அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2014
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

8-800-8ட்ட சாதனை!
கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் விசேஷத்திற்காக கர்ப்பிணிகள் பயணம் செய்வதாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதத்தில் அதிக தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அக்கால கட்டத்தில்தான் கரு வளர்ச்சி அடைகிறது.
மேலும், முதல் இரண்டு மாதத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது கருச் சிதைவு ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது. தாயின் உடல் நலமும் பாதிப்பிற் குள்ளாகும். கர்ப்ப காலத்தில் பயணம் செய்யக் கூடாது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் போன்றவைகள் ஆகும். கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க நேரிடலாம் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் சாதனைக்கு வயது மட்டுமல்ல, கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012ல் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்கா வின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி யிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற் குள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில், கடந்த சில மாதங் களுக்கு முன் கலிபோர்னியா நகரில் நடை பெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று ஓடிய இவர் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இதே தூரத்தை 1:57:34 கடந்தது இவரது அதிவேக சாதனை யாக கருதப்படுகிறது. இந்த பந்தயத்தில் 35 வினாடிகள் தாமதமாக 2:32.13 நேரத்தில் அலிசியா மோண்ட்டானோ கடந்துள்ளார். 28 வயதாகும் இவர் வெற்றிக்கோட்டை கடந்ததும் கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி, கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!
இது கீரை பாகல் கறியமுது செய்முறை நேரம்.
தேவையானவை: அரைக்கீரை - 1 கட்டு, மிதி பாகல் - கால் கிலோ, புளி -சுண்டைக் காய் அளவு, தேங்காய்த் துருவல் -1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து - தாளிக்க, பெருங்காயம் - 1 சிட்டிகை, வெல்லம் - சிறு துண்டு, எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். மிதி பாகலை நறுக்கி, புளித்தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கவும். வெந்ததும் வேகவைத்த மிதி பாகலை சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். விரும்பினால், சிறிது வெல்லம் சேர்க்கலாம். இந்தக் கீரை பாகல் கறியமுது ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

நோ கோபம்!
கோபம் தீமையை விளைவிக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள். அதற்கு அறிவியல் ரீதியான உதாரணம் இது. கோபம் கொண்டால் காயம் ஆறுவது தாமதமாகும். ஏனெனில், "கார்டிசோல்' எனும் திரவம் சுரப்பது கோபப்படுவதால் கட்டுப்படுத்தப் படுகிறது. இதுதான் காயங்களை ஆற்றும் குணம் கொண்டது. அதனால் அதிகமாக கோபம் கொள்பவர்களுக்கு காயங்கள் ஆற கால தாமதமாகும். எனவே, நோ கோபம்!
என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X