எச்.டி.சி. டிசையர் 816ஜி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2014
00:00

தொழில் நுட்பம், தோற்றப் பொலிவு, செயல்பாடு ஆகியவற்றிற்கு மக்களிடையே நல்ல பெயர் எடுத்துள்ள மொபைல் போன்கள் எச்.டி.சி. போன்களாகும். பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் மொபைல் போன்களை வெளியிடவில்லை என்றாலும், இவற்றின் செயல்திறன், தோற்ற அழகு ஆகியவற்றை உணர்ந்தவர்கள், இதனையே விரும்பி வாங்குகின்றனர்.
அண்மையில், எச்.டி.சி. நிறுவனம் Desire 816G என்ற மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 18,990. இது ஏற்கனவே வெளியான டிசையர் 816 மொபைல் போனின் மலிவு விலைப் பதிப்பு போனாகும். ஆனால், இதன் திரை டிசையர் 816ல் தரப்பட்டது போல 5.5 அங்குல அளவில், அதே ரெசல்யூசனுடன் உள்ளது. குவாட் கோர் குவால்காம் ப்ராசசருக்குப் பதிலாக, குவாட் கோர் மீடியா டெக் ப்ராசசர் கொண்டு இயங்குகிறது. இதன் வேகம் 1.3 கிகா ஹெர்ட்ஸ். ராம் மெமரி 1.5 ஜி.பி.க்குப் பதிலாக 1 ஜி.பி. தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, அதிகப்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
மற்றவை டிசையர் 816 போலவே உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.4. ஆண்ட்ராய்ட் கிட்கேட். எல்.இ.டி. ப்ளாஷ் இணைத 13 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளன. முன்புறமாக இரண்டு BoomSound ஸ்பீக்கர்கள் இயங்குகின்றன. இவற்றுடன் ஆம்பிளிபயர் இணைக்கப்பட்டு, துல்லியமான ஒலிக்கான தொழில் நுட்பம் இயங்குகிறது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இந்த போனில் 4ஜி வசதிகள் கிடைக்காது. 3.5 மிமி ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதன் தடிமன் 7.9 மிமீ. எடை 158கிராம்.
இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது. கருப்பு, வெள்ளை, சிகப்பு மற்றும் பழுப்பு வண்ணங்களில் இது வெளியாகியுள்ளது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X