மல்லன் மாறப்பன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

சென்றவாரம்: வெங்கண்ணா அரசகுருவின் உதவியுடன், அச்சுதராயர் போர்களத்தில் இறந்துவிட்டார் என லட்சுமி தேவியை நம்ப செய்தான். லட்சுமி வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள். இருவருக்கும் திருமணம் என்பதை கேள்விப்பட்ட மாறப்பன், சத்திரத்துக்காரரிடம் அதைப்பற்றி விசாரித்தான். இனி-

அச்சுதராயர் வெங்கண்ணாவை எப்படி வெறுத்துப் பேசினார் என்பதை அறிந்தவன் அவன். அதே மாதிரி தான் இளவரசியும் அவனை வெறுத்திருப் பாள். ஆகவே, இது கட்டாயக் கல்யாணம் தான் என்ற முடிவுக்கு வந்தான் மாறப்பன்.
பொழுது விடிந்தது. மங்கல வாத்தியங் கள் முழங்கின. இளவரசியின் திருமணக் கோலத்தைக் காண, கலந்துக்கொள்ள மக்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். இரவே வீதிகளை அலங் கரித்திருந்தனர். இளவரசியைக் காணச் சாரிசாரியாக மக்கள் கூட்டம் அரண்மனையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மாறப்பனும், அச்சுதராயர் அளித்திருந்த பொருளை ஒரு பேழைக்குள் வைத்துக் கொண்டு, இளவரசியைக் காணக் கிளம்பினான்.
அரண்மனையின் அலங்காரமும், ஆனந்தமும் கோலாகலமும் அவனுக்குப் பிரமிப்பூட்டின. சிங்காதனத்தில் அமர்ந் திருந்த லஷ்மி தேவியைத் தூரத்திலிருந்த படியே பார்த்தான். புது மணப்பெண்ணுக் குரிய மகிழ்ச்சிப் பூச்சை அந்த முகத்தில் அவன் காணவில்லை. கூட்டம் மெல்ல, மெல்ல இளவரசியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. மாறப்பனும் முன்னேறிக் கொண்டிருந்தான்.
அவன் முறை வந்ததும், இளவரசியை அணுகிய மாறப்பன், தன் பேழையைத் திறந்து அவளிடம் காட்டினான். அதனுள் இருந்த பொருளைப் பார்த்து இளவரசி திடுக்கிட்டாள். அவளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
விரிந்த விழிகளால் தன் முன் நிற்கும் மாறப்பனைப் பார்த்தாள்.
""இது... இந்தப் பாதி மோதிரம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று குழறினாள் இளவரசி.
""உங்கள் தந்தையார் கொடுத்தார்,'' என்று மெல்லிய குரலில் கூறினான் மாறப்பன்.
""தந்தையா?...!'' அவள் உடல் குலுங்கியது.
""அப்படியானால், என் தந்தை உயிரோடிருக்கிறாரா?'' என்று படபடத்தாள்.
""லஷ்மிதேவி, மெதுவாகப் பேசுங்கள்; பதற்றப்படாதீர்கள். பிறர் கவனம் உங்கள் மீது பதியாதபடி அமைதியாக இருங்கள். வெங்கண்ணாவின் பிடியிலிருந்து உங்களை காப்பாற்றவே நான் வந்திருக்கிறேன்...'' என்று ரகசியக் குரலில் பேசினான் மாறப்பன்.
இமையாத விழி களில் கண்ணீர் திரள நோக்கும் இளவரசி யிடம் தொடர்ந்தான் மாறப்பன்.
""ஏதும் நடவாதது போல மெல்ல எழுந்து பின்னாலுள்ள திரைச் சீலையின் பக்கம் போங்கள்,'' என்றான்.
மந்திரத்தால் கட்டுண்டவள் போல லஷ்மிதேவி மாறப்பன் கூறியபடி, மெல்லத் தன் இருக்கையிலிருந்து எழுந்து திரையை ஒதுக்கிக் கொண்டு ஒதுங்கினாள்.
சட்டென்று மாறப்பனும் இளவரசியைப் பின் தொடர்ந்தான். காத்திருந்த கூட்டம் இளவரசி எழுந்து சென்றதன் காரணம் புரியாமல் அமைதி காத்தனர்.
""பாவம் சிரமமாக இருக்காதா? எத்தனை மக்களுக்குத் தரிசனம் தந்தபடி உட்கார்ந்திருப்பார். சிரமபரிகாரம் செய்து கொள்ளப் போயிருப்பார்!'' என்று சமாதானம் செய்து கொண்டனர்.
ஆனால், பின்னாலிருந்தவர்கள் முன்னேறும்படி முணுமுணுக்கவே சலசலப்பு அதிகமாயிற்று. காவலர்களின் கவனம் இளவரசி இருந்த பக்கம் திரும்பியது. அங்கு இளவரசியைக் காணாது திடுக்கிட்டவர்கள், வெங்கண்ணாவிடம் தெரிவிக்க ஓடினர். இதற்குள்-
தந்தையின் முத்திரை மோதிரத்தின் பாதியை நீட்டிய மாறப்பனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அந்தப்புரத்துக்கு ஓடினாள் இளவரசி.
""என் தந்தையை எங்கு பார்த்தீர்கள்? எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்?'' என்று வினா எழுப்பிக் கொண்டே நடந்தாள்.
""எல்லாம் விவரமாகக் கூறுகிறேன். ஆனால், இந்த இடமும், காலமும் அதற்கு ஏற்றதல்ல. நாம் இங்கிருந்து சீக்கிரம் வெளியேறியாக வேண்டும். உங்களைக் காணாது வெங்கண்ணா தன் வீரர்களை விரட்டிக் கொண்டிருப்பான் உங்களைத் தேடுவதற்காக. என் குதிரை அரண்மனை வாசலில் உள்ளது. தாமதிக்காமல் அரண்மனை வாசலை அடைவோம். அதன் பிறகு உங்கள் தந்தையாரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கூறுகிறேன்,'' என்றான் மாறப்பன்.
அரண்மனையிலிருந்து வெளியேற அவனுக்கு வழி தெரியாதே! கேள்வி கேட்பதை விட்டுச் செயல்படலானாள் இளவரசி.
""என் பின்னால் வாருங்கள்...'' என்று கூறியபடி, பல கூடங் களையும், அறைகளையும் வேகமாகக் கடந்து விரைவில் அரண்மனை யின் ஆசார வாசலை அடைந்தாள்.
மாறப்பன், இளவரசியைத் தன் அரபுக் குதிரை மீதேற்றித் தானும் தாவி ஏறினான்.
அதே சமயம்...
அரண்மனையின் ஆஸ்தான மண்டபத்தில் ஒரே ரகளை. வெங்கண்ணா வெடித்துக் கொண்டிருந்ததுடன், வீரர்களை நோக்கி வசைபாடியபடி விரட்டிக் கொண்டிருந்தான்.
"யாரோ ஒரு இளைஞன் அளித்த காணிக்கையைக் கண்டு இளவரசி முகம் வெளுத்து உள்ளே எழுந்து போனதாகவும்' அந்த இளைஞனும் பின் தொடர்ந்ததாகவும் கூறினர் கூட்டத்தினர்.
அரண்மனை நுழைவாயிலிலிருந்து ஒரு வீரன் ஓடி வந்தான்.
இளவரசியை யாரோ ஒரு அந்நியன் குதிரையில் ஏற்றிக் கொண்டு ஓட முயற்சித்த தாகவும், வழி மறித்த வீரர்களை அந்த வாலிபன் தாக்கி வீழ்த்தி விட்டதாகவும் கூறினான்.
""ஓடுங்கள்! பிடியுங்கள் அவனை! தடுத்து நிறுத்துங்கள்,'' என்று இங்கும், அங்கும் பாய்ந்தபடி கத்தினான் வெங்கண்ணா.
தளபதிகளும் வீரர்களும் திசைக்கு ஒருவராக ஓடினர்.
மாறப்பன் தன் குதிரையைத் தட்டி விட்ட படியே லஷ்மிதேவியிடம் கூறினான்.
""இளவரசி! என் பெயர் மாறப்பன். உங்கள் தந்தையார் உங்களிடம் இதைக் கொடுக்கும் படி கூறி மேலும் சில கட்டளையிட்டார்!'' என்றான்.
""இதை எதிர்பார்த்து நான் எத்தனை நாளாகக் காத்திருந்தேன் தெரியுமா? தந்தையின் நிலை என்ன?'' என்று கேட்டாள் தழு தழுத்த குரலில் லஷ்மிதேவி.
வெங்கண்ணாவினால் விரட்டப்பட்ட வீரர்கள் விரைந்து வருவதைக் கண்ட மாறப்பன்... ""முதலில் நம் நிலையைக் கவனிப்போம் இளவரசி. பத்திரமான இடத் துக்குப் போனதும் எல்லாம் விவரமாகக் கூறு கிறேன்,'' என்று குதிரையின் வயிற்றில் தன் குதிகாலினால் உதைத்தான். ரோசப்பட்ட ஜாதிக் குதிரை, குளம்புகள் தரையில் பாவாமல் மின்னலெனப் பறந்தது.
வெங்கண்ணாவின் அடியாட்களால் மாறப்பனின் குதிரையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால், அற்புதப் புரவியின் அதிசய ஆற்றலுக்குக் குறுக்கே வந்து தடை போட்டு நிறுத்தியது ஒரு காட்டாறு. இருகரையையும் தொட்டுக் கொண்டு வெறி பிடித்தாற்போல வெள்ளம் சுழியிட்டுக் கொண்டு ஓடியது. அந்த ஆற்றில் "ஹோ' என்ற இறைச்சலுடன் பொங்கிப் பாயும் ஆற்று வெள்ளத்தைக் கண்டு இளவரசி கலவரப்பட்டுப் போனாள்.
""துரத்தி வரும் வெங்கண்ணாவின் வீரர்கள் வந்து விடுவார்களே! இது ஆழமான ஆறு. வெள்ளம் வேறு. என்ன செய்வது?'' என்று தவித்தாள் லஷ்மி.
""கவலைப்படாதீர்கள் இளவரசி... இது உயர் ஜாதிக்குதிரை. வெள்ள நீருக்கு இது பயப்பட்டு நிற்கவில்லை. எப்படிக் கடக்கலாம் என்று திட்டமிடுகிறது. நீங்கள் இதன் பிடரியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இது வெள்ளத்தை நீந்திக் கடக்கும்போது நழுவி விடாதீர்கள்... இதோ பாருங்கள், இது வெள்ள நீரில் பாயப் போகிறது,'' என்று கூறியவாறு வாஞ்சை யோடு அதன் கழுத்தைத் தடவிக் கொடுத் தான். அடுத்த வினாடி, அந்த அரபுக் குதிரை குபீரென்று ஆற்று வெள்ளத்தில் குதித்தது. நீரைக் கிழித்துக் கொண்டு எதிர்க்கரையை நோக்கி நீந்தியது.
நதிக்கரைக்கு வந்த வெங்கண்ணாவின் வீரர்களில் ஒருவன், குதிரை ஆற்றில் நீந்திச் செல்வதைக் கண்டு, ""இதென்ன மந்திரக் குதிரையா? எவ்வளவு வேகமாக ஓடியது. இப்போது இந்தப் பயங்கர வெள்ளத்திலும் அநாயாசமாக நீந்திப் போகிறதே! நாம் ஆற்றில் இறங்கினால், நம் குதிரைகள் ஆற்றோடு போய் விடும். நம்மையும் இழுத்துக் கொண்டு!'' என்றான்.
""ஆற்றில் இறங்கும் முட்டாள் தனத்தை நாம் செய்ய வேண்டாம். சற்றுத் தொலைவில் ஒரு பாலம் இருக்கிறது. அதன் மூலம் மறு கரையை அடைவோம். அந்த மாயக் குதிரை வெள்ளத்தைச் சமாளித்துக் கரையேறுமானால், அவர்களை நாம் அங்கு வரவேற்போம். வாருங்கள்,'' என்று பாலத்தை நோக்கி விரைந்தனர் வீரர்கள்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X