விருந்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
00:00

ஜாவா தீவின் கிராமம் ஒன்றில் தன் மனைவி ஜானுவுடன் வசித்து வந்தான் ஜோயல்.
ஒருநாள் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அதற்குக் காரணம் இரு செல்வந்தர்கள் வீட்டில் விருந்து நடைபெற இருந்தது. செல்வந்தர்கள் இருவருமே ஜோயலை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர். ஒருவரின் பெயர் விக்டர் மற்றொருவரின் பெயர் ரண்டி.
அதிகாலையிலேயே எழுந்த ஜோயல், மனைவி ஜானுவை அழைத்து விருந்தினைப் பற்றிக் கூறினான்.
அவன் மனைவியோ, ""இரண்டு வீடுகளில் விருந்திற்கு அழைத்ததற்காக ஏன் இவ்வளவு மகிழ்ச்சி அடைகிறீர்கள்? உங்களால் இரண்டு விருந்திலும் கலந்து கொள்ள முடியுமா?'' என்று கேட்டாள்.
அதற்கு ஜோயல், ""இரண்டு வீடுகளிலும் என்னால் உணவு உண்ண முடியாது. எனவே, நான் ஒரு வீட்டிலேயே இரண்டு மடங்கு உணவை வயிறு நிரம்ப உண்ணுவேன். சரி, நீயும் என்னுடன் விருந்திற்கு வருகிறாயா?'' என்று கேட்டான்.
""நான் வரவில்லை. நீங்கள் விருந்திற்குப் போவதால், இன்று நான் சமைக்கத் தேவையில்லை அல்லவா? அதனால் என் அம்மாவைப் பார்க்கப் போகிறேன். நாளை தான் திரும்பி வருவேன்!'' என்று சொன்னாள்.
""சரி, நீ கிளம்பு! நான் விருந்திற்குச் செல்லப் போகிறேன்!'' என்று சொன்னான் ஜோயல்.
விருந்து நடைபெறவிருந்த இரு வீடுகளும் அருகிலிருந்த தனித்தனி தீவுகளில் இருந்தன. எனவே, ஜோயல் தன் படகினைத் தயார் செய்தான். அப்போதே ஜோயலின் மனதில், "யார் வீட்டிற்குச் செல்லலாம்?' என்ற எண்ணம் தோன்றியது.
"விக்டர் உணவின் மீது அதிக விருப்பம் உள்ளவர். எனவே, விருந்திற்காக நல்ல சுவையான உணவைத் தயார் செய்து வைத்திருப்பார். எனவே, அவர் வீட்டிற்கே செல்லலாம்' என்று தீர்மானித்தான் ஜோயல். அதன்படி, படகை விக்டர் வீட்டை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.
ஒருமணி நேரம் சென்றது. அப்போது எதிர்த் திசையில் படகு ஒன்று வந்தது. அப்படகில் நிறைய மனிதர்கள் இருந்தனர்.
அவர்கள் ஜோயல் இடம், ""எங்கே போகிறாய்?'' என்று கேட்டனர்.
""விக்டர் வீட்டில் விருந்திற்கு போகிறேன்,'' என்றான் ஜோயல்.
""விக்டரா? அவர் கருமி ஆயிற்றே! ஒரு கிண்ணம் நிறைய உணவு கிடைத்தாலே அதிர்ஷ்டம்தான்! நாங்கள் அனைவரும் ரண்டி விருந்திற்குச் செல்கிறோம்!'' என்று கூறிவிட்டு சென்றனர் படகில் இருந்தவர்கள்.
இப்போது ஜோயலுக்கு குழப்பம் ஏற்பட்டது. "இவர்கள் சொல்வதுபோல விக்டர் கருமிதான்! நானும் ரண்டி வீட்டிற்குச் செல்வதே நல்லது!' என்று நினைத்த ஜோயல் தன் படகையும் எதிர்த் திசையில் செலுத்தினான்.
சிறிது நேரம் கடந்தது. அப்போது எதிர்த்திசையில் வேறொரு படகு வந்து கொண்டிருந்தது. படகு முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தனர்.
அவர்கள் ஜோயலிடம், ""எங்கே போகிறாய்?'' என்று கேட்டனர்.
""நான் ரண்டி வீட்டிற்கு விருந்திற்குச் செல்கிறேன்!'' என்று பதிலளித்தான்.
ஜோயல் சொன்னதைக் கேட்டதும் படகிலிருந்தவர்கள் சிரித்தனர்.
""என்ன... ரண்டி வீட்டிற்கா செல்கிறாய்? அங்கே உனக்கு ஒரு கிண்ணம் நிறைய கூழ்தான் கிடைக்கும்!'' என்று கேலியாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.
இப்போது ஜோயலுக்கு மீண்டும். குழப்பம் ஏற்பட்டது.
"எங்கே செல்வது?' என்று ஜோயல் சிறிது நேரம் தடுமாறி நின்றிருந்தான். பிறகு, "விக்டர் வீட்டிற்கே செல்லலாம்' என்று நினைத்த ஜோயல் மீண்டும் எதிர் திசையில் படகைச் செலுத்தத் தொடங்கினான். அதற்குள் சிலமணி நேரம் கடந்திருந்தது.
சிறிது தூரம் படகும் சென்றது. அப்போது, எதிர்த் திசையிலிருந்து ஒரு படகு வந்தது. அப்படகு முழுவதும் ஆட்கள் நிரம்பி யிருந்தனர்.
ஜோயலும், ""நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்டான்.
""நாங்கள் விக்டர் வீட்டு விருந்திற்குச் சென்று வருகிறோம்! உண்மையிலேயே விக்டர் பரந்த மனம் கொண்டவர்தான். அவர் எங்களுக்குச் சுவையான உணவு தந்ததுடன், ஒவ்வொருவருக்கும் அழகான சால்வை ஒன்றையும் பரிசளித்தார்!'' என்று கூறிவிட்டு படகைச் செலுத்தினர். அதைக் கேட்ட ஜோயலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"ஐயோ... நான் செல்வதற்குள் விக்டர் வீட்டில் விருந்து முடிந்துவிடும் போலிருக்கிறதே! இனி என்ன செய்வது? நான் ரண்டி விருந்திலாவது கலந்து கொள்ள வேண்டும்!' என்று நினைத்த ஜோயல், தன் படகை எதிர்த் திசைக்குத் திருப்பினான்.
ரண்டி வீட்டில் விருந்து முடியும் முன்பே தான் அங்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் படகை வெகுவேகமாகச் செலுத்தினான். ஏற்கனவே உணவு எதுவும் சாப்பிடாமல் புறப்பட்டு வந்த ஜோயலுக்கு மிகவும் களைப்பு தோன்றியது.
இருப்பினும் ரண்டி வீட்டில் விருந்து உண்டு, பசியை ஆற்றிக் கொள்ளலாம் என்று அவன் வேகவேகமாகப் படகைச் செலுத்தத் தொடங்கினான்.
சுமார் ஒரு மணி நேரம் படகைச் செலுத்திய ஜோயல், எதிர்த் திசையில் படகு ஒன்று வருவதைக் கவனித்தான். படகில் எண்ணற்ற மனிதர்கள் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் ஜோயலிடம், ""ஜோயல்! எங்கே போகிறாய்?'' என்று கேட்டனர்.
""நான் ரண்டி வீட்டிற்கு விருந்திற்குச் செல்கிறேன்!'' என்று பதிலளித்தான்.
""என்ன இவ்வளவு தாமதமாக வருகிறாய்? ரண்டி வீட்டில் விருந்து முடிந்து விட்டதே! ரண்டி உண்மையிலேயே வள்ளல் தான்! அவர் வீட்டுக்கு விருந்திற்கு வந்த அனைவருக்கும் வெள்ளி நகைகள் பரிசளித்தார்!'' என்று சொன்ன அவர்கள், தங்களுக்குக் கிடைத்த பரிசுகளையும் ஜோயலிடம் காட்டினர்.
இப்போது ஜோயலுக்கு தன் மீதே இரக்கம் வந்தது.
"ஐயோ! ரண்டி வீட்டிலும் விருந்து முடிந்து விட்டதா? இப்போது என்ன செய்வது? விக்டர் உணவின் மீது விருப்பம் உள்ளவராக இருப்பதால், அவர் வீட்டில் உணவு நிச்சயம் இருக்கும். பரிசுப் பொருட்கள் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. வயிறார உணவாவது கிடைக்காமலா போய்விடும்?' என்று நினைத்த ஜோயல், படகை விக்டர் வீடு இருக்கும் திசையில் செலுத்தத் தொடங்கினான்.
பசியால் மிகவும் களைத்துப் போயிருந்த ஜோயல், தன்னால் இயன்ற அளவு வேகமாக படகைச் செலுத்தி ஒருவழியாக விக்டர் வீட்டை அடைந்தான்.
ஜோயலைக் கண்ட விக்டர் ""ஜோயல்! நீ இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய்? இங்கே விருந்து முடிந்து வெகுநேரமாகி விட்டதே! நீ இவ்வளவு தாமதமாக வந்து விட்டாயே... இனி என்றேனும் நான் விருந்து வைத்தால் உன்னை அழைக்கிறேன். அப்போதாவது சரியான நேரத்திற்கு வந்து சேர்!'' என்று சொன்னார்.
விக்டர் சொன்னதைக் கேட்ட ஜோயலுக்கு முகம் வாடி விட்டது.
"எல்லாம் என்னுடைய பேராசையால் விளைந்தது அல்லவா? ஏதேனும் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தால் உணவும், பரிசுப் பொருளும் கிடைத்திருக்கும்! மனைவி ஜானுவும் அவள் தாய் வீட்டிற்குச் சென்று விட்டாளே! இன்று முழுவதும் பசியோடு இருக்க வேண்டியதுதான்!'' என்று நினைத்த ஜோயல், படகின் மீது ஏறி தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் மயக்கத்துடன்.
குட்டீஸ்... இதற்குத்தான் பேராசைப் படக்கூடாது. அத்துடன் யார் எதைச் சொன்னாலும் நம்பக்கூடாது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X