கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 அக்
2010
00:00

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் இணைய தளத்திலிருந்து கிடைக்கும் டாகுமெண்ட் பைலை, பிரவுசரில் இருந்த படியே திறந்தால், அவற்றை சேவ் செய்திட முடியவில்லை. ஒரு சின்ன பாப் அப்பில், ""இந்த பைல் ரீட் ஒன்லி; எனவே சேவ் செய்திட முடியாது?'' என்று பிழைச் செய்தி கிடைக்கிறது. எப்படி சேவ் செய்திடலாம். –கா. சிவக்குமார், பழநி
பதில்: பிரவுசர் மூலம் ஒரு பைலை பிரவுசரில் திறக்கும்போது, அந்த பைல் டெம்பரரி (Temporary) போல்டரில் இறக்கப்பட்டு ரீட் ஒன்லி  (Read Only)  பைலாகத்தான் திறக்கப்படும். எனவே பைலை வேறு ஒரு போல்டருக்கு மாற்றி  Save   பட்டன் அழுத்தி சேவ் செய்திடலாம். அல்லது,வேறு ஒரு போல்டரில் சேவ் செய்து பின்னர் திறந்து படிக்கலாம். தேவை இல்லை என்றால் அழித்துவிடலாம்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்துவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger  என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது.  இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும்  என்று வழி காட்டவும். –எம். கோவிந்தராஜ், திண்டுக்கல்
பதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை  எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது. எனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools  கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options  தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced  டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse   செக்ஷன் செல்லவும்.  Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others)  என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வாழ்த்துக் கவிதையினை அழகாக அமைத்துள்ளேன். இதன் பின்புலத்தில், நானும் என் தோழியும் உள்ள படம், கிரே கலரில் பேக் கிரவுண்ட் போல, ரூபாய் நோட்டில் உள்ளது போல, ஒரு வாட்டர்மார்க்காக அமைய வேண்டும். இதனை எப்படி உருவாக்குவது? –பெயர்  வேண்டாம் என்ற விண்ணப்பத்துடன் திருப்பூர் வாசகர்
பதில்: பரவாயில்லை, கண்டிஷனுடன் பதில் கேட்கிறீர்கள். இது பலருக்கும் உதவும் என்பதால் சற்று விளக்கமாகவே தருகிறேன். முதலில் குறிப்பிட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இணைக்க விரும்பும் இமேஜ் அல்லது போட்டோவினைத் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் செய்திடவும். இப்போது பிக்சர் டூல் பார் திறக்கப்படும். இல்லை என்றால், படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில், பிக்சர் டூல்பார் என்பதில் கிளிக் செய்திடவும். திரையில் தனியே பிக்சர் டூல்பார் கிடைக்கும். இந்த டூல்பாரில் கலர் என்பதில் கிளிக் செய்க. இப்போது தரப்படும் கீழ் விரி மெனு ஆப்ஷன்களில், வாஷ் அவுட் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் படம் வண்ணத்தில் இருந்தால், படம் கலரில் வாட்டர்மார்க் ஆக இருக்கும். அதற்குப் பதிலாக கருப்பு வெள்ளையில் இருக்க வேண்டும் என விரும்பினால், மீண்டும் பிக்சர் டூல் பார் சென்று, கலர் என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் கிரே ஸ்கேல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மறுபடியும் வாஷ் அவுட் என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த வாட்டர்மார்க்கில் ஏதேனும் உங்களுக்குப் பிடித்த சொற்களையும் அமைக்க வேண்டும் என்றால், படத்தின் மீது வலது கிளிக் செய்து, கிடைக்கும் விருப்பப் பட்டியலில், வேர்ட் ராப்பிங் என்பதனைத் தேர்ந்தெடுத்து டெக்ஸ்ட் அமைக்கவும்.  இப்போது படம் உங்கள் டாகுமென்ட்டில் நீங்கள் கேட்டபடி வாட்டர் மார்க்காக அமையும்.  உங்கள் டாகுமெண்ட் பல பக்கங்களில் அமைந்து, அவை ஒவ்வொன்றிலும் இந்தப் படம் வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் அனைத்தையும், ஹெடர் அல்லது புட்டரில் அமைக்க வேண்டும்.

கேள்வி: போட்டோ ஷாப் புரோகிராம் மூலம், ஒரு சிறிய டெக்ஸ்ட் அடிப்படையிலான டிசைன் ஒன்று தயார் செய்து என் நண்பருக்கு அனுப்பினேன். அவர் அதில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். எதனால் இப்படி ஏற்படுகிறது? –ஆ. சியாமளா, மதுரை
பதில்: நீங்கள் பயன்படுத்திய பாண்ட் பைல் அவருடைய கம்ப்யூட்டரில் பாண்ட்ஸ் போல்டரில் இல்லாமல் இருக்கலாம். எனவே நீங்கள் பயன்படுத்திய எழுத்து வகைகளின் பட்டியலை எடுத்து, அந்த எழுத்து வகை கோப்புகள் அனைத்தும் அவரின் பாண்ட்ஸ் போல்டரில் உள்ளனவா என்று பார்க்கச் சொல்லுங்கள். நீங்கள் ஒரே ஒரு பாண்ட் வகையிலேயே முழு பைலும்  தயாரித்திருந்தால், அந்த பாண்ட் பைலை அவருக்கு அனுப்பி, அவரின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர், போட்டோ ஷாப் பைலைப் பார்க்கச் சொல்லுங்கள். அல்லது அந்த பாண்ட்பைல்கள், இணையத்தில் கிடைக்கும். அவற்றை அவர் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம்.

கேள்வி: நான் பென்டியம் 2 சிப் கொண்ட கம்ப்யூட்டர் வைத்திருக்கிறேன். இதற்குப் பதிலாக இன்டெல் கோர் ஐ7 சிப்பினை இணைக்க விரும்புகிறேன். மதர்போர்டினை மாற்ற வேண்டுமா? இப்போதைய மதர்போர்டையே பயன்படுத்தலாமா? –கி. சுஜாதா, திண்டுக்கல்
பதில்: ஐ7 சிப்பினை சப்போர்ட் செய்திடும் புதிய மதர்போர்டுக்கு மாற வேண்டும். பழைய மதர்போர்டு நீங்கள் குறிப்பிடும் சிப்பிற்கு உதவாது. ஒவ்வொன்றாக புதியதாக வாங்கி மாற்றுவதற்குப் பதிலாக, இப்போதைய கம்ப்யூட்டரை உபரி கம்ப்யூட்டராக வைத்துக் கொண்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன். நீங்கள் கம்ப்யூட்டரை வைத்து டி.டி.பி. வேலை செய்வதாக எழுதி உள்ளீர்கள். அதுவே சிறந்த மாற்று வழி.

கேள்வி: ஷட் டவுண் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்தால், ஸ்டேண்ட் பை மோட், ஹைபர்னேட் மோடுக்குச் செல்லவில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது? –கா.  அழகுராஜ், நத்தம் மேடு
பதில்: ஹைபர்னேஷன் செயல்பாட்டை இயக்க, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அதில் பவர் ஆப்ஷன்ஸ் போல்டரைத் திறக்கவும். இதில் கிடைக்கும் ஹைபர்னேட் டேப்பில், எனேபில் ஹைபர்னேஷன் என்னும் வரிக்கு எதிரே டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி உங்களுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்கும்.

கேள்வி: என் ஜிமெயில் காண்டாக்ட் முகவரிகளை பேக் அப் எடுத்துவைத்துப் பயன்படுத்த முடியுமா? பேக் அப் எடுப்பது எப்படி என டிப்ஸ் தரவும். –ஆ. மல்லிகா, அம்மா பேட்டை, வடக்கனேந்தல்
பதில்: முதலில் உங்கள் அக்கவுண்ட்டில் சென்று, பக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், அருகே தனியே தரப்பட்டிருக்கும் பிரிவில் காண்டாக்ட்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.  இப்போது உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். அனைத்து காண்டாக்ட்களுக்கும் பேக் அப் தேவையா? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கா என்று, நீங்கள் விரும்பியபடி ஆப்ஷன் தேர்வு செய்திடவும். இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து சேவ் டு டிஸ்க் என்பதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் ட்ரைவ் மற்றும் போல்டரைத் தேர்வு செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட, காண்டாக்ட்ஸ் அனைத்தும் தேர்ந்தெடுத்தபடி பைலாக சேவ் ஆகும். இது சி.எஸ்.வி. பார்மட்டில் இருக்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி, அனைத்து சோதனைகளும் முடிந்து, மானிட்டரில் டெஸ்க்டாப் காட்சி வந்தவுடன், மறுபடியும் ரீஸ்டார்ட் மோடுக்குச் செல்கிறது. அப்போது ஒரு எர்ரர் மெசேஜ் வேகமாக வந்து செல்கிறது. அதில் டி.எல்.எல். பைல் ஒன்று மிஸ்ஸிங் என்று வருகிறது. சேப் மோடில் சென்று இயக்கினாலும் இதே கதைதான். ரீ பார்மட் செய்திட வேண்டுமா?  –டி.மீனாட்சி நாயகம், கூடலூர்
பதில்: உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான முக்கியமான டி.எல்.எல். பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். எர்ரர் செய்தியில் எந்த டி.எல்.எல். பைல்கள் என்று காட்டப்பட்டால், அவற்றை சிஸ்டம் சிடிக்களில் இருந்து காப்பி செய்து, பின்னர் இயக்கிப் பார்க்கலாம். அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், உடன் ரெகவரி சிடி ஒன்று கொடுத்திருப்பார்கள். அதன் மூலம் சிஸ்டத்தினை இயக்கிப் பின்னர், ரெகவர் செய்திடுமாறு கட்டளை கொடுத்தால், பிழையான பைல்களின் பதிலுக்கான பைல்கள் தானாக காப்பி ஆகும். அல்லது அனைத்து சிஸ்டம் பைல்களையும் காப்பி செய்திடலாம். இவை எதுவும் பலனளிக்காத பட்சத்தில், ஹார்ட் டிஸ்க்கின் சி ட்ரைவினை ரீபார்மட் செய்திடலாம். விண்டோஸ் சிஸ்டத்தினை மீண்டும் பதித்திடலாம். அருகில் உள்ள டெக்னீஷியன் ஒருவரின் உதவியை நாடவும். 

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajkumar - leicester,யுனைடெட் கிங்டம்
20-அக்-201016:11:39 IST Report Abuse
rajkumar can you please please provide a facility to access previous weeks magazines as they will be very useful
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X