எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2014
00:00

டிச., 24, எம்ஜிஆர்., நினைவு நாள்

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...
ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.
'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.
இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.
உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.
பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

எஸ்.ஆர்.சாந்தி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L M EMPERUMAL - Visakhapatnam,இந்தியா
26-டிச-201407:30:25 IST Report Abuse
L M EMPERUMAL எம் ஜி ஆர் , பற்றி சிலர் தங்களது அதிருப்தியான கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள் , ஆனாலும் இதை எல்லாவற்றையும் கடந்து இன்னமும் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார் என்றால் , அவரது நல்ல உள்ளமும் , மனித நேயத்துடன் நடந்து கொண்ட காரணங்களும்தான் இன்னமும் அவரை மக்களின் மனதில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது . இதை யாராலும் மறைத்துவிட முடியாது . வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் ? மக்கள் திலகம் போன்ற ஒரு சிலர் மட்டுமே . வாழ்க அவர் புகழ் .
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-டிச-201411:44:02 IST Report Abuse
Matt P எம் ஜி ஆர் நடித்த திரைப்படங்களின் தாக்கம் தான் வயது வேறுபாடின்றி பால் வேறுபாடின்றி மக்களை ஈர்த்து எம் ஜி ஆரை புகழின் உச்சத்துக்கு கொண்டுசென்றது அவரை தமிழ்ந்னாட்டின் முதலமைச்சராகியது என்றால் அது மிகையாகாது...அவர் நடித்த படங்களில் எல்லாம் அவர் ஏழைகளின் நண்பனாக உழைபாளியாக விவசாயியாக மீனவ நண்பனாக உரிமைக்கு குரல் கொடுப்பவனாக வாழ்ந்து காட்டியதால் , படம் பார்ப்பவர்கள் ...அந்த படங்களை பாடமாக எடுத்து கொண்டு அதில் வரும் கதாநாயகனை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டிருகிறார்கள்.ராமாயணம் படிப்பவர்கள் ராமனின் நல்ல வீர தீர செயல்களை பார்த்து , அவரை இறைவனாக வணங்குவது போல. ...ராமாயணம் என்ற உயர்ந்த இலக்கியம் படிக்க தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் .....நல்ல கருத்துகள் கொண்ட நவீன இலக்கியமான எம் ஜி ஆர் படங்கள் பலருக்கு vayaappaaka kitaittathu என்று thyaan ninaikka thontrukirathu. .... .எம் ஜி ஆர் katchiyilirunthu thooki eriyappatu, அவர் puthu katchi aarambitthathu thamizhaka makkalukku yetho ஒரு vithatthil nalanaaka amainthathu...அவர் arasil vinjaana voozhal இல்லை kutumba ஆதிக்கம் இல்லை...அ தி மு க ஆரம்பிக்கபடாவிட்டால் , 6 முறை ஆண்ட ,தி மு க 12 முறை ஆண்டு ...தமிழகம் எவ்வளவு அல்லல்களுக்கு ஆட்பட்டிருக்கும் என்று நினைத்துபாரத்தால் ,,,,,,,,மனம் நெருடுகிறது...,,எம் ஜி ஆர் என்ற மனிதர் சிலருக்கு உண்மை வாழ்க்கையில் அவர் நல்லவராக இல்லையோ என்று தோன்றலாம்...ஆனால் அவர் படத்தை பார்த்து அவர் வரும் பாத்திரங்களை ஏற்று அவரை பூஜிக்கும் manitharkal எல்லோரும் நல்லவர்கள் தான் என்பதில் எனக்கு எந்த santhekamum இல்லை....எம் ஜி ஆர் நடித்த படங்களில் அவர் kutittho புகை பிடித்தோ நடிக்கவில்லை. ..பலர் ரசிகர்கள் ..athanaal அவைகளை செயாமலிருந்திருக்கலாம்.......திரைப்படம் இந்தியாவில் ஒரு valimaiyaana saathanam.......natikan தான் நாட்டை ஆள வேண்டுமா என்று கேட்பவர்கள் .....வேறு துறையில் இருக்கும் நீங்கள் ....உங்கள் ஆளுமையை bayanpatutthi மக்களை கவர செய்து ...நீங்களும் முயற்சி செயலாமே......எம் ஜி ஆர் jayalalitha karunanithy ஆட்சியை விட tharalaame. நல்லாட்சி எம் ஜி ஆர் ...நாட்டின் முதல்வரானதும் ஜெயலலிதா ஆனதும் அவர்களுக்கு வாய்ப்பாகஅமைந்தது காரணமே தவிர ..,தமிழ்நாட்டு மக்கள் ...நடிகனை நாட்டை aalvatharkku விரும்பியதால் அல்ல........vjayakaanth avarkal muthalamaichar narkaaliyai pitippathum elithalla..........
Rate this:
Cancel
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-டிச-201418:17:45 IST Report Abuse
ganesan b(ganesh) MGR இன் வெற்றிக்கு TMS இன் கம்பீரமான பாடல்களும் ஒரு காரணம் என்பதையும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்
Rate this:
M.Vinothkumaral - Namakkal,இந்தியா
24-டிச-201417:25:31 IST Report Abuse
M.Vinothkumaralஇந்த formula மற்ற நடிகர்களுக்கு பொருந்தாமல் போனது ஏனோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X