இந்தியாவில் இணைய எந்த அளவில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
இந்தியாவில் இணைய எந்த அளவில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2014
00:00

இந்திய மக்களிடையே இணையம் பயன்படுத்தும் பழக்கம் வெகு வேகமாகப் பரவிவருவதாக நாம் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆம், அது உண்மை தான். ஆனால், உலகின் மற்ற நாடுகளுடன் இணையப் பயன்பாட்டளவில் ஒப்பிடுகையில் நாம் இன்னும் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம். இதனை, பன்னாட்டளவிலான தொலை தொடர்பு கூட்டமைப்பின், தகவல் தொடர்பு வரையறைப் பிரிவு (ITU-T (Telecommunication Standardization Sector of the International Telecommunications Union)) அறிவித்துள்ளது. அந்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
வயர்வழி பிராட்பேண்ட் இணைய இணைப்பு தருவதில் இந்தியா உலக நாடுகளில் 125 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மொபைல் வழி இணைய இணைப்பில் 113 ஆவது இடம்; வீடுகளில் இணையப் பயன்பாட்டில் 75 ஆவது இடம்; இந்திய மக்களிடையே காணப்படும் இணையப் பயன்பாடு ஊடுறுவலுக்கு 142 ஆவது இடமும் கிடைத்துள்ளது.
இது சார்ந்து உலக நாடுகளுக்கான பரவலான தகவல்கள் சிலவும் வெளியாகியுள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகளில், உலக மக்களில் 50% பேர் இணைய இணைப்பினைப் பெறுவார்கள். ஏற்கனவே உலக மக்களில் 40%க்கு மேலானவர்கள் இணைய இணைப்பினைப் பெற்றுள்ளனர். 2013 ஆம் ஆண்டு, 230 கோடியாக இருந்த இணைய மக்கள் எண்ணிக்கை, அந்த ஆண்டின் இறுதியில் 290 கோடியாக உயர்ந்திருந்தது. 2014 ஆம் ஆண்டு இறுதியில், 230 கோடி மக்கள், மொபைல் சாதனங்கள் வழி இணைய இணைப்பினைப் பெறுவார்கள். 760 கோடி பேர் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இதனைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தற்போது 190 கோடி பேர், சமூக இணைய தளங்களில் பதிந்து இயங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கையில், இணைய இணைப்பினைப் பயன்படுத்துபவர்களின் தொகை கணக்கிடப்பட்டு முதல் பத்து நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதல் இடத்திலிருந்து நாடுகள் பின்வருமாறு: மொனாகோ (44.7%), ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், கொரியா குடியரசு, நார்வே, கிரேட் பிரிட்டன், ஐஸ்லாந்து மற்றும் ஜெர்மனி (34.6%).
மொபைல் வழி இணைய இணைப்பு பெற்ற குடிமக்களின் எண்ணிக்கை, அந்த அந்த நாட்டு மொத்த ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், முதல் பத்து இடம் பெற்ற நாடுகள்: சிங்கப்பூர் (135.1%) பின்லாந்து, ஜப்பான், ஆஸ்திரியா, பஹ்ரைன், ஸ்வீடன், டென்மார்க், கொரிய குடியரசு, ஹாங்காங், சீனா, மற்றும் அமெரிக்கா.
வீடுகளில் இணைய இணைப்பு பெற்ற நாடுகளில் முதல் பத்து இடத்தைப் பிடித்த நாடுகள் பின்வருமாறு: கொரியா குடியரசு (98.1%) கத்தார், சிங்கப்பூர், சீனா, பஹ்ரைன், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட், புருனே, சவுதி அரேபியா (72.7%).இணையத்தில் உலா வருவதில், நாட்டு மக்களில் 50% மேலானவர்களைக் கொண்ட நாடுகள் 77 ஆகும். இது 2013ல் 70 ஆக இருந்தது. இணையத்தைப் பயன்படுத்துவதில், முதல் பத்து நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன. இவற்றில் ஐஸ்லாந்து முதல் இடத்தை, 96.5% மக்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
ITU-T (for Telecommunication Standardization Sector of the International Telecommunications Union) என்ற அமைப்பு மேலே கூறப்பட்ட தகவல்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. தொலை தொடர்பு சாதனங்கள், இயக்க முறைமைகள் எப்படி இருக்க வேண்டும் என தரத்தினை வரையறை செய்வது இதன் முக்கிய பணியாகும். இதன் தலைமையகம், ஸ்விட்சர்லாந்தில், ஜெனிவாவில் உள்ளது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X