புதிய சகாப்தத்தினை நோக்கி ஆண்ட்ராய்ட் லாலிபாப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 அக்
2014
00:00

சென்ற ஜூன் மாதம் நடைபெற்ற கூகுள் டெவலப்பர்களின் கருத்தரங்கில், அடுத்து வெளியிடப்பட இருக்கும், தன் ஆண்ட்ராய்ட் எல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, கூகுள் கோடி காட்டியது. சென்ற வாரத்தில், லாலிபாப் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 5.0 னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, ஏறத்தாழ ஓராண்டிற்குப் பின்னர், இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகியுள்ளது. இந்த சிஸ்டத்தின் இயக்கம் முழுவதும், முற்றிலும் புத்தம் புதிய கட்டமைப்பு காட்டப்படுகிறது. லாலிபாப் கட்டமைப்பில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும், கிட் கேட் அமைப்பில் உள்ளனவற்றைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் இயங்குகின்றன. அப்ளிகேஷன்களைத் தொடங்குகையில் இந்த வேகத்தினை நன்கு உணரலாம்.
நோட்டிபிகேஷன்கள் தரப்படுவது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகளை எடுத்துச் செயல்படுத்துவதில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்னும் சில கூடுதல் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

புதிய தோற்றம்: லாலிபாப் சிஸ்டத்தின் இயக்கத்தைப் பார்த்தவுடன் நம்மை ஈர்க்கும் ஒரு மாற்றம் அதன் கட்டமைப்பில் தான். கூகுள் இதனை Material Design என்றழைக்கிறது. மிகவும் பளிச் என்ற ஆழமான வண்ணங்கள் கண்களுக்கு இதமாக உள்ளன. இவற்றினால் ஏற்படும் நிழல் தோற்றங்கள், குறைந்த அளவிலான தோற்றத்தினைக் கொடுக்கின்றன. டெக்ஸ்ட்டுடன் அதிக அளவில் வெள்ளை இடம், குறிப்பாக டெக்ஸ்ட்டைச் சுற்றி தரப்பட்டுள்ளது. திரையுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, நகரும் காட்சிகள் தோன்றி பரவசப்படுத்துகின்றன. வண்ணங்கள் குமிழ்களாகத் தோன்றி மறைகின்றன. கடந்த சில ஆண்டுகளில், கூகுள் தந்திருக்கும் அருமையான மாற்றங்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்த புதிய இடைமுகத்தில் (interface), தொடர்புகளுக்கான படங்கள் சற்றுப் பெரிதாகக் காட்டப்படுகின்றன. தொடர்பு கொள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கையில், காண்டாக்ட் கார்ட் என ஒன்று மேலெழுகிறது. இதன் வண்ணம், எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அறிவிப்புகள் (Notifications): லாலிபாப், நோட்டிபிகேஷன் வகையில் புதிய அமைப்பினைத் தருகிறது. நோட்டிபிகேஷன் கார்ட், லாக் ஸ்கிரீனின் நடுவே காட்டப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் மோட்டோ அலர்ட்ஸ் வகைகளில் தரப்படுவது போல் உள்ளது. ஒவ்வொரு அறிவிப்பும் ஒரு கார்ட் வழி தரப்படுகிறது. இதன் கீழ் விரி மெனுவினைப் பார்க்கும் போதும், அதே கார்ட் அமைப்பு காட்டப்படுகிறது. கூகுள் தான் வழங்கும் நோட்டிபிகேஷன்களை, தன் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளது. அத்துடன், நாம் விரும்பும் வகையில் இந்த நோட்டிபிகேஷன் அறிவிப்புகளைச் சற்று மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கையில், இந்த அறிவிப்பு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அதனை அமைக்கலாம். அதே வேளையில், அந்த அறிவிப்பில், எந்த அளவில் தகவல்கள் இருக்க வேண்டும் என்பதனையும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக, அஞ்சல் குறித்த அறிவிப்பில், அஞ்சல் 'சப்ஜெக்ட் லைன்' தேவையில்லை என நினைத்தால், கூகுள் மெயில் சென்று அமைத்திடலாம்.
புதியதாக Heads Up நோட்டிபிகேஷன் என்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையின் மேலாக இது கிடைக்கிறது. நீங்கள் ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது விடியோ கிளிப் ஒன்றை ரசித்துக் கொண்டிருக்கும்போதோ, கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போதோ, மின் அஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது வரும் அழைப்பு போன்றவை குறித்து சிறிய அளவில் தகவல் தருகிறது. உடனே, நாம் விரும்பினால், அந்த மின் அஞ்சல் அல்லது அழைப்பினை ஏற்று செயல்படலாம். அல்லது அந்த நோட்டிபிகேஷனைக் கூட முழுமையாகப் பார்க்காமல், நம் விளையாட்டில் கவனம் செலுத்தலாம். அல்லது, அந்த நோட்டிபிகேஷனையே ஸ்வைப் செய்து சேவ் செய்து வைக்கலாம்.
வால்யூம் பட்டனைப் பயன்படுத்தி Priority mode என்னும் நிலைக்குச் சென்று, முக்கியமான நோட்டிபிகேஷனை மட்டும் முழுமையாகப் படிக்கலாம். இது ஏறத்தாழ, Do Not Disturb நிலையில் இயங்குவதற்கு ஒப்பாகும்.

மல்ட்டி டாஸ்க் (Multitasking): ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளூம் மல்ட்டி டாஸ்க் செயல்பாடு, லாலிபாப் சிஸ்டத்தில் நல்ல மேம்பாட்டினைக் கொண்டுள்ளது. "Recent apps" என்ற மெனு எடுக்கப்பட்டு விட்டது. ''Overview” என்னும் புதிய மெனு, பின்புலத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களையும், அடுத்தடுத்த அட்டைகளாகக் காட்டுகிறது. இந்த அட்டைகளின் குறுக்காகச் சென்று, நமக்குத் தேவையான புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இதே மெனுவில், ஒரே புரோகிராமில் நாம் இயக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களையும் காணலாம். எடுத்துக் காட்டாக, ஜிமெயிலில், நீங்கள் ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கலாம்; அனுப்பிய மெயில் ஒன்றை மீண்டும் பார்த்து, புதிய மெயிலை வடிவமைக்கலாம். இவை எல்லாம், வரிசையாக அடுக்கப்பட்ட, தனித்தனி சீட்டுக்கட்டு அட்டைகளைப் போலக் காட்டப்படும்.

சாதனத்தைப் பகிர்ந்து கொள்ளல் (Device sharing): ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் வசதி, டேப்ளட் பி.சி.க்களில் தரப்பட்டது. இப்போது மொபைல் போன்களிலும் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்குக் கூட, தனக்கென ஒன்றும், குடும்பத்திற்கென ஒன்றும், அலுவலகத்திற்கென ஒன்றுமாக பல யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கி அமைத்துக் கொண்டு செயல்படலாம். நம் குழந்தைகளுக்கு தனி அக்கவுண்ட் உருவாக்கி, அவர்கள் என்ன அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம். இதன் மூலம், உங்களுடைய போன் உங்களிடம் இல்லை என்றாலும், லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் இன்னொரு போனை அணுகி, உங்களுடைய தொடர்புகள், மெசேஜ்கள், போட்டோக்கள் போன்றவற்றைப் பெற்று இயக்கலாம். இதே போல, சற்று நேரத்திற்கு போனைப் பயன்படுத்த ஒருவருக்கு தர வேண்டிய சூழ்நிலையில், ''guest mode” என ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தக் கொடுக்கலாம். ஒரே ஒரு அப்ளிகேஷனை மட்டும் அந்த நிலையில் பயன்படுத்துமாறு அமைக்கலாம். மேலும், திரை ஒன்றை பின் செய்து அமைக்கலாம். வேறு எந்த திரைக்கும் மற்றவர் செல்ல முடியாது. ஒரே ஒரு அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கு, இந்த வசதியைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, உங்கள் குழந்தைகள் விளையாட, கேம் ஒன்றை இயக்கி, ''guest mode” ல் அமைத்து, போனை குழந்தைகள் வசம் கொடுத்துவிடலாம். அவர்கள் வேறு எந்த செயல்பாட்டிற்கும் செல்ல இயலாது.

வேகமான செட்டிங்ஸ் அமைப்பு (Quick settings): செட்டிங்ஸ் அமைப்பில் Quick settings பிரிவில், பல புதிய கண்ட்ரோல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு விரல்களைக் கொண்டு திரையின் மேலிருந்து கீழாக இழுத்தால், ப்ளாஷ் லைட், ஹாட்ஸ்பாட், ஸ்கிரீன் அமைப்பு என இன்னும் பல செட்டிங்ஸ் அமைப்புகளுக்கான கண்ட்ரோல்கள் கிடைக்கின்றன. வை பி, புளுடூத் மற்றும் இடம் அறிந்த சேவை (Location services) ஆகியவற்றிற்கான சேவை வழிகள் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில் திரையின் ஒளி வெளிப்பாட்டினை, நாமாகவே அட்ஜஸ்ட் செய்திடலாம்.

பேட்டரி மின் சக்தி மிச்சப்படுத்தல் (Battery saving): லாலி பாப் சிஸ்டத்தில், புதியதான Battery Saver நிலை சேர்க்கப்பட்டுள்ளது. போன் இயக்கத்திற்குச் சற்று கூடுதலான மின்சக்தி தேவைப்படுகையில், சி.பி.யு. வின் இயக்கத்தைக் குறைக்கிறது. பின்னணியில் இயங்கும் டேட்டா செயலாக்கத்தை நிறுத்துகிறது. இந்த செயல்பாட்டினை நாமாகவே அமைக்கலாம். அல்லது தேவைக்கேற்றபடி புரோகிராம் செய்து கொள்ளலாம். மிகவும் குறைவான சக்தியுடன் பேட்டரி இருக்கையில், மேலும் 90 நிமிடங்களுக்கு கூடுதலாக அது மின் சக்தி தரும் வகையில், சிஸ்டம் அமைத்திடும் என கூகுள் அறிவித்துள்ளது.
நோட்டிபிகேஷன் அறிவிப்பு கூடுதலான வெளிப்பாட்டினைக் கொண்டுள்ளது. போனின் திரையைப் பார்ப்பதனை நாம் மாற்றும்போது, இயக்கப்படும் படங்கள், விடியோக்களின் காட்சிகள், அதற்கேற்ற வகையில் திருப்பப்படும் auto-rotatation வசதி, நோட்டிபிகேஷன் வெளிப்பாட்டிற்கும் தரப்பட்டுள்ளது. போனின் பேட்டரியினை சார்ஜ் செய்திடும் முன்னர், இன்னும் எவ்வளவு நேரத்திற்கு சார்ஜ் இருக்கும் என்று பார்க்க முடியும். பேட்டரி செட்டிங்ஸ் மெனுவில், இந்த நேரக் கணக்கினைக் காணலாம்.

மற்ற கூடுதல் வசதிகள்: புதியதான கூடுதல் வசதிகளைப் பார்க்கையில், போனை புளுடூத் சாதனம் கொண்டு லாக் திறக்கும் வசதியினைக் கூறலாம். இது ஏற்கனவே மோட்டோ 360 மாடல் போனில் தரப்பட்டுள்ளது. இதன்படி, நம் புளுடூத் சாதனத்தினைப் போனின் அருகே கொண்டு போனால், போனின் லாக் தானாக திறக்கப்படும். அதனைத் தொலைவில் கொண்டு செல்கையில், போனுக்கான பின் (PIN), பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் லாக் செயல்படத் தொடங்கும். "OK, Google" என்ற வாய்ஸ் கட்டளை, ஸ்கிரீன் ஆப் நிலையில் இருக்கும்போதும், நெக்சஸ் 6 மற்றும் நெக்சஸ் 9 மாடல் போன்களில் இயங்குகிறது.
பழைய போனில் உள்ள செட்டிங்ஸ் அமைப்பினை, புதிய போனுக்கு மாற்ற அவற்றில் உள்ள என்.எப்.சி. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, விரைவாக மாற்றிக் கொள்ளலாம். மல்ட்டிமீடியா பைல்கள், மேம்படுத்தப்பட்ட வெளிப்பாட்டுடன் இயக்கப்படுகின்றன.
போட்டோ எடுக்கும் வல்லுநர்களுக்கு உதவிடும் வகையில் பல அம்சங்கள் இதில் தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி எடுக்கப்படும் போட்டோவின் தரத்தினைப் பல வகைகளில் மேம்படுத்தலாம். என்.எப்.சி. இயக்கத்தில் எளிதாக டேப் செய்து பணம் செலுத்தலாம்.
அச்சிடுகையில், பிரிண்ட் பிரிவியூ காட்சி கிடைக்கிறது. குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடும் வசதியும் தரப்படுகிறது.
இணைக்கக் கூடிய வை பி தொடர்பலை இருப்பின், போன் தானாகவே அதனுடன் இணைந்து இணைப்பினைத் தெரிவிக்கிறது. வை பி சிக்னல் நெட்வொர்க்கில் பணியாற்றியவாறே செல்கையில், அந்த சிக்னல்கள் கிடைக்காத போது, தானாகவே, டேட்டா சிக்னலுக்கு மாறிக் கொள்கிறது.
அருகில் இயங்கும் புளுடூத் சாதனங்களைத் தேடுவதில், குறைந்த அளவில் அலைக் கற்றைகளை வெளியிடும் சாதனங்களைத் தேடி அறிய, தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை ஆண்ட்ராய்ட் லாலிபாப் சிஸ்டம், கூடுதலாக 68க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான சப்போர்ட் கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, சிங்களம், நேபாளி ஆகிய மொழிகளுக்கு சப்போர்ட் தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் லாலிபாப் பெறும் சாதனங்கள்: கூகுள் தன்னுடைய புதிய ஆண்ட்ராய்ட் லாலிபாப் (Android 5.0) ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த சாதனங்களில் உடனே அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சிஸ்டத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்சஸ் 6 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்சஸ் 9 டேப்ளட் ஆகியவை இந்த வகையில் முதலிடம் பெறுகின்றன. இவற்றை அடுத்து, நெக்சஸ் 5, நெக்சஸ் 7, நெக்சஸ் 10 மற்றும் கூகுள் ப்ளே எடிஷன் சாதனங்கள் தொடர்ந்து பெறுகின்றன. கூகுள் ப்ளே எடிஷன் சாதனங்களில் எச்.டி.சி. ஒன் எம்8, மோட்டோ ஜி ஆகியவை இடம் பெறுகின்றன. மற்ற ஆண்ட்ராய்ட் சாதனங்களில் எவை எல்லாம் மேம்படுத்தப்படும் என கூகுள் விரைவில் அறிவிக்க இருக்கிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X