கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 அக்
2014
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கம்ப்யூட்டருக்கான ஐகானில், Computer என்று இருக்கிறது. இதனை My Computer என பழையபடி மாற்ற விரும்புகிறேன். அதற்கான வழிகள் என்ன? மாற்றுவதால், அதன் செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?
கி. ராமநாதன், திருப்பூர்.
பதில்:
மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் பெயரை “My Computer” என்று இருந்ததை “Computer” என்றும் பின்னர் “This PC,” என்றும் மாற்றியது. இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற பெரிய அளவில் செட்டிங்ஸ் திருத்தம் தேவை இல்லை. வழக்கம்போல, போல்டருக்கான ஐகான் அல்லது பைல் பெயரை எப்படி மாற்றுவீர்களோ, அதே போல இதனையும் மாற்றலாம். ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Rename தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது உள்ள பெயர் தேர்ந்தெடுக்கப்படும். இதில் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்து, எண்டர் தட்டி வெளியே வந்தால், நீங்கள் இட்ட பெயர் அமைக்கப்படும். இதனால், எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், சில இடங்களில் இந்த பெயர் மாற்றம் காட்டப்பட மாட்டாது. எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் ஸ்கிரீனில் இந்த மாற்றம் ஏற்படாது.

கேள்வி: நான் புதியதாக ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி. ஒன்று வாங்கியுள்ளேன். எனக்கு இதன் தொழில் நுட்பம் அவ்வளவாகத் தெரியாது. இதில் தேதி மற்றும் நாள் எப்படி செட் செய்வது எனக் காட்டவும். அதற்கான வழிகளைக் கூறவும்.
கா. சுரேந்திரன், மதுரை.
பதில்:
தாராளமாகச் சொல்கிறேன். இது மிகவும் எளிதானதுதான். பெரிய அளவில் தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. திரையில் உள்ள கியர் ஐகானைத் தட்டி செட்டிங்ஸ் திறக்கவும். அல்லது உங்கள் டேப்ளட் பி.சி.யில் ஏதேனும் மெனு பட்டன் இருந்தால், அதனைத் தட்டவும். உங்கள் டேப்ளட் பி.சி.யைப் பொறுத்து clock and calendar என்ற பிரிவு கிடைக்கும். அல்லது “More” என்ற பிரிவு கிடைக்கும். இதனைத் தட்டி புதிய திரையைப் பெறவும். இங்கு Date and Time என்பதில் தட்டவும். இதற்கான திரை கிடைக்கும். இங்கு தேதி அமைக்க பல ஆப்ஷன்கள் காட்டப்படும். உங்கள் விருப்பப்படி ஆப்ஷன் தேர்ந்ஹெடுக்கவும். இதே போல, நேரம் அமைக்கவும் ஆப்ஷன்கள் தரப்படு. குறிப்பாக அது 24 மணி நேர அளவில் காட்டப்பட வேண்டுமா; அல்லது 12 மணி நேர அளவில் காட்டப்பட வேண்டுமா என்ற ஆப்ஷன் கிடைக்கும். முற்பகல் / பிற்பகல் (AM/PM) ஆப்ஷனையும் அமைக்க மறந்துவிட வேண்டாம். இவை அமைப்பதில் பொறுமையைக் கையாண்டு அமைக்கவும். 24 மணி நேர பார்மட்டைத் தேர்ந்தெடுத்தால், முற்பகல், பிற்பகல் பார்மட் கிடைக்காது. அனைத்தையும் சரியாக அமைத்த பின்னர், சேவ் செய்து வெளியேறவும். சிலவற்றில் சேவ் பட்டன் இருக்காது. அமைத்துவிட்டாலே போதும்.

கேள்வி: சில வேளைகளில், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட்டில், நன்றாக ஒரு சார்ட் தயார் செய்த பின்னர், அதனை இன்னொரு வகையில் மாற்ற வேண்டும் என என் மேல் அதிகாரிகள் கூறுகின்றனர். மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இதற்கான சுருக்கு வழி ஏதேனும் உள்ளதா? அதாவது அப்படியே வேறு ஒரு வகை சார்ட் ஆக, ஏற்கனவே தயாரித்த சார்ட்டினை மாற்ற முடியுமா? முன்கூட்டியே தங்களுக்கு நன்றி.
-என். ஆர். கேசவன், திருப்பூர்.
பதில்:
மாற்றி அமைக்கலாம். நம் பணிப்பளுவினைக் குறைக்கத்தானே கம்ப்யூட்டர்களை நாம் பயன்படுத்துகிறோம். சரி, இனி உங்கள் கேள்விக்கு வருவோம். மாற்றுவதற்கு, முதலில் அமைக்கப்பட்டுள்ள சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு சார்ட் மீது ஜஸ்ட் ஒரு கிளிக் செய்திடவும். அது உடனே தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது என்று காட்ட, அதனைச் சுற்றி பார்டர் கட்டம் தெரியும். அடுத்து, ரிப்பனில் டேப் காட்டப்பட வேண்டும். இல்லை எனில், அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Type குரூப்பில் Change Chart Type என்ற டூலின் மீது கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது Change Chart Type என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸின் இடது பக்கத்தில் காட்டப்படும் சார்ட் வகை ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுக்கையில், டயலாக் பாக்ஸின் வலது பக்கம் உள்ள தகவல்கள் மாற்றப்படுவதனைக் காணலாம். டயலாக் பாக்ஸின் வலது பக்கம் உள்ள சார்ட் வகை ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் விரும்பிய வகையில், தேர்ந்தெடுத்த வகையில் சார்ட் மாற்றம் அடைந்திருக்கும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை இடையே அமைக்கையில், அதனைச் சுற்றிலும் பார்டர் அமைந்துவிடுகிறது. சில வேளைகளில் பார்டர் இல்லாத டேபிள் தேவைப்படுகிறது. தரப்பட்டிருக்கும் டேபிள் மாடல்களும், பார்டருடன் தான் தரப்படுகின்றன. பார்டர் இல்லாமல் அமைக்க என்ன செட்டிங்ஸ் ஏற்பாடு செய்திட வேண்டும்?
அ. ராஜு விஜயன், தேவாரம்.
பதில்:
உண்மைதான். பார்டர் இல்லாமல் டேபிள் அமையாது. ஏனென்றால், பார்டர் பல தகவல்களைத் தெளிவாக்குகிறது. பார்டர் இல்லாமல் டேபிள் இருந்தால், குழப்பங்கள் ஏற்படும் என்று எண்ணியே, இது போன்ற அமைப்பினை, வேர்ட் உருவாக்கியுள்ளதுஜ். ஆனால், டேபிள் அமைத்த பின்னர், பார்டரினை நீக்கலாம். டேபிளை உருவாக்கிய பின்னர், கர்சரை டேபிளுக்குள் வைத்துக் கொண்டு, Ctrl+Alt+U கீகளை அழுத்தவும். பார்டர்கள் மறைக்கப்படும். நிரப்பப்பட்ட டேட்டா சீராகவும், நேராகவும் இருக்கும். ஆனால், கோடுகளுடனேயே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, அது வித்தியாசமாக இருக்கும்.

கேள்வி: டாகுமெண்ட் ஒன்றில், வேறு ஒரு டாகுமெண்ட்டிலிருந்தோ, அல்லது இணைய தளத்திலிருந்தோ, டெக்ஸ்ட் ஒன்றை காப்பி செய்து ஒட்டுகையில், அது சற்று வித்தியாசமாக, அதன் ஒரிஜினல் ஸ்டைலில் அமைந்துவிடுகிறது. பின், மீண்டும் கஷ்டப்பட்டு, அந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, பார்மட்டிங், பாண்ட் ஸ்டைலை மாற்ற வேண்டியுள்ளது. ஒட்டும்போதே, ஒட்டும் இடத்தில் உள்ள டெக்ஸ்ட் ஸ்டைலிலேயே, ஒட்டப்படும் டெக்ஸ்ட் அமைய என்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும்?
கா. நீதிராஜன், புதுச்சேரி.
பதில்:
இந்த அனுபவம், கம்ப்யூட்டரில் வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தும் பலருக்கு ஏற்பட்டிருக்கும். நீங்கள் இவ்வாறு ஒட்டுகையில், ஒட்டப்பட்ட பின்னர், அந்த இடத்தை நன்றாகக் கவனித்திருக்க வேண்டும். ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் இறுதி வரியில் சிறிய ஐகான் ஒன்று தெரியும். நீங்கள் ஒட்டிய பின்னர், ஒட்டிய டெக்ஸ்ட்டின் ஸ்டைலை மாற்றுவதில் முனைந்து இதனைக் கவனிக்காமல் விட்டிருப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, பலரும் அப்படித்தான். அந்த சிறிய ஐகான் இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸால் கிளிக் செய்திடவும். அப்போது சிறிய கட்டம் ஒன்று எழுந்து வரும். இதில், நீங்கள் தேர்ந்தெடுக்க மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். இதனைப் படித்துப் பார்த்தால், உங்கள் வேலை மிச்சமாகும். அந்த மூன்று ஆப்ஷன்கள் பின்வருமாறு: : Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. ஒட்டப்படும் டெக்ஸ்ட், ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட் ஸ்டைலில் அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன், ஒட்டப்படும் டெக்ஸ்ட், டாகுமெண்ட் டெக்ஸ்ட்டின் ஸ்டைலுக்கு மாறும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும் போது, இரட்டைக் கோடு ஹைபன் தொடர்ந்து பயன்படுத்தினேன். அது நீண்ட கோடாகத் தானாக மாறி அமைந்துவிட்டது. இதனை டெலீட் செய்திட முடியவில்லை. பேக் ஸ்பேஸ், டெலீட் கீ என எது பயன்படுத்தினாலும், அது அழிய மறுக்கிறது. டாகுமெண்ட்டில் இது அழகைக் கெடுக்கும் வரியாக உள்ளது. என்ன செய்து இதனை நீக்கலாம்?
என். பங்கஜம், தாம்பரம்.
பதில்
: இது ஆட்டோ கம்ப்ளீட் செயல்பாட்டினால் ஏற்படுவது. டாகுமெண்ட் டெக்ஸ்ட் வகையிலிருந்து இந்த வரி பார்டர் மற்றும் ஷேடிங் என்ற வகைக்குச் செல்வதால், வழக்கமான டெலீட் கீ மற்றும் பேக் ஸ்பேஸ் கீ செயல்பாடுகள் இங்கு செயல்படுவதில்லை. இதனை நீக்க, அந்த கோட்டின் மேல், கீழ் உள்ள வரிகளுடன் உள்ள டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் பேஜ் லே அவுட் ரிப்பனில், பேஜ் பேக் கிரவுண்ட் பிரிவிற்குச் செல்லவும் இங்கு மூன்றாவதாகத் தரப்பட்டுள்ள பேஜ் பார்டர்ஸ் பிரிவில் கிளிக் செய்தால், சிறிய விண்டோ கிடைக்கும். இதில் உள்ள மூன்று பிரிவுகளில், முதலாவதாக உள்ள பார்டர்ஸ் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு செட்டிங் என்பதன் கீழாகத் தரப்பட்டுள்ள பிரிவுகளில், None என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுக்கு பிரச்னை தரும் கோடு மறைந்துவிடும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தினைச் சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். என் மானிட்டர் தொட்டு இயக்கும் தொழில் நுட்பம் இல்லாமல் அமைக்கப்பட்டது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தரப்பட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் இரண்டு பதிப்புகளில், மெட்ரோ பதிப்பினைப் பதிந்து, மவுஸ் மற்றும் கீ போர்டு மூலம் பயன்படுத்த முடியுமா? தற்போதைக்கு நான் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன்.
என். ஸ்ரீவத்ஸன், திருப்பூர்.
பதில்:
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் மெட்ரோ பதிப்பு, விண்டோஸ் 8 சிஸ்டத்தினை தொடு திரையில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொட்டு இயக்க வேண்டும் என்பதாலாயே, இதில் உள்ள பட்டன்கள் சற்றுப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், நம் விரலால் சரியாகத் தொட்டு இயக்க முடியும். இந்த கட்டங்களும் வேறு வகையில் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதனைத் தாராளமாக, தொடு உணர் திரை இல்லாத மானிட்டர்களிலும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள், மவுஸின் கர்சருக்கு இது சரியாகவும் விரைவாகவும் இயங்கவில்லை எனக் குறை கூறினார்கள். எனவே தான் மைக்ரோசாப்ட், மவுஸ் கொண்டு துல்லியமாக இயக்கும் வகையில், இன்னொரு பதிப்பினைக் கொண்டு வந்துள்ளது. உங்களுடைய மானிட்டருக்கேற்ற வகையில், அதனையே நீங்கள் பயன்படுத்தலாமே. மெட்ரோ பதிப்பினை மவுஸ் கொண்டு பயன்படுத்துவதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரில் கிடைக்கும் டாஸ்க் பார், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு பெரியதாக அமைந்துள்ளது. இதனை சிறியதாக அமைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
-டி.கனகவள்ளி, தேவாரம்.
பதில்:
எளிதாக சில விநாடிகளில் மாற்றிவிடலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock taskbar என்பதில் டிக் அடையாளம் இல்லை என்பதனை உறுதிப்படுத்தவும். இருந்தால், மவுஸ் கர்சரால் கிளிக் செய்து எடுத்துவிடவும். இனி, டாஸ்க்பாரின் மேலாக உள்ள கோட்டின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். கர்சர் இரு அம்புக் குறி கொண்ட அடையாளமாக மாறும் வரை கோட்டின் மீதாக சுழற்றிச் செல்லவும். மாறிய பின்னர், அதனைக் கீழாக அல்லது மேலாக இழுத்து, டாஸ்க்பாரின் அகலத்தைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தேவையான அளவில் வைத்தவுடன், மீண்டும் டாஸ்க்பாரின் மீது ரைட் கிளிக் செய்து, Lock taskbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

கேள்வி: ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களையும் ஒரே ஸ்ட்ரோக்கில் அழிக்க முடியுமா? அவை ரீசைக்கிள் பின்னுக்குச் சென்ற பின்னர், தேவை எனில், மீண்டும் அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடியுமா?
-கே. பியூலா மார்கரட், தாம்பரம்.
பதில்:
மொத்தமாக ஒரே கட்டளையில் அழித்துவிடலாம். ஆனால், இவை எதுவும் ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. எனவே, அழித்துவிடலாம் என்று தீர்க்கமாக முடிவு செய்த பின்னரே, அவற்றை அழிக்க வேண்டும்.
மொத்தமாக அழிப்பதை வெகு எளிதாக மேற்கொள்ளலாம். ப்ளாஷ் ட்ரைவினை பார்மட் செய்தால் போதும். ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரில் இணைக்கவும். பின்னர், கம்ப்யூட்டர் (Computer (Windows 7)) அல்லது மை கம்ப்யூட்டரில் (My Computer (Windows XP))ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பார்மட் (format) என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பார்மட் ட்ரைவ் விண்டோவில், ட்ரைவின் கொள்ளளவு, பயன்படுத்தப்படுள்ள இடம், மீத இடம் போன்ற தகவல்கள் கிடைக்கும். இதில் உள்ள Volume Label என்பதில் கிளிக் செய்து, ட்ரைவின் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றலாம். Quick Format என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். இதன் மூலம் மெதுவான, முழுமையான பார்மட் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் பின்னர் Start என்பதில் கிளிக் செய்து ப்ளாஷ் ட்ரைவினை பார்மட் செய்திடலாம்.
பார்மட்டிங் செயல்பாடு சில நிமிடங்கள் மேற்கொள்ளப்படும். அது மேற்கொள்ளப்படுவதனைச் சிறிய பச்சை நிறத்திலான நீள் பட்டை ஒன்றில் பார்க்கலாம். இது முடிந்தவுடன், உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் எழுதப்படாத ஸ்லேட் மாதிரி இருக்கும். புதிய பைல்களை இதில் இனி எழுதலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
justin - Trichy,இந்தியா
28-அக்-201406:04:19 IST Report Abuse
justin நான் விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். அதனுடன் உள்ள கால்குலேட்டரில் சில கணக்குகள் விடை தவறாக வருகிறது. உதாரணமாக 1,00,000 9 பதிவு செய்து பின் % பதிவு செய்து வரும் விடையை 12 ஆல் வகுத்தால் விடை 75,00,000 வருகிறது. சரியான விடை 750 தான். மற்ற கால்குலேடேர்களில் விடை சரியாக வருகிறது. லுமியா போன்களிலும் இதேதான் . காரணம் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X