என்ன உறவு?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2014
00:00

அடிமை வழக்கம் இருந்த காலம் அது. ஜான் என்ற அடிமை, தன் முதலாளி மகிழுமாறு உண்மையாக நடந்துக் கொண்டான். அவன் மீது நம்பிக்கை வைத்தார் முதலாளி. என்ன செய்தாலும் அவனைக் கேட்டே செய்தார்.
ஜானை அழைத்த அவர், ""அடிமை ஒருவனை விலைக்கு வாங்க வேண்டும். நீயும் வா,'' என்றார்.
இருவரும் அடிமைச் சந்தைக்கு சென்றனர்.
அங்கே விற்பனைக்கு இருந்த அடிமைகளில் கிழவர் ஒருவரும் இருந்தார். ஜானைப் பார்த்த அந்தக் கிழவர் தலை கவிழ்ந்து கொண்டார்.
அவரைக் காட்டிய ஜான், ""எசமான்! எனக்காக இந்தக் கிழவரை வாங்குங்கள்,'' என்றான்.
அவரும் அந்தக் கிழவரை வாங்கினார்.
""ஜான்! இந்தக் கிழவருக்கு என்ன வேலை தருவது?'' என்று கேட்டார்.
""எசமான்! இவரிடம் நான் வேலை வாங்கிக் கொள்கிறேன்,'' என்றான் ஜான்.
நாட்கள் சென்றன.
""ஜான்! நீ அந்தக் கிழவரிடம் அன்பு காட்டுகிறாய். அவர் செய்ய வேண்டிய வேலைகளை நீயே செய்கிறாய். அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?''
""எந்த உறவும் இல்லை!''
""அப்படியானால் அவர் உன் நண்பனா?''
""நண்பனும் இல்லை!''
""உனக்கு அவர் உறவும் இல்லை. நண்பனும் இல்லை. அப்படியானால் அவர் யார்?'' என்று கேட்டார் அவர்.
""எசமான்! அவர் என் எதிரி. என்னை வஞ்சகமாக அழைத்து வந்து அடிமைச் சந்தையில் விற்றவர்,'' என்றான் ஜான்.
""எதிரியிடமா இப்படி அன்பு காட்டுகிறாய்?'' என்று வியப்புடன் கேட்டார் அவர்.
""நான் சிறுவனாக இருந்த போது ஓய்வுநாள் பள்ளியில் சேர்ந்தேன். "உன் எதிரி பசித்து இருந்தால் அவனுக்கு உணவிடு, தாகத்துடன் இருந்தால் தண்ணீர் கொடு. நீ அன்பு <உடையவன் என்பதற்கு இதுதான் அடையாளம். தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வதே நல்ல பண்பு' என்று பாடம் நடத்தினார் ஆசிரியர்.
""அவர் சொன்ன அறிவுரை என் உள்ளத்தில் நன்றாகப் பதிந்தது. அதைத்தான் பின்பற்றி வருகிறேன்,'' என்றான் ஜான்.
உள்ளம் நெகிழ்ந்த அவர் அவனை அணைத்துக் கொண்டார்.
""உன்னைப் போன்ற பண்பாளனை நான் பார்த்தது இல்லை. இனி நீ என் அடிமை இல்லை. என் நண்பன். இந்தக் கிழவரு க்கும் விடுதலை தருகிறேன்,'' என்றார்.
ஜான் முதலாளிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான்.
***

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aswini - chennai,இந்தியா
10-டிச-201412:54:29 IST Report Abuse
Aswini நல்ல ஸ்டோரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X