அதிர்ஷ்டக்கார காகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
00:00

மரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் கீழே நிற்கிற புறாவைப் பார்த்தது.
""புறாவே அதே இடத்திலேயே நில். இதோ உன் அருகில் நான் பறந்து வருகிறேன்,'' என்றது காகம்.
""காகமே, என் அருகில் நீ பறந்து வரவேண்டாம். நான் வேறு இடத்திற்கு பறந்து செல் கிறேன்,'' என்றபடி வேறு பக்கமாகப் பறந்து சென்றது புறா.
அதனைக் கண்டு காகம் திடுக்கிட்டது. "இந்தப் புறாவானது எதனால் இப்படி பறந்து செல்கிறது. இதைப் பார்த்தால், அது நம்மோடு நட்பு வைத்து கொள்ள விரும்பவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இனிமேல் நாமும் வீணாக இந்தப் புறாவிடம் பேசி அவமானத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம்' என்று தனக்குள் முடி வெடுத்துக் கொண்டது.
ஒருநாள் புறா அரிசி ஆலையின் பக்கமாகப் பறந்து சென்றது. அரிசி ஆலையின் வெளிப் புறத்தில் தானியங்கள் தரையில் கொட்டி காய வைக்கப்பட்டிருந்தன.
அந்தத் தானியங் களைப் பாதுகாக்க வேலையாட்கள் இருவர் கையில் குச்சியுடன் காவல் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்தத் தானியங்களைச் சாப்பிட வேண்டும் என்று புறாவுக்கு ஆசை ஏற்பட்டது.
அதே நேரத்தில் காகம் ஆலையின் வெளிப்பக்க சுவர் ஓரமாக நின்றபடி, தானியங்களை தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டிருந்தது.
அதனைப் பார்த்த புறாவுக்குப் பொறாமை ஏற்பட்டது. தானியங்களை காவல் காக்க ஆட்கள் இருந்தும், இந்தக் காகமானது இங்கே அதற்கான இரையினை எடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டும் ஏன் இந்தக் காகத்தைப் போன்று இங்கேயே இரை தேடக் கூடாது. இதோ இப்போதே நாம் நமக்கான இரையினைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தபடி தானியத்தின் பக்கமாக தரையிறங்கியது.
தான் இரை தேடிக் கொண்டிருந்த இடத்தில் புறாவும் வந்து விட்டதே என்று காகம் கவலையடைந்தது.
"நாம் இரையுண்ணாமல் இருந்தாலும் பரவாயில்லை. உடனடியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்' என்று மனதுள் நினைத்தது காகம்.
உடனே அந்த ஆலையில் இருந்து வேறு பக்கமாக பறந்து சென்றது காகம். அங்கிருந்து பறப்பதைப் புறா பார்த்தது.
"இந்தக் காகம் இங்கிருந்து சென்று விட்டது. அதனால் நமக்கு எந்தக் கவலை யும் இல்லை. நாம் மகிழ்ச்சியோடு இங்கே கொட்டிக்கிடக்கிற தானியங்களை உண்ணலாம்' என்று மனதுள் நினைத்த புறா தன்னையே மறந்தபடி தானியங்களை எல்லாம் கொத்திச் சாப்பிடத் தொடங்கியது.
அழகான புறாவானது தானியங்களை எல்லாம் கொத்தி சாப்பிடுகிறதே என்று வேலையாட்கள் கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். எப்படியாவது அந்தப் புறாவினைப் பிடிக்க வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தனர்.
பெரிய கோணிப்பை ஒன்றினை கையில் எடுத்துக்கொண்டு அந்தப் புறாவை பின்தொடர்ந்தனர். தன் பின்னால் வந்து கொண்டிருக்கும் அவர்களை புறா கவனிக்கவில்லை. அது தன்னையே மறந்தபடி தீவிரமாக இரை யுண்டு கொண்டிருந்தது.
வேலையாட்கள் கோணிப்பையை அந்தப் புறாவின் மீது போட்டு அதனை அமுக்கிப் பிடித்தனர். வேலையாட்களின் கைளில் சிக்கிக்கொண்ட புறா கவலை யடைந்தது.
"ஐயோ, நாம் நின்ற இடத்தில் காகம் இல்லையென்று சந்தோஷப்பட்டோம். அந்தக் காகம் மட்டும் நின்றிருந்தால். அதனையும் இந்த வேலைக்காரர்கள் படித் திருப்பார்களே. அதிர்ஷ்ட காகம் பறந்து சென்றுவிட்டது,'' என நினைத்தது புறா.
பட்டூஸ் புறாவின் கெட்ட புத்தியே அதுக்கு வினையாகி விட்டதைப் பார்த்தீர்களா? இதற்குத்தான் எப்போதும் நல்லதையே நினைக்கணும். நல்லதையே செய்யணும் என்பது.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X