பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2014
00:00

ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் வயல் காணப்படும். உள்ளே நுழைந்தால், மாப்பிள்ளை சம்பா, கருங்குருணை, அம்பாசமுத்திரம், பூங்கார் என பாரம்பரியமிக்க ரகங்களான நெல் சாகுபடியும், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், உளுந்து ஆகிய சிறுதானிய பயிர்களும் புஞ்சை நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
செடிமுருங்கை உள்ளிட்ட கீரைவகைகள், பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு, காங்கேயம் போன்ற உயர்ரக மாடுகள் வளர்ப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயி ஆர்.முருகேசன் கூறியதாவது: யோகா ஆசிரியரான, எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அழிந்துவரும் விவசாயத்திற்கு புத்துணர்வூட்டும் வகையில் பாரம்பரியமிக்க நெல், தானியங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பலமுறை எனது தோட்டத்திற்கு வந்துள்ளார்.
அவரின் ஆலோசனையின் பேரில் முழுக்க...முழுக்க இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல் 2 ஏக்கரிலும், பூங்கார் 2 ஏக்கரிலும், அம்பாசமுத்திரம் 2 ஏக்கரிலும் நடவு செய்துள்ளேன். இதில், பூங்கார் வறட்சியை தாங்கி விளையும் நெல் பயிராகும். 70 முதல் 80 நாட்களில் மகசூல் கிடைக்கும்.
தற்போது இந்த ரக நெல் மகசூல் பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்த நாள் முதல் "பஞ்ச கவ்யம்' எனும் உரம் போட்டு வருகிறேன். இந்த உரம், மாட்டுச்சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்டது. இதுபோன்ற இயற்கை உரமிடுவதால் பயிர் நன்றாக வளரும். பூச்சி தாக்குதல் இருக்காது.
ஏக்கருக்கு 30 மூடை பூங்கார் ரக நெல் மகசூல் கிடைக்கிறது. ஒரு மூடை 1,500 ரூபாய் வரை விலை போகிறது. இதனால், 2 ஏக்கர் பூங்கார் நெல் சாகுபடி மூலம் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைத்து வருகிறது. இதுதவிர, நாவல், நெல்லி, மா, வேம்பு, புங்கன், மகோகனி உட்பட 3,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். பூசணி, வெண்டை, கத்திரி, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி செடிகளையும் நடவு செய்துள்ளேன்.
பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு 4 இடங்களில் 21 அடி ஆழமுள்ள பண்ணை குட்டைகளை வெட்டியுள்ளேன். "மோட்டார் பம்பு செட்' மூலம் அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். எனது தோட்டம் மூலம் ஆண்டிற்கு 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன், என்றார்.
ஆலோசனை பெற 94434 65991ல் தொடர்பு கொள்ளலாம்.
- ஆர். ராஜ்குமார்,
ராமநாதபுரம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X