மருதாணி | நாயகி | Nayaki | tamil weekly supplements
Advertisement
மருதாணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2014
00:00

அல வணம்
ஐ வணம்
மரு தோன்றி
சரணம்
மருதாணி


இத்தனை பெயர்களை கொண்ட ஒரு மூலிகை, அழகு சாதன மூலப்பொருள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டது என்பது அதிர்ச்சியான உண்மை.எந்த விசேஷமானாலும், இப்போது இடம் பிடித்துக் கொள்ளும் ஒரு சடங்கு மருதாணி இட்டுக் கொள்வது. ஆனால், ஆற அமர வீட்டில் பலகாரம் செய்து, நிதானமாக உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி இப்போது அவுட் ஆப் பேஷன் ஆகி விட்டதோ, அதேபோல் மருதாணி இலைகளை பறித்து அதனுடன் களிப்பாக்கு, சிறிது சுண்ணாம்பு சேர்த்து அம்மியில் மைய அரைத்து (யார் அரைப்பது என்பது பெரிய போராட்டம்) ஒவ்வொருவராக தவில் வித்வான் போல பத்து விரல்களிலும் தொப்பி போட்டுக்
கொள்வது இப்போது போயே போச்சு.கண்ணிமைக்கும் நேரத்தில்
சரசரவென, கைகளில் அழகழகாய் கலை நயத்தோடு, ஐந்து ரூபாயிலிருந்தே கோலம் போடும் மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.
மருதாணி போடுவதால் என்ன என்ன பலன்கள், மருத்துவ ரீதியாக எப்படியெல்லாம், நமக்கு நல்லது செய்கின்றன என்பதை, தெரிந்து கொள்வதை விட, இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில், நம் கைகளை அழகுபடுத்தும் கோன்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
மெஹந்தி தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம். நிறம் கூடுதலாக வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படுகின்ற, 'பாராபெனலீன்டையமின்' என்ற சாயப் பொருள் முதலில் அலர்ஜி ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல், கொப்புளங்கள், வெடிப்பு போன்ற
பாதிப்புகள் தொடர்ந்து உண்டாக்கும்.
எந்த சாயமாக இருந்தாலும் அது தோலின் துளைகள் வழியாக உடலுக்குள் இறங்கி சிறுநீரகம் வழியாக வெளியேறும். தொடர்ந்து மெஹந்தி பயன்படுத்தம்போது, அதிலுள்ள ரசாயனத்தால் சிறுநீரகங்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உண்டு. 'லுக்கேமியா' என்ற புற்று நோய் வரக் கூடிய ஆபத்தும் உண்டு.
பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருதாணி வைத்துக் கொள்ளாத பெண்களே கிடையாது. அதன் பூக்களை கூட பறித்து தலையில் வைத்துக் கொண்ட பெண்ணை கூட பார்த்திருக்கின்றோம். ஒரு கிருமி நாசினியாக, எதிர்ப்பு
நுண்ணுயிர் பண்புகளை கொண்ட ஒரு மூலிகையாக, தோல் காப்பானாக விளங்கும் மருதாணியை அரைத்து, கைகளில் வைத்துக் கொள்வது ஆடம்பரமற்ற அமைதியான அழகு தரக்கூடியது.முடிகருப்பாக வளரஇரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி., விட்டு,
மருதாணி இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின்
சாறு சேர்ந்து சிவப்பாக மாறியிருக்கும் எண்ணெய்யில் வாசனைக்காக, 10 கிராம் சந்தனத் துாள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரை மாறும்.
நரை மாறமருதாணி விழுது, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முள்ளி துாள் இவற்றுடன் தயிர் கலந்து இரவு ஊற வைத்து, காலையில் அந்த கலவையை எடுத்து, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, சிகைக்காய் போட்டு தலை முடியை அலசினால் நாள்பட்ட நரைக் கூட மாறும்.

-வைத்தீஸ்வரி.

Advertisement

 

மேலும் நாயகி செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X