போதும் என்ற மனதே
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஷைலேந்திரா என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனிடம் விந்தையான வழக்கம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திப்பவருக்கு ஒரு பொற்காசு தருவான்.
சிற்றூர் ஒன்றில் இருந்த ஏழை அந்தணன் ஒருவன் இதைக் கேள்விப் பட்டான்.
அரசரிடம் பரிசு பெறும் எண்ணத்தில் தலைநகரம் வந்தான்.
"நாளை விடிகாலையில் அரசரை நான்தான் முதலில் சந்திக்க வேண்டும். எனக்கு முன் யாரும் சந்தித்துப் பொற்காசை வாங்கக் கூடாது. அதற்கு என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.
எல்லாரும் உறங்கும் நள்ளிரவு நேரத்தில் அரண்மனையை நோக்கி நடந்தான். வீதியில் யாருமே இல்லை. அவன் அரண்மனையை நெருங்கினான்.
அங்கே இரவுக் காவலுக்கு இருந்த வீரர் கள் அவனைத் திருடன் என்று நினைத்தனர்.
அவனைச் சிறையில் அடைத்தனர்.
மறுநாள் அவனை அரசவைக்கு இழுத்து வந்தனர்.
""அரசரே! திருடனைப் போல நேற்று நள்ளிரவில் இவன் அரண்மனை நோக்கி வந்தான். இவனைச் சிறையில் அடைத்தோம்,'' என்றனர் காவலர்கள்.
அவனை விசாரித்தார் அரசர்.
""அரசே! தங்களிடம் பொற்காசு பரிசு பெற வந்தேன். பொற்காசும் கிடைக்க வில்லை. சிறையிலும் துன்பப்பட்டேன்,'' என்று நடந்ததை எல்லாம் சொல்லி அழுதான் அவன்.
"ஏழை அந்தணன் ஒரு பொற்காசிற்காக இவ்வளவு துன்பப்பட்டு விட்டானே...' இவனுக்குப் பெரிதாக உதவி செய்ய நினைத்தார் அரசர்.
""அந்தணனே! உன்னைச் சிறையில் அடைத்ததற்கு வருந்துகிறேன். உனக்கு எவ்வளவு பொற்காசுகள் வேண்டும்? கேள். தருகிறேன்,'' என்றார் அரசர்.
""அரசே! எவ்வளவு பொற்காசுகள் கேட்டாலும் தருவீர்களா?'' என்று வியப்புடன் கேட்டான்.
""எவ்வளவு வேண்டுமானாலும் கேள். தருகிறேன்,'' என்றார் அரசர்.
எவ்வளவு பொற்காசுகள் கேட்பது என்று குழம்பினான் அவன்.
""அரசே! சிந்திக்க எனக்கு ஒருநாள் அவகாசம் தாருங்கள்,'' என்று வேண்டினான் அவன்.
""சரி! நாளை உன் விருப்பத்தைச் சொல்,'' என்றார் அரசர்.
அரண்மனையை விட்டு வெளியே வந்தான் அவன். எவ்வளவு பொற்காசுகள் கேட்பது என்று சிந்தித்தபடியே நடந்தான்.
"இருபது பொற்காசுகள் கேட்போமா என்று நினைத்தான். எவ்வளவு கேட்டாலும் அரசர் தருவதாகச் சொல்லி இருக்கிறாரே. எனக்கு ஏன் இந்தப் பிச்சைக்கார புத்தி. நூறு பொற்காசுகள் கேட்போம். ஆயிரம் பொற்காசுகள் கேட்போம். பத்தாயிரம் பொற்காசுகள் கேட்போம். எந்தக் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்!' என்று நினைத்தான்.
அப்போது யாரோ பேசும் குரல் கேட்டு அவன் சிந்தனை கலைந்தது.
"எங்கிருந்து குரல் வரு கிறது' என்று பார்த்தான்.
அங்கே மேடையில் துறவி ஒருவர் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
""போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. ஆசையினால் துன்பம் வருகிறது. துன்பம் தராத ஆசை எதுவும் இல்லை. ஆசையை விட்டால்தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். ஆசைப்படுவதை விடுங்கள்,'' என்றார் அவர்.
அவர் பேசியது அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.
தனக்கு நடந்ததை நினைத்தும் பார்த்தான். அவர் சொன்னது உண்மைதான். ஆசை யினால்தான் துன்பம் வருகிறது. ஒரு பொற்காசு மீது கொண்ட ஆசையால் சிறைப் பட்டேன். இருபது, நூறு, ஆயிரம், பத்தாயிரம் பொற்காசுகளிலும் நான் மகிழ்ச்சி அடைய வில்லை. மேலும் பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.
இந்தத் துன்ப நிலையில் இருந்து விடுபட நல்ல வழி காட்டினார் என்று நினைத்தான்.
மறுநாள் அரசவைக்கு வந்தான் அவன்.
அவனைப் பார்த்த அரசர், ""அந்தணனே! எவ்வளவு பொற்காசுகள் என்று முடிவு செய்து விட்டாயா? எவ்வளவு பொற்காசுகள் வேண்டும்?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! பொற்காசுகள் எதுவும் வேண்டாம்!''
""பொற்காசுகள் வேண்டாமா? ஒரு பொற்காசிற்காக அவ்வளவு துன்பப்பட்டாய். இன்று பொற்காசுகள் எதுவும் வேண்டாம் என்கிறாய். என்ன நடந்தது?'' என்று வியப்புடன் கேட்டார் அரசர்.
நடந்ததை எல்லாம் சொன்னான் அந்தணன்.
""ஒரு பொற்காசிற்கு ஆசைப்பட்டுத் துன்பப் பட்டேன். பொருள் இல்லாததால் துன்பப்படுவ தாகவும், அது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் தவறாக நினைத்தேன். அது உண்மை அல்ல... என்பதைப் புரிந்து கொண்டேன்.
""நிறைய பொற்காசுகள் கிடைத்தால் என் துன்பமும் அதிகமாகி விடும். போதும் என்ற உள்ளம் உடையவனே மகிழ்ச்சியான மனிதன். இந்த உண்மையை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பெருமிதத்துடன் புறப்பட்டான்.
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X