அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

மழை/குளிர் - ஜாலி/ஜாக்கிரதை!
மழைக்காலமும், குளிர்காலமும் தொடர்ந்து வரும் அற்புதமான காலமிது. மழையும், குளிரும் இயற்கையை மட்டுமல்ல, எல்லா குழந்தை கூட்டத்தையும் மயக்கும். ஆனால், எவ்வளவு ஆனந்தமோ - அதே போல ஜாக்கிரதையும் நமக்கு இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு!
*நீர் பிடிப்பு பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் முதலிய பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு இருப்பதால், இத்தகைய நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர் கள் செல்லாதவாறு கண்காணிப்பதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் செல்வதனால் ஏற்படும் அபாயத்தையும் விளக்க வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் மின் கசிவு ஏற்படாத வகையில், மின்சாதனங்களையும் மின் கம்பி களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன், மின்சாரம் சார்ந்த விழிப் புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
*மேல் நீர் தொட்டி, கழிவறை கழிவு நீர் தொட்டி ஆகியவற்றிற்கு அருகில் குழந்தை களை அனுமதித்தல் கூடாது.
*மழைக் காலங்களில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாணவர்களுக்கு அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
*மாணவர்கள் மழையில் நனையாமலும் இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படா மலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.
*மழைக்காலங்களில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால், ஏற்படும் அபாயத்தை மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

மின்சாதனங்களை பயன்படுத்துவது எப்படி?
* மின்சார கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே கம்பியின் மீது கயிறு கட்டி துணி காய வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* குளியலறையிலும், கழிப்பறையிலும், ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். பொருத்தி இருந்தால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும்.
* மின்சாதனங்களில் தீப்பிடித்தால், தீயணைப் பான்கள், உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப் பான்களை பயன்படுத்த வேண்டும். மாறாக தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க கூடவே கூடாது; உயிரே போய் விடும்.
* இடி, மின்னல் நேரத்தில் "டிவி', மிக்ஸி, கணினி, தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்.
மழைக்காலமாக இருப்பதால் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் அனைவரும் பயன்படுத்த வேண்டும்!

கருப்பு கண்ணாடி - சிவப்பு கண்கள்!
இப்போது ரவுண்டு கட்டி அடித்து கொண்டு இருப்பது "மெட்ராஸ் ஐ'.
மெட்ராஸ் ஐ என்றால், சென்னையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வருமா என்ன?
இந்த நோய்க்கான காரணம் முதன் முதலாக சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.
நோய்க்கு மூல காரணம், "அடிநோ' வைரஸ்.
என்ன செய்யலாம் சிகிச்சைக்கு....
மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். கண் மருத்துவரை சந்தித்தால் கண்களுக்கு இதமளிக்கும் மருந்தை பரிந்துரைப்பார். கறுப்பு கண்ணாடி அணியலாம். அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். கண்ணை துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம்.
"டிவி', கம்ப்யூட்டர், செல் அனைத் தையும் தவிர்க்கவும். புத்தகம் படித்தலையும் தவிர்க்கவும். வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

வரும் முன் தடுக்க!
மக்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். நம் கைகளை அடிக் கடி கழுவுதல் நல்லது. கைகளால் கண்ணை துடைக்க வேண்டாம். டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.
மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் கண்ணாடி அணிவது பாதுகாப்பானதே. இது காற்று மற்றும் உடைமைகள் (கர்சிப், துண்டு, பேனா, பென்சில், எரேசர், பேப்பர்) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி.
ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக்கூடாது. கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனைப்படி போட வேண்டும்.
கண்களை கசக்க கூடாது. தும்மல், இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும். எனவே, வாயில் துணி வைத்து இருமவும். கண்களை கழுவும் முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும். மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும். எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும்.
உடலின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து 3 முதல் 5 நாட்களில் இது குணமடையும்.

எவ்வளவு எவ்வளவு நோய்கள்!
மழைக்காலங்களில் பரவுகிற காய்ச்சல்களில் முதன்மையானது, "புளூ' காய்ச்சல்.
நிமோனியா காய்ச்சல், வயிற்று போக்கு, காலரா, சீதபேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் எத்தனை எத்தனை?
கொசு நோய்கள் - மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா இதெல்லாம் கொசுவின் கொடைகள்!

சுத்தம்! சுகாதாரம்!
காலையில் பல் விளக்குதல், குளித்தல் (பள்ளியில் இருந்து வந்த பின் ஒரு குளியல் போட செய்யலாம்). ஆரோக்கிய உணவு, விளையாட்டு, ஒழுக்கம், கை-கால்களை அடிக்கடி சுத்தம் செய்தல் என நல்ல பழக்க வழக்கங்களை பயிற்றுவிக்க வேண்டும். நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்கு குடும்பத்தில் அதாவது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.
சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீரை குடித்தல். உடலையும், வீட்டையும், வீட்டு சுற்றுப்புறத்தையும் மிக சுத்தமாக வைத்திருத்தல் போன்ற எளிய ஆரம்ப நிலை சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே ஆயிரம் நோய்களை அகற்றலாம். மழையையும், குளிரையும் மகிழ்வுடன் அனுபவிக்கலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X