கடன் வாங்கி கட்டி வீடு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

அகிலன் என்பவன் அரிசி மண்டி ஒன்றில் வேலை செய்து வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். தன் மனைவி, குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவனுக்கு மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய். அவன் மிகவும் சிக்கனமாக செலவு செய்து எஞ்சிய பணத்தை வங்கியில் சேமித்து வந்தான். அதே வேளையில், தன் குடும்பத் திற்கு வேண்டிய நியாயமான தேவைகளை நிறைவேற்றி வைத்தான்.
அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது. சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். அதில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே அந்த லட்சியம்.
அவனுடைய மனைவியும், "சீக்கிரத்தில் சொந்தவீடு கட்டுங்கள்!' என்று அவனிடம் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தாள். இதனால் அகிலனுக்கு சொந்த வீடு கட்டுவதில் ஆர்வம் அதிகமானது. அதற்கான நாள் பார்த்துக் காத்திருந்தான்.
ஒருநாள் அவன் தன் லட்சியப்படி சொந்தவீடு கட்டத் தொடங்கினான். அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன் உறவினர்கள் யாவரையும் அழைத்திருந்தான். அனைவரும் வந்து மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.
அகிலன் தன் கையில் ரொக்கமாக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயில் வீடு கட்டினான். இன்னும் சில பணிகள் முடிக்கப் படாமல் இருந்தன. அவன் தன்னிடமிருந்த பணத்திற்கும் மேலாக மிகப்பெரிய ஆடம்பர மான வீட்டைக் கட்டினான். அவனுடைய மனைவியும், ""நம் கையில் இருக்கும் பணத்திற் குள்ளாகவே சிறிய அளவில் வீடு கட்டலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். பிறகு நாம் தான் கடன் தொல்லையில் சிக்கிக்கொண்டு விழிக்க நேரிடும்,'' என்று கூறினாள்.
அகிலன் தன் மனைவி கூறியதை சிறிதுகூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வெளியி லிருந்து பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி னான். ஒரு வழியாக மிகவும் பிரமாண்டமான வீட்டையும் கட்டி முடித்து விட்டான்.
ஒரு நல்லநாள் பார்த்து வீட்டில் பால் காய்ச்சி மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் குடியேறினர். இப்படியே ஒரு மாதம் கடந்தது. கடன் வாங்கிய பத்து லட்ச ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டிய சூழல். அகிலனின் மாத வருமானம் வட்டி கட்டக்கூட போதவில்லை. அகிலன் மிகவும் கலங்கினான்.
வெளியில் கடன் வாங்கி மிகப்பெரிய வீட்டைக் கட்டுவதை விட, கையில் இருக்கும் சொந்தப் பணத்தில் சிறிய வீடு கட்டலாம் என்று கூறிய தன் மனைவியின் பேச்சு அப்போது அவனுடைய நினைவுக்கு வந்தது. தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு சாண் என்ன? முழம் என்ன?
அகிலனுக்கு தான் ஆசையாகக் கட்டிய, ஆடம்பரமான வீட்டை விற்பதைத் தவிர கடன் அடைக்க வேறு வழியில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இடம் அதிகமாக இருக்கும்படி தான் அவசரப்பட்டு பெரிய வீட்டைக் கட்டியது தவறு என்பதை அவன் அப்போது உணர்ந்தான்.
கடன்காரர்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது.
வேறுவழியில்லாமல், வீட்டை விற்று வந்த பணத்தில் அகிலன் கடன்காரர்களுக்கு வட்டியும், முதலுமாகக் கொடுத்து விட்டு, மீண்டும் தன் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் குடியேறினான்.
அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் இப்படிதான் அவஸ்தை படவேண்டும்.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X