மூலிகை சாகுபடியில் மானியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2014
00:00

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90% மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது.
இவ்வாரியமானது அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75%மும், உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலப் பயிர் களுக்கு 50% மும் மற்ற மூலிகைகளுக்கு 20%மும் மானியம் வழங்குகிறது. மானியத்தை தனி விவசாயியாக அல்லாமல் குழுவாக செயல்பட்டால் பெறுதல் எளிதாகும்.
தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 ஹெக்டேரில் சாகுபடி செய்ய மூலிகைப் பயிர் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியத்தைக் காண்போம்.
வசம்பு- 20%, சோற்றுக்கற்றாழை-20%, பேரரத்தை - 20%, சித்தரத்தை -20%, தண்ணீர்விட்டான் கிழங்கு - 20%, வேம்பு - 20%, நீர் பிரம்மி - 20%, சாரணத்தி - 20%, சென்னா (அ) அவுரி - 20%, நித்திய கல்யாணி - 20%, வல்லாரை -20%, சங்குபுஸ்பம் -20%, மாகாளி - 20%, வாவிலங்கம் -20%, நெல்லி -20%, சிறுகுறிஞ்சான் - 20%, நன்னாரி -20%, கச்சோலம் -20%, பூனைக்காலி -20%, துளசி-20%, கீழாநெல்லி -20%, திப்பிலி -20%, செங்கொடிவேலி-20%, குறுந்தொட்டி-20%, மணத்தக்காளி-20%, சீனித்துளசி-20%, நீர்மருது-20%, தான்றி-20%, கடுக்காய்-20%, சீந்தில் -20%, நொச்சி-20%, வெட்டிவேர்-20%, அமுக்கிரா-20%, வில்வம்-50%, வாகை-50%, மாவிலங்கம்-50%, கண்வலிக்கிழங்கு- 50%, பாலா-50%, கொடிவேலி -50%, வேங்கை-50%, நஞ்சறுப்பான்-50%, சந்தண வேங்கை - 75%, சந்தனம் - 75%
குறிப்பு: விவசாயிகள் மேற்கண்ட மூலிகைகளை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானியத்தைக் கருத்தில் கொண்டு சாகுபடி செய்யக் கூடாது. சிறந்த மூலிகைக் கம்பெனிகளுடன் ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது நல்லது.
2. இடவசதி மற்றும் நீர் வசதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. தரமான விதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.
4. சாகுபடி முறை, அறுவடை முறை, பதப்படுத்தும் முறை மற்றும் செலவினங்களை மூலிகைகளை தேர்வு செய்யும் முன் அறிந்து கொள்வது அவசியமாகும்.
மானியம் பற்றிய விபரங்களை அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
ந.கணபதிசாமி, திருமங்கலம்,
மதுரை. 88700 12396

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-நவ-201406:55:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அது என்னங்க சந்தன வேங்கை,நஞ்சறுப்பான்? இந்த மூலிகைகளின் உபயோகம் தெரிந்தவர் உண்டெனில் தயவு செய்து பகிருங்களேன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X