வாழ்க தலைவனே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
00:00

டிச., 21 - அனுமன் ஜெயந்தி

சராசரி மனிதர்கள் கடவுளிடம் அருளையும், ஆசியையும் வேண்டி நிற்பர். ஆனால், ஆண்டவன் மேல் அன்பு கொண்டு சதா அவன் நினைப்பில் உருகித் தவிக்கும் ஆன்மிக பெரியோர், அவனிடம் எதையும் யாசிக்காமல், பக்தி பெருக்கில் வாழ்த்துவர்.
அழியும் உடலை சுமந்து கொண்டிருக்கும் நாம், நிலைத்த தன்மை கொண்ட பரம்பொருளை எப்படி வாழ்த்துவது என்ற எண்ணம் ஏற்படலாம். கடவுளை நாம் எந்த வடிவில், எந்த நிலையில் காண்கிறோமோ அந்த நிலையிலேயே அவன் நம்மை ஆட்கொள்வான்.
அவ்வகையில், கடவுளின் மேல் கொண்ட அன்பின் மிகுதியால், நம் ஆன்மிக பெரியோர் பலர், அவனை, தந்தையாக, குழந்தையாக, காதலனாக பாராட்டி, புகழ்ந்து, வாழ்த்தி பாடியுள்ளனர்.
ஒருமுறை, மதுரை - கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு பெரியாழ்வார் சென்றார். அவருக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். அவரால், அங்கு கூடியிருந்த மக்களும் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர்.
உடனே, பெரியாழ்வார், 'எல்லாரும் பெருமாளின் திவ்ய ரூபத்தை பார்க்கின்றனரே... இவர்களின் பார்வையால், அவருக்கு திருஷ்டி ஏற்பட்டு விடுமே...' என்று பயந்து, 'இறைவா... நீ, பல்லாண்டு வாழ வேண்டும்...' என்ற அர்த்தத்தில், 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா...' என்று வாழ்த்தி, பாடினார்.
இதே போன்று, ராமபிரான் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத பக்தி கொண்டிருந்தார் ஆஞ்சநேயர். பொதுவாக, மனிதர்கள், கடவுளை வணங்கும் போது, 'நீ, எனக்கு இதைக் கொடு; நான், உனக்கு அதைச் செய்கிறேன்...' என்ற அளவில் தான், அவர்களுடைய பக்தி இருக்கும்; இதை, தவறு என்று சொல்ல முடியாது. இது, எதிர்பார்ப்புள்ள பக்தி.
ஆனால், அஞ்சனை மைந்தனான ஆஞ்சநேயர், முன்பின் தெரியாத ராமனை சந்தித்தார். அவரது மனைவி காணாமல் போனதை அறிந்து, அவருக்காக கடல் தாண்டிச் சென்று கண்டுபிடித்து வந்ததுடன், போரிலும் உதவினார். இவ்வளவும் செய்தவர் அவரிடம் எதையுமே கேட்கவில்லை.
உலகிலேயே ஆஞ்சநேயர் ஒருவரிடம் தான் நேர்த்திக்கடன் எதுவுமே இல்லாமல், நம் கோரிக்கைகளை வைக்கலாம். ஏனெனில், அவர், தன் பக்தனிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டார். வெற்றிலை மாலை, வெண்ணெய், வடை என்பதெல்லாம் கூட, அன்பின் காரணமாக நாம் செய்வது தான். இதனால் தான் அவர், தன் பக்தர்களின் உள்ளங்களில் சிரஞ்சீவியாய் வாழ்கிறார்.
உலகில் ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(என்றும் நிலைத்திருப்பவர்களாய்) இருக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களில், விபீஷ்ணன், தன் அண்ணன் என்றும் பாராமல் ராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும்; மகாபலி, தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும்; மார்க்கண்டேயர், இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எமனையே வென்றதாலும்; வியாசர், மகாபாரதம் எனும் அழியா காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருள் செய்ததாலும்; பரசுராமர், கொண்ட கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல் கேட்டதாலும்; துரோணரின் மகன் அஸ்வத்தாமன், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் விசுவாசத்தைக் காட்டியதாலும், சிரஞ்சீவி எனும் நிலையை அடைந்தனர்.
இந்த வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் அனுமன். இவர், தன்னலம் பாராமல், பிறருக்காக சேவை செய்ததால், சிரஞ்சீவியாய் போற்றப்படுகிறார். பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்தியது போல், தன்னலமற்ற அந்த ராம தொண்டனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வோம்.

தி.செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிவாலிதாசன் - தமிழ்நாடு,இந்தியா
23-டிச-201418:58:48 IST Report Abuse
கவிவாலிதாசன் தன்னலம் பாராமல், பிறருக்காக சேவை செய்தால் இறைவன் நிச்சயம் காப்பார். இந்த வாழ்க்கையில் வெற்றிபெற இவரை வழிபடுவது மிக மிக அவசியம். இவரது சக்திக்கு ஈடு இணை இல்லை.தன்னலமற்ற இந்த ராம தொண்டனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வோம்.
Rate this:
Cancel
t.chellappa - Madurai,இந்தியா
23-டிச-201415:26:21 IST Report Abuse
t.chellappa பிரசாந்த் தம்பி, அறிவாளியான நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தான். உங்க அம்மாவிடம் கேளுங்க சின்ன வயசுலே உங்களுக்கு கற்பூரம் சுற்றி வச்சிருப்பாங்க இஙகே கண்திருஷ்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கலே. கடவுள் மீதான அன்புக்கு தான் முக்கியத்துவம் தரப்படிருக்கு. ஒருவேவளை உங்களுக்கு கடவுள் மீதே நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் கருத்தை அப்படியே ஒப்புக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
PRASHANTH - tuticorin,இந்தியா
22-டிச-201400:25:23 IST Report Abuse
PRASHANTH அட அறிவாளி, ஒரு மனிதனின் கண் பார்வையால் ஒருவனின் ஆயுள் குறையுமா? அப்படி என்றால் ராஜபக்சே வின் ஆயுளை குறைத்து காட்டு ....நெஞ்சு குமுறுதடா. இது போன்ற முட்டாள்தனமா கருத்துக்கள் இனியும் வேண்டாமே
Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
23-டிச-201408:53:14 IST Report Abuse
Idithangi பெரியாழ்வார் செய்தது நாம் நம் குழந்தைக்கு திருஷ்டி பொட்டு வைப்பது போல. ஆழ்வார்கள் சதா சர்வகாலமும் இறைவனை நினைத்து அவரை குழந்தை ஆக தோழனாக பாவித்து வாழ்ந்தார்கள்....
Rate this:
Vijay-G - Chennai,இந்தியா
23-டிச-201412:03:56 IST Report Abuse
Vijay-Gஉனது காதலியை வர்ணிக்கும் பொது மட்டும் உன் மூளை அடகு வைத்தாயா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X