தலைபோன மர்மம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

ஜோசப் ஹைடன் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஓர் இசை மேதை. மேற்கத்திய இசை உலகில் இவரைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது.
சிம்பொனி இசையின் முன்னோடி என்று இவரைக் கூறலாம். உலகின் முதல் சிம்பொனி இசைக் கலைஞர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
இந்த மாபெரும் இசை மேதை, மே 31, 1809ல் தன்னுடைய 77வது வயதில் காலமானார். நாட்டின் மதிப்புமிக்க கலைஞர் என்ற முறையில் அரசின் சகல மரியாதை களுடன் உடல் கெட்டுப்போகாத அளவுக்குப் பதப்படுத்தப்பட்டு, ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் புதைக்கப்பட்டார்.
இது நடந்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப்பின் வாரிசுகள், அவரது உடலை வியன்னாவிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ள தங்கள் கிராமத்துக்குக் கொண்டு சென்று, அங்கு அவருக்கு ஒரு நினை வாலயம் ஏற்படுத்த விரும்பினர். அரசும் அனுமதியளித்தது.
புதைக்கப்பட்ட ஜோசப்பின் சவப்பெட்டியை வெளியில் எடுத்து, திறந்து பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர்.
ஜோசப்பின் தலையைக் காணவில்லை! உடல் மட்டும் இருந்தது.
விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து, குற்றவாளியைக் கண்டு பிடிக்க உத்தரவிட்டது அரசு. போலீசாரும், உளவுத் துறையினரும் பலவழிகளில் துப்புதுலக்கினர்.
ஜோசப் ஜீன் என்ற மந்திரவாதி மீது சந்தேகம் எழுந்தது. இதற்குக் காரணம், நம்மூர் மந்திரவாதிகள் போல், இவரும் மண்டையோட்டு பூஜை செய்து, இஷ்ட தேவதைகளை வரவழைத்து, வேண்டிய வரத்தைப் பெறும் "பிளாக் மேஜிக்' செய்பவராக இருந்ததுதான்!
இவருக்கு ஏகப்பட்ட சீடர்கள். அவர்களும் மண்டையோட்டு மந்திரம் செய்வதில் பயிற்சி எடுத்து வந்தனர்.
ஆஸ்திரியாவில் முதலில் அறிவியல் ஆராய்ச்சிக்காக மண்டை யோடுகளை விற்க, வாங்க அரசு அனுமதித்திருந்தது. அறிவியல் ஆராய்ச்சி தவிர்த்து, மந்திர வாதிகளும் தங்கள் சுயநலத்துக்காக மண்டையோடுகளை பெருமளவில் வாங்க, 1802லேயே அந்தச் சட்டத்தை ரத்து செய்து, மண்டை யோடுகளை வாங்க, விற்க தடை விதித்தது.
அரசுக் கட்டுப்பாடு இருந்ததால், மண்டையோடுகள் தாராளமாக கிடைக்காத இவர்கள், திருட்டுத்தனமாக இசை மேதையின் தலையை துண்டித்து எடுத்திருக்கலாம் என்று கருதி, ஜோசப் ஜீன் கும்பலை விசாரித்து, தீவிரமாக கண்காணித்தும் வந்தனர். எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை. வழக்கை மூடிவிட்டனர்.
சிறிது கால இடைவெளிக்குப் பிறகு<, எதேச்சையாக மருத்துவக் கல்லூரி உடல் உறுப்பு ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் இசை மேதையின் மண்டையோடு இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அவரிடம் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்றும், தண்டனை ஏதும் தருவதாக இருந்தால், தாராளமாகத் தரலாம் என்றும் கூறிவிட்டார்.
ஆராய்ச்சியாளர்களிடமிருந்து, எந்தத் தகவலும் கிடைக்காததாலும், நாள்பட்ட மண்டையோட்டை வைத்துக் கொண்டு, அது இசை மேதையின் மண்டை யோடுதானா என்று பரிசோதிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும், இந்த விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
இசை மேதையின் தலை என்னவாயிற்று என்ற உண்மை கடைசி வரை தெரியாமலே போய்விட்டது.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X