கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில், உள் சுத்தம் மற்றும் வெளி சுத்தம் என அனைத்தையும் சாட்டையடியாகத் தந்துவிட்டீர்கள். பெரும்பாலான பணிகளை மேற்கொள்ளும் கம்ப்யூட்டரை நாம் கவனிப்பதே இல்லை. என்றைக்காவது அதன் இயக்கம் நின்று போன பின்னர் தான், கவலைப்படுகிறோம். அப்போது காலம் கடந்துவிடுகிறது. நீங்கள்
தந்துள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், நிச்சயம் இது போன்ற பிரச்னைகளைத் தள்ளிப் போடலாம்.
என். சுகவனம், திருப்பூர்.
வாட்ஸ் அப் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களுக்கு எதனையேனும் தந்து கொண்டுதான் உள்ளது. இன்னும் சில கூடுதல் பயன் தரும் வசதிகளை அதனிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
பேரா. மா. இராஜராஜன், போரூர்.
மின் அஞ்சல் அனுப்புவதில் நாம் மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படைக் குறிப்புகளைத் தந்துள்ளீர்கள். இத்துடன், சில வசதிகளை நாமே அமைத்துக் கொள்வது எப்படி? என்பதனை ஜிமெயில் தளத்திற்கானதாகத் தரவும். நன்றி.
டி.ஏகாம்பரம், திருவள்ளூர்.
அமைதியான முறையில் பெண்கள் நம் அறிவியல் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர் என்பது இணைய தளப் பயன்பாட்டிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
என். வசந்தா மோகன், மதுரை.
ஸ்கைப் பிரவுசரிலேயே கிடைக்கும் வகையில் தனி ஒரு தளமாகத் தரப்பட்டால் பல பிரச்னைகள் இல்லாமல் போய்விடும். அடுத்தவரின் கம்ப்யூட்டரில் இதனை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. விரைவில் இந்த வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
கா. மதியழகி, கோவை.
வேர்டில் சொல் பயன்பாடு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் Word Frequency Counter என்னும் தளம் தரும் பயன்கள் மிக நன்றாகவும், டாகுமெண்ட் அமைப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதாகவும் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டிய உங்கள் துணை ஆசிரியருக்கு நன்றி.
எஸ். மாயவன், கும்பகோணம்.
கேள்வி பதில் பகுதியில் ஹெர்ட்ஸ் குறித்த தகவல் மிகவும் வியப்பாகவும், அதனைக் கண்டறிந்து தந்த விஞ்ஞானி மீது மதிப்பு கொள்ளும் வகையிலும் இருந்தது. இதே போல மற்ற அலகுகளுக்கும், விளக்கங்களுடன் ஒரு கட்டுரை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் சி. அருமைராஜ், மதுரை.
கம்ப்யூட்டரைப் பேணிப் பாதுகாப்பதில் நீங்கள் தந்துள்ள அனைத்தும் மிகவும் அருமை. இதில் டேட்டா பேக் அப் என்பது நான் இதுவரை எண்ணிப் பார்க்காதது. கவலையற்று சோம்பேறித்தனமாக இருந்துவிட்டேன். உங்கள் எச்சரிக்கையைப் பார்த்தவுடன் இனி ரெகுலராக டேட்டா பேக் அப் எடுத்து வைக்க முடிவு செய்து, செயல்படுத்திவிட்டேன். மிக்க நன்றி.
ஆர். சுதந்திரா, சென்னை.