இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2014
00:00

ஆண்களைப் போல் பெண்களும்...
எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன; என் மனைவியும் வேலை பார்க்கிறார். எனக்கு பதவி உயர்வுடன், வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவே, நான் மட்டும் வெளியூர் சென்று, ரூம் எடுத்து தங்கி, ஓட்டலில் சாப்பிட்டு வருகிறேன். என் சபல புத்தியால், ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது; ஒரு கட்டத்தில் அப்பெண்ணுடனான உறவை துண்டித்து விட்டேன். ஆனால், என்னுடைய துரோக செயலை என் மனைவி எப்படியோ தெரிந்து, என்னிடம் விசாரித்தாள். 'ஏதோ சிறு சபலம்; வேலை வேலைன்னு சலித்துப் போய் ஒரு வேகத்தில் தவறு செய்து விட்டேன்...' என்று மழுப்பலாக பதில் கூறினேன்.
உடனே என் மனைவி, 'அப்படியானால் நானும் சலித்து போய் இன்னொரு ஆணிடம்...' என்று கூறி, அழுது விட்டாள். 'இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்...' என்று உறுதி கூறி, அவளை சமாதானப்படுத்தினேன்.
ஆண்கள் நினைப்பது போல பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால், வாழ்க்கை, குடும்பம் எல்லாம் நாசமாகி விடும் என்பதை உணர்ந்து, என் மனைவி போட்ட கோட்டுக்குள் அடங்கி, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன்.
சபலிஸ்ட்களே... கண நேர தடுமாற்றத்தால், வாழ்க்கையை தொலைத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
என்.பார்த்திபன்,சென்னை.

மதுவால் மதியிழந்தவர்!
என் உறவினர் ஒருவர் உ.பா., மன்னர். பணம் இல்லையென்றால் கூட, பிறரிடம் கடன் வாங்கியாவது மது அருந்தி விடுவார். அப்படி மற்றவரிடம் கடன் கேட்கும் போது, உ.பா.,க்கு என்று கேட்பதில்லை. 'மனைவிக்கு திடீரென்று நெஞ்சு வலி; ஆஸ்பத்திரிக்கு போவணும்; மகனுக்கு காய்ச்சல்...' என, நா கூசாமல் பொய் பேசி, கடன் வாங்குவார். இது, ஏமாற்று வேலை என்பது ஒரு கட்டத்தில் அனைவருக்கும் புரிந்து விட்டது.
சமீபத்தில் உண்மையாகவே அவரது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே, ஆஸ்பத்திரிக்கு செல்ல கையில் பணமின்றி, கடன் கேட்டு நாயாக அலைந்திருக்கிறார். 'தூ... நீயெல்லாம் ஒரு மனுஷனா... நீ குடிக்கறதுக்காக பொண்டாட்டிக்கு முடியலன்னு பொய் சொல்றியே... உனக்கெல்லாம் நல்ல சாவு கிடைக்காது...' என்று ஏக வசனத்தில் திட்டு கிடைத்ததுடன், எவரும் பணம் கொடுத்து உதவவில்லை.
அவர் கதறி அழுவதை கண்டபின், அக்கம், பக்கத்தினர் நிலைமையை உணர்ந்து உதவியிருக்கின்றனர். பொய்கள் சில சமயம் உண்மையாகி விடும் என்பதை உணர்ந்த அவர், தற்போது, மது மயக்கத்தால், மதியிழந்ததை எண்ணி வருந்துகிறார். இவரைப் போன்றோர், பட்டால் தான் திருந்துவர் போலும்!
வி.ராமகிருஷ்ணன், கடலூர்.

பட்டாசை தவிர்ப்போம்!
தீபாவளி என்றதுமே முக்கியத்துவம் பெறுவது பட்டாசு தான்; ஆனால், நம் முன்னோர் கொண்டாடிய தீபாவளி திருநாளில், பட்டாசு இடம் பெற்றதில்லை. தீப ஒளி திருநாளாக தான் இறைவனை வழிபட்டு, புத்தாடை உடுத்தி, விளக்குகளால் வீட்டை அலங்கரித்து வழிபட்டனர். அப்போது, நெய் மற்றும் பலதரப்பட்ட எண்ணெய்களினால் ஏற்றப்பட்ட விளக்குகளிலிருந்து ஆவியாகும் ஒவ்வொரு எண்ணெயும் காற்றில் கலந்து, காற்றை சுத்தப்படுத்தின; சுற்றுச்சூழலும் மாசின்றி இருந்தது.
முகலாயர்கள் இந்தியாவை ஆளத் துவங்கிய போது, இந்து - முஸ்லிம் கலவரங்கள் தோன்றலாயின. இதற்கு முடிவு கட்ட நினைத்த முகலாய அரசர் பாபர், இந்துக்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டு, பட்டாசுகளை பரிசளித்து, மத நல்லிணக்கத்தை துவக்கி வைத்தார்; இந்த விவரம், 'அயினி அக்பரி' எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
அப்பட்டாசுகளின் ஒளியும், ஒலியும் நம்மை கவர, அன்றிலிருந்து தான் இந்த பட்டாசு கலாசாரம் நம்மை விடாமல் தொற்றிக் கொண்டது. தீப ஒளிகளை குறைத்து, பட்டாசுக்கு மாறியதன் விளைவு, சுற்றுச்சூழல் மாசு; ஓசோன் படலத்தில் ஓட்டை!
அதனால் வாசகர்களே... காசை கரியாக்கி, சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் பட்டாசை தவிர்ப்போம்; வீட்டில், விளக்கேற்றி வைத்து தீபாவளியை கொண்டாடி, சுற்றுச்சுழலை காப்போம்.
வீ.ஆர்.ஜவஹர், கீழ்க்கட்டளை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
01-நவ-201405:18:50 IST Report Abuse
p.manimaran நல்ல கருத்துகள்
Rate this:
Cancel
Raman - Chennai,இந்தியா
28-அக்-201407:12:28 IST Report Abuse
Raman இன்று ஓசோன் ஓட்டை விழ, ஏசியில் பயன்படுத்தப்படும் இரசாயனம் ஒரு முக்கிய காரணி. அதி முக்கிய காரணி. அது பட்டாசில் இருந்து வருவதில்லை. பட்டாசில் இருந்து வருவது சுற்று சுழல் மாசு எனலாம். ஆனால் இன்று மீத்தன் அதிகமாக வெளியிடுவது - நாம் புனிதமாக கருதும் மாடு. (நான்கு இரைபைகள் கொண்ட ஜீவன் எல்லாமே). மீதேன் கார்பன்-டை-ஆக்சைடை விட நான்கு மடங்கு அதிகமாக வெப்பத்தை தக்க வைத்து வெப்பமயமாக்குதலை அதிகமாக்கும். சரி பட்டாசு வெடிப்பதால் (காதுக்கு அதிர்ச்சி, தூசு, பேப்பர் குப்பை என்பதை தவிர) வெளியாகும் கந்தக வாயு - அத்தனை கெட்டது அல்ல. அவை பெரும்பாலும் பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்துகின்றன. நம்புங்கள், பட்டாசு வெடிப்பதால் சுற்று சுழல் மாசு இல்லை என்று ஆய்வுகள் சொல்லி இருக்கின்றன. பட்டாசை விட போகி அன்று எரியவிடபடும் டயர் மிக மிக கெடுதல் ஆனது. பாவம் பட்டாசை குறை சொல்லாதீர்கள்.
Rate this:
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
27-அக்-201413:39:00 IST Report Abuse
Giridharan Srinivasan வீ.ஆர்.ஜவஹர், கீழ்க்கட்டளை, அவர்களே, நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள். மற்று ஒரு பக்கமான வேலை வாய்ப்பு பெற்று சந்தோஷமாக இருக்கும் குடும்பங்களை பாருங்கள். யாரும் காசை கரியாக்கவில்லை. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X