கறுப்பு இளவரசி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னால் ஹங்கேரி நாட்டில் ஓர் அரசர் இருந்தார். அவருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக ஒரே ஒரு மகன் இருந் தான். இளவரசன் ரொம்ப அழகு. தன் மகனைப் பற்றி அரசருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி; மறு பக்கம் துக்கம். துக்கம் ஏன் தெரியுமா?
இளவரசன் பிறந்தபோது ஒரு கெட்ட தேவதை குழந்தைக்கு ஒரு சாபம் கொடுத்து விட்டது. இளவரசன் தன் கால்களைத் தரையில் வைத்தால் உடனே அவன் அத்தேவதையின் ஆளுகைக் குட்பட்ட அடிமையாகிவிட வேண்டும். இதுவே அந்தப் பொல்லாத தேவதை கொடுத்திருந்த சாபம்.
இளவரசன் வளர்ந்து பெரியவனானான். நல்ல திடகாத்திரமான சரீரம். கம்பீரமான உருவம். ஆனால், அவன் தன் வயதுக்கு இணையான வர்களுடன் சேர்ந்து எங்கும் விளையாடப் போவதில்லை. சின்னக் குழந்தையாக இருந்தபோது அவன் பாதம் பூமியில் படாமலிருக்க வேலைக்காரர்கள் தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர். நடக்கும் வயதானதும் அவனுக்காக, ஒரு நாற்காலி செய்தார் அரசர். அதற்கு நான்கு சக்கரம் உண்டு. அதில் உட்கார்ந்தபடி அரண்மனை முழுதும் இளவரசன் தானே எங்கு வேண்டு மானாலும் போய் வருவான். ஆனால், கால் களை மட்டும் தரையில் வைக்க மாட்டான். தப்பித் தவறி அவன் கால்களைக் கீழே ஊன்றிவிடப் போகிறானோ என்று எப்போதும் அவன் அருகே காவலாளிகள் இருந்தனர்.
வளரும் இளவரசனுக்கு இது எத்தனை பெரிய தொல்லை? ஆனால், இளவரசன் இத்தனையையும் இன்முகத்துடன் சகித்துக் கொண்டான். இந்தப் பொறுமை எல்லாரை யும் கவர்ந்தது.
இளவரசன் வாலிப வயதடைந்ததும் அரசர் அவனுக்கு ஓர் அழகான கம்பீரமான வெள்ளைக் குதிரையைப் பரிசளித்தார். அவனைப் போலவே அந்தக் குதிரையும், ரொம்ப அழகானது. இளவரசன் குதிரை மீதேறிக் காடு, மலை, நாடு நகரமெல்லாம் சுற்றினான். ஆனால், மறந்து போயும் கூடக் காலை மட்டும் தரையில் வைக்கவில்லை. எப்போதும் குதிரை மீதே அவனைப் பார்ப் பார்கள் எல்லாரும். ஆகவே, அவனைச் செல்லமாகக் குதிரை இளவரசன் என்று கூப்பிடலாயினர். நாளாக ஆக அரசரும் கெட்ட தேவதையின் சாபத்தை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கலானார்.
ஒருநாள் இளவரசன் தன் சகாக்களுடன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான் குதிரை மீதுதான். அது அடர்ந்த காடு. ஓர் ஒற்றை யடிப் பாதை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றது. அந்த ஏரியைச் சூழ்ந்து நெடுந்துயர்ந்த மரங்கள் இருந்தன. அதன் கிளைகள் வளைந்து, கவிழ்ந்து ஏரியில் ஒருவித இருளை உண்டாக்கிக் கொண்டி ருந்தன. ஏரியின் நடுவிலே வெள்ளை வெளேர் என்று பால் போலப் பல மாடிகளைக் கொண்டதாகக் காணப்பட்டது ஒரு மாளிகை. இளவரசனும், நண்பர்களும் மாளிகையின் அழகில் சொக்கிப் போயினர். ஏரியைக் கடந்து அந்த மாளிகைக்குச் செல்ல நினைத்தனர். அப்போதுதான் அந்த துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்தது.
குதிரைகளின் குளம்பொலி கேட்ட முயல் ஒன்று பாதையின் பொந்திலிருந்து பயந்து வெளிப்பட்டு இளவரசனின் குதிரை முன்னே குறுக்காகப் பாய்ந்து ஓடியது. திடீரென்று குறுக்கே தாவி ஓடிய முயலைக் கண்டு குதிரை மிரண்டு தன் மீதிருந்த இளவரசனைக் கீழே தள்ளிவிட்டு ஓட்டமெடுத்தது. இளவரசன் கீழே விழுந்தால் என்ன ஆகும்? அவன் கால் பூமியில் படத்தானே செய்யும்? பட்டது. அடுத்த விநாடி பனிப் படலம் போல் ஒரு மேகம் வந்து இளவரசனை மூடிக் கொண்டது. இளவரசனின் தோழர்கள், பீதி யுடனும் வேதனையோடும் பார்த்துக் கொண்டு சிலையாகி நின்றனர். சற்றைக் கெல்லாம் பனிப் படலம் மறைந்தது. ஆனால், அங்கு இளவரசனைக் காணவில்லை.
நடந்ததை அறிந்த அரசன் கெட்ட தேவதையின் சாபம் பலித்து விட்டதை எண்ணி வேதனையடைந்தார். தம் ஒரே மகனை இழந்த அவருக்கு எதிலுமே வெறுப்புண்டாயிற்று. ஆனாலும் நல்லவர்களின் ஆசிகள் தம் மகனை எப்படியும் காப்பாற்றும் என்ற ஒரு சிறு நம்பிக்கை மட்டும் அவருக்கு இருந்தது.
பனிப் படலத்தினால் கவரப்பட்ட இளவரசனின் நிலை என்ன? தன்னை வெண் புகை சூழ்ந்து கொண்டதும் அவனுக்கு நினைவு தப்பிவிட்டது. மறுபடி யும் அவன் கண்விழித்த போது தான் ஒரு புதிய சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தான். அவனது இதயத் துடிப்பையே கேட்குமளவுக்கு அத்தனை அமைதியாக இருந்தது அந்த இடம். எழுந்து சுற்று முற்றும் பார்த்தான். அந்த ஏரியில் கண்ட மாளிகையில் தான் இருப்பதை உணர்ந்தான். ஒற்றையடிப் பாதையிலிருந்து மாளிகையைப் பார்த்த தற்கும் இப்போது மாளிகையிலிருந்து ஏரி யையும், அதைச் சூழ்ந்துள்ள கானகத்தையும் காண்பதற்கு தான் எத்தனை வித்தியாசம்?
வட்ட வடிவமாக இருந்தது ஏரி. அதைச் சூழ்ந்து நின்ற மலைகளும், காடுகளும் இருள் மண்டிக் கிடந்தன. எங்கும் அசைவே இல்லை. ஓசையே கிடையாது. ஒரு பறவையைக் கூடக் காணோம். ஏரியைக் கடக்கவோ, கடந்து அதைச் சூழ்ந்துள்ள மலை மீது ஏறவோ முடியாது. அந்த வெள்ளை மாளிகையி லிருந்து ஏரிக்கரைக்குப் போகப் புகைப்படல மாக ஒரு பாலம் இருந்தது.
"அது தேவதையின் மாய சக்தியால் ஆக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் மீது நடக்கச் சாதாரண மனிதர்களால் முடியுமோ? அப்பா அடிக்கடி கூறிய கெட்ட தேவதை வசிக்கும் மாளிகை இதுதானா?' என்று இப்படியெல்லாம் இளவரசன் எண்ணமிட்டபடி சிந்தனையில் ஆழ்ந் திருக்கும் போது அவன் முன்னால் அந்தப் பொல்லாத தேவதை தோன்றியது.
""இந்தச் சந்தர்ப்பத்துக்காகத்தான் நான் இத்தனை வருடங்களாகக் காத்திருந்தேன்,'' என்றது தேவதை.
""இனி நீ என்னுடைய அடிமை. என் ஆதிக்கத்துக்குட்பட்டவன். நான் சொல்வதை எல்லாம் நீ கேட்கவேண்டும். மீறினால் என்னுடைய மிகக் கடுமையான தண்டனையை ஏற்பாய். அது எப்படிப் பட்டதென்று உன்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது!''
இளவரசன் பதிலேதும் கூறவில்லை. தேவதையினுடைய முகத்தின் கொடுமை யையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனது தோள்களை மட்டும் உயர்த்திக் கைகளை விரித்துத் தன் இயலாமையை வெளிப் படுத்தினான்.
""இதோ இந்த கோடரியை வாங்கிக் கொள். இது கண்ணாடியால் ஆன கோடரி. இதனால் ஏரிக் கரையில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி அழிக்க வேண்டும். நான் ஓர் இடத்தைக் குறிப்பிடுகிறேன். அங்கிருந்து நீ வெட்ட ஆரம் பிக்கலாம். கானகத்திலே கறுப்பு நிறமுடைய ஒரு பெண்ணை நீ சந்திக்க நேரலாம். அவள் உன்னோடு பேச முற்பட்டாலும் நீ அவளோடு பேசக் கூடாது. தெரிந்ததா? இது என் எச்சரிக்கை! மறந்து விடாதே,'' என்று கூறிக் கையை உயர்த்திப் புகைப் படலத்தைச் சுட்டிக் காட்டியது தேவதை.
இளவரசன் கண்ணாடிக் கோடரியைப் பெற்றுக் கொண்டு புகை மூட்டப் பாலத்தின் மீதாக நடக்கலானான்.
என்ன ஆச்சரியம்! பார்க்கப் பஞ்சு போலிருந்தாலும் பாலம் நல்ல உறுதியானதுதான். தேவதையின் மாயா சக்தி இதுதானோ?
கானகத்தை அடைந்த இளவரசன் கண்ணாடிக் கோடரியால் ஒரு மரத்தில் ஓங்கி ஒரு வெட்டுப் போட்டான்.
கோடரி சுக்குத்தூளாக சிதறியது. திடுக் கிட்டுத் திகைத்துப் போன இளவரசன் நடுங்கிப் போய்க் காட்டுக்குள் ஓடலானான். எப்படி யாவது அந்தத் தேவதையின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன். ஆனால், அது அத்தனை சுலபமாக இல்லை. கானகத்தில் வழியே தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து களைத்துப் போனவன் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிப் போனான்.
திடீரென்று யாரோ உலுக்கி எழுப்புவது போலிருக்கவே, திடுக்கிட்டு கண் விழித்தவன் தன் முகத்துக்கு நேரே குனிந்தபடி ஒரு பெண் தன்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந் திருப்பதைக் கண்டான். அவள் முகத்திலும், உடலிலும் இளமை கொழித்தது. ஆனால், அவள் உடல் நிறம் அவள் அணிந்திருந்த உடையின் நிறம் எல்லாமே ஒரே கருங்காவி வண்ணமாக இருந்தது.
"அந்தத் தேவதை கூறிய கறுப்புப் பெண் இவள் தானோ? சஞ்சலமற்ற சப்தமற்ற மவுன மான கானகத்தின் காவலாளியோ இவள்?' என்று இப்படியெல்லாம் எண்ணமிடலானான் இளவரசன்.
அந்தக் கறுப்புப் பெண்ணின் விழிகளில் பரிவு வழிந்தது. அவள் தன் இனிமையான குரலில் பேசினாள்.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X