ஒயிட் ஸ்பேஸ் குறித்த குறிப்பு புதியனவாகவும், இதுவரை எந்த நூலிலும் படிக்காததாகவும் இருந்தது. மிக்க நன்றி.
எஸ். பாலச்சந்திரன், பெருங்களத்தூர்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கட்டுரை மிக அருமை. ஒவ்வொரு சிஸ்டம் வெளியீடும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெரிய பாடமாக அமைந்திருக்கிறது. உழைப்பின் அருமை அடுத்தடுத்த வெளியீடுகளில் காட்டப்பட்டிருக்கிறது. அதனால் தான், இந்த உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது. வரும் விண்டோஸ் சிஸ்டங்களில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.
-என்.ஜே. கோகிலா, திருப்பூர்.
கடந்த 25 ஆண்டுகாலம், டாஸ் சிஸ்டம் முதல் தொடங்கி, கம்ப்யூட்டரில் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு புதிய அனுபவத்தினைத் தந்தது. அதனை உங்கள் கட்டுரை மீண்டும் எண்ணிப் பார்க்க வைத்துவிட்டது. உணர்ச்சி பூர்வமான அனுபவங்களை விண்டோஸ் தந்தது என்றால், அது மிகையில்லை. கட்டுரை எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுதல்கள்.
ஆர். கமலக் கண்ணன், சேலம்.
ஹார்ட் ட்ரைவின் செயல்பாடு குறித்த கட்டுரை என்னுடைய பல சந்தேகங்களைப் போக்கியது. இதெல்லாம் கேட்கலாமா? இப்படி இருக்குமோ? என்று நாங்கள் எண்ணுவதை எல்லாம், மிகப் பொறுமையாக விளக்கம் அளித்து, தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். கம்ப்யூட்டர் மலரின் இந்த தொடர் பணி பாராட்டுக் குரியது. நன்றி.
எஸ். ராஜசிங்கம். மதுரை.
''நன்றி சொல் நண்பா” கட்டுரைத் தகவலைப் படித்த பின்னரே, நானும் ஓரிரு நண்பர்களுக்கு, நன்றி விடியோ தயார் செய்து என் பக்கத்தில் பதிந்தேன். என் நண்பர்களும் எனக்காக தயாரித்து தந்தார்கள். நட்பு வட்டம் வலிமையுடன் தொடர
இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமக்கு உதவி புரிகின்றன.
எஸ். ஆசைத்தம்பி, கம்பம்.
வேர்ட் டாகுமெண்ட்டில் பாரா இன்டென்ட் அமைப்பது குறித்த பதில் சுருக்கமாகவும், நன்கு தெளிவு படுத்துவதாகவும் உள்ளது.
கா. திரவியம், காரைக்கால்.
பைல்களின் துணைப் பெயர்களும் காட்டப்படலாம் என்ற தகவல் இன்னும் பலர் அறியவில்லை. தங்களுடைய வழி நடத்தல் சிறப்பான ஒன்று. கேள்வி பதில் பகுதியில் தான் நாங்கள் நிறைய பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால், நான் அனுப்பிய பல கேள்விகள் இன்னும் வரவில்லை. சில நல்ல பதில்களைத் தந்துள்ளன. அனைத்திற்கும் நன்றி.
எம். கார்த்திக் ராஜா, சென்னை.
விண்டோஸ் வளர்ந்த விதம் குறித்த தகவல்கள் அடங்கிய கட்டுரை மிகச் சிறப்பாக பயனுள்ளதாக உள்ளது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இயங்கிய தன்மையைக் காண ஆவலைத் தூண்டுவதாகவும் உள்ளது. எங்கேனும் கிடைக்குமா?
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரையும் இயக்கிப் பார்க்க ஆசை. இணையத்தில் இதற்கான வசதி உண்டா?
என். மஞ்சுளா சிரஞ்சீவி, விருதுநகர்.