தன்னுடைய புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை 48% பேர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆறு நாட்களில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும் தன் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ்.7 இன்னும் 49% சாதனங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், மற்றவர்களில் 7% பேர் ஐ.ஓ.எஸ்.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதாகவும், 1% பேர் மிகப் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் கிட்கேட், 24.5% ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை எண்ணிப் பார்க்கலாம்.