வீழ்த்தியவன் வீழ்ந்தான்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 டிச
2014
00:00

காலம் மலையை மடுவாக்கும்; குளத்தைக் குன்றாக்கும். கீழே இருப்பவன் மேலே போவான்; மேலே இருப்பவன் கீழே வருவான். ஒருவனின் வெற்றி, தோல்வி, உயர்வு, தாழ்வு கால தேவனின் கரங்களில் உள்ளது. நாம் செய்யும் நற்செயல் - பாவக் கணக்கை வைத்து, கால தேவன் போடும் கணக்கை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ராவணனே மிகப் பெரிய உதாரணம்.
உடல் பலத்திலும், இசைப் பயிற்சியிலும் சிறந்து விளங்கியவன் ராவணன். இவன், சிவனிடம் பெற்ற வரத்தால், மூவுலகிலும் தன்னை வெல்வதற்கு யாரும் இல்லை என்ற ஆணவத்தில், தேவர்களை வலிய போருக்கு அழைத்து தோற்கடித்து, தனக்கு அடிமையாக்கினான். அத்துடன், போர் வெறி அடங்காமல், பூவுலகில் இருந்த அரசர்களை நோக்கி, 'அரசர்களே... என்னுடன் போருக்கு வாருங்கள் அல்லது தோற்றுப் போனோம் என்று சொல்லுங்கள்; உங்களுக்கு உயிர் பிச்சை தருகிறேன்...' என்றான் ஆணவத்துடன்!
ராவணன் பெற்ற வரத்தின் பலத்தை அறிந்த அரசர்கள், தோல்வியை ஒப்புக் கெண்டனர்.
இந்நிலையில், அயோத்தி அரசன் அனரண்யனை போருக்கு அழைத்தான் ராவணன். அவனுடைய அவமதிப்பை தாங்காத அனரண்யனும் போருக்குத் தயாரானார்.
கடும் போர் மூண்டது. அயோத்தி மன்னரின் சேனைகள் எல்லாம் கடலில் புகுந்த நதிகளைப் போல காணாமல் போயின. நூற்றுக்கணக்கான அம்புகளை ராவணன் மீது ஏவினார் அனரண்யன்; அனைத்தும் வீணாயின.
ஆனால், ராவணன் தன் கையால், அனரண்யன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிக்க, அயோத்தி மன்னர் அங்கம் தளர்ந்து, தரையில் விழுந்தார். உடனே, ராவணன், 'அயோத்தி மன்னா... என்னே உன் அறிவின்மை... என் பலம் தெரியாமல் என்னுடன் மோதத் துணிந்தாயே...' என்று ஏளனமாக பேசினான்.
கோபம் கொண்ட அனரண்யன், 'அரக்கனே... காலம் யாருக்கும் எப்போதும் சாதகமாக இருந்து விடாது. இப்போது உன் மூலம், நான் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், காலம், உன்னையும் ஒரு நாள் சாய்க்கும். என் பரம்பரையில் தசரதனுக்கு மகனாக ராமன் என்பவன் வருவான்; அவன் உன்னை அழிப்பான்...' என்று கூறி, சொர்க்கத்தை அடைந்தார்.
அவர் வாக்குப்படியே, ராவணன், ராமரால் அழிக்கப்பட்டான். பணம், பதவி, புகழ், திறமையை நல்வழியில் பயன்படுத்தினால், வாழ்வில் நிலைத்த அமைதி கிடைக்கும்; அதை வைத்து அடுத்தவர்களை வீழ்த்த நினைத்தால், காலம் நம்மை வீழ்த்தி விடும் என்பது, ராவணன் வாழ்க்கை உணர்த்தும் பாடம்!

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: ஆத்மா ஒரு நதிக்கு சமம்; புண்ணியச் செயல்களே அந்நதியில் குளிப்பதற்குரிய இடமாகும். சத்தியமே அந்நதியின் நீர்ப்பெருக்கு. ஐம்புலன் கட்டுப்பாடே அந்நதியின் கரைப்பகுதி. கருணை உணர்வே, அதன் அலைகள். அதில் குளிப்பவன், தூய்மை பெற்று புண்ணியசாலியாகிறான்; ஏனெனில், ஆத்மா புனிதமானது. ஆசைகளை துறத்தலே தலை சிறந்த புண்ணியமாகும்.
— என்.ஸ்ரீதரன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
24-டிச-201410:36:14 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar பணம், பதவி, புகழ், திறமையை நல்வழியில் பயன்படுத்தினால், வாழ்வில் நிலைத்த அமைதி கிடைக்கும். அதை வைத்து அடுத்தவர்களை வீழ்த்த நினைத்தால், காலம் நம்மை வீழ்த்தி விடும் என்ற வரிகள் அருமை. ஆனால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை வீழ்த்த தானே நினைக்கிறோம்...இதனை யாராலும் மறுக்க முடியாது முற்றும் துறந்த முனிவர்களைத்தவிர...செவ்வாயில் குடியேற நினைக்கும் இக்காலத்தில் பந்தம் பாசம் பணிவு கொஞ்சமும் யாருக்கும் கிடையாது...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
23-டிச-201416:59:13 IST Report Abuse
P. SIV GOWRI காலம் யாருக்கும் எப்போதும் சாதகமாக இருந்து விடாது. உண்மை. நாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். அருமையான கட்டுரை. நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X