமே செயல்படுத்தும் வகையில் இயங்கியது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், ஐ.ஓ.எஸ். பயன்படுத்தும் சாதனங்களுக்கிடையேதான் இயங்கியது. தற்போது, ஐ.ஓ.எஸ். 8, இந்த பைல் மாற்றும் வசதியை மேக் கம்ப்யூட்டர்களுக்கும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு இடையேயும் தந்துள்ளது.
6. Family Sharing: நாம் நமக்குத் தெரிந்த குடும்பங்களுக்கிடையே நம்முடைய சிடி, டிவிடி மற்றும் நூல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த டிஜிட்டல் பொழுது போக்கு உலகில், நாம் டவுண்லோட் செய்திடும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்னையை ஆப்பிள் Family Sharing என்ற அப்ளிகேஷன் மூலம் தீர்த்து வைத்துள்ளது. இதனை செட் செய்து வைக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் (ஒரே கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தும் நிலையில்) ஒருவர் வாங்கிடும் சிடி அல்லது புரோகிராமினை மற்றவர்களும் டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
7. iCloud Drive: ட்ராப் பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் அனைவரும் அதனை, அது தரும் இணைவிக்கும் வசதியினை மிகவும் விரும்புவார்கள். ட்ராப் பாக்ஸில் சேமிக்கும் பைல்கள் அனைத்தும் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் அப்டேட் செய்யப்படும். ஆப்பிள் இப்போது இதே போன்றதொரு வசதியை iCloud Drive மூலம் தருகிறது. இதில் சேவ் செய்யப்படும் பைல்கள் அனைத்தையும், ஒத்திசைவான ஆப்பிள் சாதனங்களில் பெறலாம். மாற்றலாம். மாற்றங்களுடன் பைல்கள் மீண்டும் இந்த ட்ரைவில் சேவ் செய்யப்படும்.
8. Easy Access to Favorites: பயனாளர்களை வழி நடத்தும் இடைமுக வழிகளில் பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ்.8 கொண்டு வந்துள்ளது. அவற்றில் மிக முக்கியாமான ஒன்று நம் அப்போதைய தொடர்புகளையும், பிரியமான தொடர்புகளையும் பெறும் வசதி. அப்ளிகேஷன் ஒன்றில் டேப் செய்து, ஒரு தொடர்பினைத் தேடுவதற்குப் பதிலாக, ஹோம் பட்டனில் இருமுறை டேப் செய்தாலே, நாம் அடிக்கடி தொடர்புகொள்ளும் எண்கள் பட்டியலாகக் கிடைக்கிறது. இந்தப் பட்டியலில் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டுமோ, அந்த எண் அல்லது பெயரை டேப் செய்தால், உடன் இணைப்பு கிடைக்கிறது. அல்லது FaceTime மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
9. Touch ID for Apps: ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 6ல் தரப்பட்டுள்ள டச் ஐ.டி. விரல் ரேகை ஸ்கேனர் வசதி நம் போனைப் பாதுகாப்பதில் சிறந்த வழியைத் தருகிறது. ஆனால், இந்த வசதி உங்கள் ஐபோனைத் திறப்பதற்கும், App Store மூலம் ஏதேனும் பொருள் வாங்கும்போது, உங்கள் ஆப்பிள் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டினை அமைத்து இயக்கவும் பயன்பட்டது. ஆனால், இனி இது தேவை இல்லை. ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்திற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ஒன்று இந்த டச் ஐ.டி.யைப் பயன்படுத்தி நம் டேட்டாவினைப் பாதுகாக்கும் பணியை ஏற்றுக் கொள்கிறது. இது நிதி சார்ந்த அப்ளிகேஷன்களை இயக்கும்போது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
10. Share Your Location: நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று உங்கள் நண்பர்கள் அறிந்து கொண்டு, உங்களை எளிதாக அவர்கள் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய ஜி.பி.எஸ். டேட்டா மூலம் இதனை அறியலாம். இப்போது ஐ.ஓ.எஸ். 8 மூலம், இந்த தகவல்களை எளிதாக உங்கள் நண்பர்கள் பெற முடியும். உங்களுக்குத் தேவை இல்லாத அழைப்புகளை ஏற்படுத்தி அறிய வேண்டியதில்லை.
11.Notification Center: பொதுவாக நோட்டிபிகேஷன் செண்டர் நம்முடைய அலர்ட் செய்திகளிலிருந்து தகவல்களைப் பெற பயன்படுத்தப்பட்டது. இப்போது, நாம் அதில் வருகின்ற அறிவிப்புகளுக்கு, அங்கிருந்தே பதில் அளிக்கலாம். அவற்றை பேஸ்புக்கில் பதியலாம். காலண்டர் வழி அழைப்புகளுக்கு பதில் தரலாம். மற்ற அப்ளிகேஷன்களுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அதிலிருந்தே செல்லலாம். இந்த வகையில் இது விரிவாக்கப்பட்டுள்ளது.
12.Audio Clips via Messages: ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில், மெசேஜ் அனுப்புவதில் பல முன்னேறிய வசதிகள் கிடைக்கின்றன. சிறிய ஆடியோ பைல்களைத் தயார் செய்து அனுப்பலாம். விடியோ பைல்களையும் செய்தியாகவே அனுப்பலாம். எனவே டெக்ஸ்ட் டைப் செய்திடுவது எல்லாம் இனி பழங்கதையாகிவிடும். இதனால் நம் தகவல் மற்றும் செய்தி தொடர்புகள் மிகவும் ஆர்வமூட்டுபவையாக அமையும்.
13.Homekit: நம் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டர் வழியாக, நம் வீட்டில் இயங்கும் டிஜிட்டல் சாதனங்களை இயக்குவதும்
கட்டுப்படுத்துவதும் இனி எளிதாகும். இன்னும் சில ஆண்டுகளில் இது மிகவும் சாதாரண ஒரு செயலாக இருக்கப் போகிறது. ஏர் கண்டிஷனர், மின் விளக்குகள், மின்விசிறிகள், மின் அடுப்புகள் அனைத்து வை பி யில் இணைந்து செயல்படுபவையாகக் கிடைக்க இருக்கின்றன. அப்போது நம் ஸ்மார்ட் போன் மூலம் அவற்றின் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். ஐ.ஓ.எஸ்.8 இந்த வசதிக்கு அடிப்படை அமைத்துள்ளது. Home Automation என ஆப்பிள் இதனை அழைக்கிறது. இனி டிஜிட்டல் சாதனங்களை வடிவமைப்பவர்கள், இந்த Home Automation செயலாக்கத்திற்கு இணைவாக தங்கள் சாதனங்களை உருவாக்குவார்கள்.
மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும் அதன் முழுமையான பரிணாமங்களுடன் விளக்கப்படவில்லை. இவற்றை அனுபவிக்கும்போது மட்டுமே, இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பை உணர முடியும். ஐ.ஓ.எஸ். 8 இது போன்ற பல வசதிகளைத் தரும் திறனைத் தன்னுள் கொண்டுள்ளது என்பதனை நாம் உணர்ந்து கொண்டால் அதுவே இப்போதைக்குப் போதும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X